தூய ஆவியானவர் பாடல் | 1347-அக்கினியாம் ஆவியாரே |
அக்கினியாம் ஆவியாரே ஆண்டவரின் திருக்கொடையே எம்மீது இறங்கும் இப்போதே இறங்கும் முற்றும் எம்மை மாற்றிடுமே - 2 பாறையை உடைப்பவரே பாவியை மன்னிப்பவரே பாசத்தை பொழிந்து பரிசுத்தம் ஆக்கி முற்றும் எம்மை மாற்றிடுமே ஊற்றாய் பாய்பவரே உள்ளத்தை நிறைப்பவரே தனிமையைப் போக்கி துணையாய் வந்து முற்றும் எம்மை மாற்றிடுமே எண்ணெய் பூசுவீரே காயங்கள் ஆற்றுவீரே கசப்புகள் நீக்கி இனிமையாய் வந்து முற்றும் எம்மை மாற்றிடுமே |