Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1355-ஆவியைத் தாரும் இயேசுவே  
ஆவியைத் தாரும் இயேசுவே - தூய
ஆவியைத்தாரும் இயேசுவே

புதுப்படைப்பாய் நான் மாற
புது மலரெனவே நான் வாழ

எந்தன் தாகத்தைத் தீர்க்க
இறைவா உன் அருள் சுரக்க

பாவக் கறைகளைக் கழுவ
பாவத் தளைகளை அறுக்க

மனத்தின் புண்களை ஆற்ற
மகிழ்ச்சியில் என்னை நிரப்ப

சாத்தானின் சேனையை வெல்ல
உமது புகழை நான் சொல்ல

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்