தூய ஆவியானவர் பாடல் | 1345-ஆதிமுதல் அனைத்தையும் |
ஆதிமுதல் அனைத்தையும் ஆளும் பரமனின் ஆவியே வருக ஆண்டவன் பாருக்கு வாக்களித்திட்ட பரிசுத்த ஆவியே வருக தவறிடும் உலகினில் தாய்த் திருச்சபைதனைத் தவறாமல் காத்திட வருக தேவனின் பிரதிநிதி திருமுறை ஆளத் தவறா வரம்தர வருக பொய்மிகும் போதகம் மலிந்திடும் உலகினைப் பிழை நீக்கிக் காத்திட வருக பரமனின் வார்த்தைக்குப் பிழையாய்ப் பொருள் தரும் பாரினைக் காத்திட வருக புலன்களால் புரியா பரமனின் வார்த்தையை புரிந்திடச் செய்யவே வருக புவியினில் புரியா மறைபொருள் ஏற்றிட அருள் துணை ஈந்திட வருக பாவிகள் எங்களை பரகதி சேர்த்திட பரிசுத்த ஆவியே வருக பரமனின் வீட்டினில் பாரினை இணைத்திட பரிசுத்த ஆவியே வருக |