தூய ஆவியானவர் பாடல் | 1362-ஊற்றுத் தண்ணீரே |
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கி வா (2) ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே - 2 ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் - 2 கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே (2) பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் - 2 தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே - 2 ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே (2) கனி தந்திட நான் செழித்தோங்கிட - 2 கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம்பெற்றிட - 2 இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே (2) ஆத்ம பாரமும் பரிசுத்தமும் - 2 ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே � 2 |