தூய ஆவியானவர் பாடல் | 1365-எல்லா வரமும் |
எல்லா வரமும் நிரம்பித் ததும்பும் திவ்ய ஸ்பிரித்து சாந்துவே அடியோர் உள்ளத்தில் எழுந்து வருவீர் இனிய ஸ்நேக தேவனே (2) உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே (2) உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய் நன்மை பயக்கும் ஞானக்கொடைகள் யாவும் அளிப்பாய் பரமனே (2) நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய் ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் (2) தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே |