Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1361-இயக்கம் அளிக்கும் ஆவியே  
இயக்கம் அளிக்கும் ஆவியே
இயங்க வைக்கும் ஆவியே
இறைவன் அளித்த நல்வாக்கே
இனி எம்மில் எல்லாமே உமதாக்குவாய் (2)
ஆவியே தூய ஆவியே - எம்
தாகம் தினம் தீர்க்கும் அருள் ஊற்றே (2)

உமதாற்றல் இல்லாமல் எம் வாழ்வில்லை
உம் வழித்துணை இல்லாமல் பயணம் இல்லை (2)
உம் தூண்டுதல் இல்லாமல் இறைவேண்டலில்லை
உம் பிரசன்னம் இல்லாமல் நிறைவாழ்வில்லை (2)
ஆவியே தூய ஆவியே - எம்
தாகம் தினம் தீர்க்கும் அருள் ஊற்றே (2)

துணிவிழந்த சீடர்களை நீ நிரப்பினாய்
இறைவாக்கு எடுத்துரைக்கும் மனத்திடம் தந்தாய் (2)
இறை இயேசுவை திருமுழுக்கில் நீ ஆட்கொண்டாய்
எமை முழுதும் அருட்கொடையால் நிதம் ஆட்கொள்வாய் (2)
ஆவியே தூய ஆவியே - எம்
தாகம் தினம் தீர்க்கும் அருள் ஊற்றே (2)
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்