தூய ஆவியானவர் பாடல் | 1350-அருங்கொடை நாயகரே |
அருங்கொடை நாயகரே - என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே தெய்வீக ஒளியால் தெவிட்டாத மொழியால் என்னை இன்று நிரப்புமையா - உந்தன் சித்தம் போல் நடத்துமையா ஆட்கொள்ள வா என்னை ஆட்கொள்ள வா அனலாய் தணலாய் உருமாற்ற வா (2) அனலாய் தணலாய் உருமாற்ற வா படைப்பினை ஆட்கொண்டு உயிரளித்தீர் தண்ணீரில் அசைவாடி புனிதம் தந்தீர் (2) என்னையும் ஆட்கொள்ள வாருமையா என்னையும் ஆட்கொள்ள வாருமையா ஆட்கொள்ள வா... யோர்தானில் வெண்புறாவாய் இறங்கி வந்தீர் இயேசுவை ஆட்கொண்டு உறுதி தந்தீர் (2) என்னையும் ஆட்கொள்ள வாருமையா என்னையும் ஆட்கொள்ள வாருமையா ஆட்கொள்ள வா... அக்கினியாய் பெந்தகோஸ்தே நாளில் வந்தீர் அன்னையையும் சீடரையும் ஆட்கொண்டீர் - 2 என்னையும் ஆட்கொள்ள வாருமையா என்னையும் ஆட்கொள்ள வாருமையா ஆட்கொள்ள வா... அக்கினியாய் பெந்தகோஸ்து நாளில் வந்தீர் அன்னையையும் சீடரையும் ஆட்கொண்டீர் என்னையும் ஆட்கொள்ள வாருமையா என்னையும் ஆட்கொள்ள வாருமையா ஆட்கொள்ள வா... |