தூய ஆவியானவர் பாடல் | 1352-ஆவியே தூய ஆவியே |
ஆவியே தூய ஆவியே ஆட்கொள்ள வருவீர் ஆவியே (2) வருவீர் அனலாய் உருமாற்ற வருவீர் துணையாய் வழி நடத்த (2) வரங்கள் கனிகள் பொழிந்திடுவீர் வளமுடன் வாழ வரம் தருவீர் (2) சோதனை அணுகாக் காத்திடுவீர் சோதிக்கும் சாத்தானை வென்றிடவே (2) வல்லமையாலே நிறைத்திடுவீர் சாட்சியாய் வாழ வரம் தருவீர் (2) ஜீவ ஊற்றாய் எழும்பிடுவீர் என் தாகம் முழுவதும் தீர்த்திடுவீர் (2) |