தூய ஆவியானவர் பாடல் | 1366-என் ஆவியும் தூய ஆவியும் |
என் ஆவியும் தூய ஆவியும் என்னுள்ளே இணைந்துவிட்டால் ஆனந்தம் ஆனந்தமே - 2 (2) ஆனந்தம் என்று சொல்வதா - அதை அருட்பெருக்கு என்றுரைப்பதா (2) இன்ப வனம் என்று கூறவா - அதை இறையாற்றல் என்றழைப்பதா (2) பேரானந்தம் பரமானந்தம் நிறையானந்தம் இறையானந்தம் (2) தீ நாக்கு தூய ஆவியா - அதன் தீப்பிழம்பு எந்தன் ஆவியா (2) தீமைகளைச் சுட்டெரிக்குமே - அதன் தீச்சுடரில் மலர்ச்சி தோன்றுமே (2) பேரானந்தம் பரமானந்தம் நிறையானந்தம் இறையானந்தம் (2) |