Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1364-எங்களுக்குள்ளே வாசம்  
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம்போல் நடத்திச் செல்லுமையா 2
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த
ஆவியானவரே 2

எப்படி நான் செபிக்க வேண்டும்
எதற்காக செபிக்க வேண்டும்
கற்றுத்தாரும் ஆவியானவரே - 2
வேத வசனம் புரிந்துகொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே - 2 - ஆவி

கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே - 2
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித்தாரும் ஆவியானவரே - 2 - ஆவி


எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே 2- ஆவி
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்