Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1360-இறைவனின் ஆவி நிழலிடவே  
இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே

வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வான் அறிய பறை சாற்றிடவும்


குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் நிலைத்திடவும்
அருள் நிறை காலம் அவனியிலே - இங்கு
வருவதை வாழ்வினில் காட்டிடவும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்