Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தூய ஆவியானவர் பாடல்  1351-ஆவியிலே புதுமை அடைவோம்  
ஆவியிலே புதுமை அடைவோம் - அருள்
ஆழியிலே மூழ்கிக் களிப்போம்
இயேசுவுக்குச் சான்று பகர்வோம் அவர்
சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் (2)

அன்பு என்னும் ஆடையணிவோம் - நல்ல
ஆனந்த அமைதி அடைவோம்
ஆதிசபை வாழ்க்கையினை ஆண்டவன் ஆவியிலே
வீதியெங்கும் கண்டு களிப்போம் - நாம்

வேதனையாம் அலைகள் ஓங்கலாம் - பெரும்
சோதனையாம் புயலும் வீசலாம்
இறைவன் நம்மைக் காக்கின்றார் இன்பமுற அழைக்கின்றார்
நிறை வாழ்வு இன்று அடைவோம் - நாம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்