தூய ஆவியானவர் பாடல் | 1362-உன்னத வல்லமை |
உன்னத வல்லமை எமக்கு வேண்டுமே உன்னத தேவனே வல்லமை ஊற்றுமே (2) பரிசுத்த ஆவியின் வல்லமை வேண்டும் பரிசுத்தம் எம்மில் மலர வேண்டும் (2) புத்துயிர் ஊற்றும் ஆவி வேண்டும் புதுப்பிறப்பாக்கும் ஆவி வேண்டும் (2) எம் பலவீனம் நீங்க வேண்டும் உம் பலம் எம்மைத் தாங்க வேண்டும் (2) உம் திருப் பாதம் அமர வேண்டும் வசனங்கள் அனுதினம் தியானிக்க வேண்டும் (2) காத்திருந்து செபிக்க வேண்டும் கழுகு போல் புதுப் பெலன் பெற்றிட வேண்டும் (2) உம் சித்தம் நாங்கள் அறிய வேண்டும் உம் சுவிசேசம் அறிவிக்க வேண்டும் (2) கனிகள் எம்மில் நிரம்ப வேண்டும் வரங்கள் எம்மில் செயலாற்ற வேண்டும் (2) |