Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  பஜனைப் பாடல்கள்  

1264

அப்பா நான் தவறு செய்தேன்
அப்பா நான் தவறு செய்தேன்
உன் அன்பை உதறிச் சென்றேன் - நான்
கெட்டலைந்து ஓடி வந்தேன்
என்னைக் கண்பாரும் உந்தன் பிள்ளை நான் - 2


பாடிவரும் பறவைகளும் காடுகளின் மிருகங்களும் - உன்
அன்பில் மகிழ்ந்திருக்க நான் உன்னைப் பிரிந்து சென்றேன் - அப்பா

சுமைகளில் சோர்ந்தோரே என்னிடத்தில் வாருமென்றீர் - அந்த
ஆறுதல் வார்த்தை என்னை உன்னிடத்தில் ஈர்த்ததையா அப்பா

வாழ்வுதரும் வார்த்தையெல்லாம் நீர் என்று அறிந்தபின்னே
வேறெங்கு நான் போவேன் எந்தன் புகலிடம் நீரே அப்பா அப்பா



அப்பா பிதாவே அனைத்தையும் நான்
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்


என் உடலும் உள்ளமும் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் குடும்பம் குழந்தைகள் உறவினரை
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் படிப்பு பட்டங்கள் பதவிகளை
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் வெற்றிகள் தோல்விகள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்

என் கவலைகள் துயரங்கள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்
என் மகிழ்ச்சிகள் இன்பங்கள் அனைத்தையுமே
உம்மிடம் ஒப்படைக்கின்றேன்



1265
அப்பா தந்தையே மனம் வருந்தி நான்
வருகின்ற பொழுதென்னை ஏற்பாயே -2

உம் அன்பை மறந்து நான்
பாவியாய் அலைந்தேன் ஏற்றுக்கொள்ளும் -2
உம் அருளை இழந்து நான்
இருளினில் வாழ்ந்தேன் ஏற்றுக்கொள்ளும் -2

உம் இரக்கம் நினைந்து நான்
திருந்தியே வருகின்றேன் ஏற்றுக்கொள்ளும் -2
உம் அழைப்பை உணர்ந்து நான்
பணிசெய்ய வருகிறேன் ஏற்றுக்கொள்ளும் -2


2

அப்பா தந்தையே மனம் வருந்தி வருகிறேன்
அன்போடு அரவணைத்து ஏற்றிடுவாய் இறைவா


உம் அன்பை மறந்து நான் ஊதாரியாகினேன்
உம் உறவை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன்


உம் வார்த்தை மறந்து நான் ஊதாரியாகினேன்
உம் வழியில் நடந்திட உம்மிடம் வருகிறேன்

உம் இரக்கம் மறந்து நான் ஊதாரியாகினேன்
உம் கருணை உணர்ந்து நான் உம்மிடம் வருகிறேன்




1226

அருள் தா இறைவா உம்மை - நான்
என்றும் புகழ (2)
அருள் தா இறைவா உம்மை - நான்
என்றும் துதிக்க (2)
அருள் தா இறைவா உம்மில் - நான்
என்றும் மகிழ (2)
அருள் தா இறைவா உம்மில் - நான்
என்றும் வாழ (2)



அருள் தா இறைவா உம்மில் - நான்
என்றும் வளர (2)
அருள் தா இறைவா உம்மை - நான்
என்றும் நினைக்க (2)
அருள் தா இறைவா உம்மில் - உறவை
நான் வளர்க்க (2)
அருள் தா இறைவா உம்மில் - நான்
என்றும் மலர (2)





  அருட் பெரும் சுடரே தனிப்பெரும் கருணையே
  இயேசுவே நீ வருக


- மண்ணிருள் நீக்கிட விண்ணொளி வீசிட - அருட் பெரும் சுடரே தனிப்பெரும்
  கருணையே இயேசுவே நீ வருக (3)

- பகைமையை ஒழித்திட பாசத்தை வளர்த்திட - அருட் பெரும் சுடரே தனிப்பெரும்
   கருணையே இயேசுவே நீ வருக (3)

- வறுமையை ஒழித்திட வளமையை வீசிட - அருட் பெரும் சுடரே தனிப்பெரும்
   கருணையே இயேசுவே நீ வருக (3)

- தீமையை நீக்கிட நன்மையை வளர்த்திட - அருட் பெரும் சுடரே தனிப்பெரும்
   கருணையே இயேசுவே நீ வருக (3)



அன்பின் வடிவே உயிரின் உருவே
அன்பின் வடிவே உயிரின் உருவே
என்னைத் தேடும் இதய தெய்வம்
ஆராதனை ஆராதனை


உயிரைக் கொடுக்கும் - அன்பு
உறவில் மலரும் - அன்பு
உள்ளம் கவர்ந்த - அன்பு
உயிரில் கலக்கும் - அன்பு
உயர்ந்து நிற்கும் - அன்பு
உலகம் ஏங்கும் - அன்பு
உண்மை பயக்கும் - அன்பு
அன்பு செய்யும் - அன்பு

எங்கும் நிறையும் - அன்பு
என்னைக் காணும் - அன்பு
எதையும் செய்யும் - அன்பு
எனக்காய் ஏங்கும் - அன்பு
என்னைக் காக்கும் - அன்பு
என்னில் வாழும் - அன்பு
என்றும் வாழும் - அன்பு
அன்பு செய்யும் - அன்பு





அன்பே இறைவா போற்றி..... அருளே அகமே போற்றி....
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி (2)
போற்றி போற்றி போற்றி (2)


தந்தையின் விருப்பம் உணவென்றாய்
மந்மையின் வாயின்  உணவானாய்
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி (2)
உண்மையும் ஒளியும் நீயாவாய்
உயிர்ப்பும் உயிரும் நீயாவாய்
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி

வாழ்வு தர வந்த வார்த்தையே
வானம் பொழிந்த மன்னாவே
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி
தாகம் தணிக்கும் நீறூற்றே
தரணியில் வாழ வந்தாயே
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி

பாவம் போக்க பலியானாய்
பரமனைத் தேற்றும் கதியானாய்
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி
ஆவியைத் தந்தாய் அணிகலனாய்
ஆறுதலானாய் அகமளித்தாய்
அன்பே இறைவா போற்றி போற்றி அருளே அறமே போற்றி போற்றி






அனைத்தையும் படைத்த தந்தையின் அன்பே
நமக்குத்துணை நமக்குத்துணை -2
அன்பும் உண்மையும் ஆகிய அவரே - நமக்குத்துணை.....
கண்மணிபோல் எமைக் காக்கும் அவரே - நமக்குத்துணை.....
கலங்காதே என்று தேற்றும் அவரே - நமக்குத்துணை.....
அவர் வாழுகின்ற தந்தை நிறை வாஞ்சையான நம் தந்தை 2


யாவும் காக்கும் மாண்புயர் தெய்வம் - நமக்குத்துணை.....
காலங்கள் தோறும் வாழ்ந்திடும் செல்வம் - நமக்குத்துணை.....
வாழ்வினைக் காட்டும் வழியும் அவரே- நமக்குத்துணை.....
வறுமையைப் போக்கும் வளமையும் அவரே- நமக்குத்துணை.....
அவர் வாழுகின்ற தந்தை நிறை வாஞ்சையான நம் தந்தை 2

நீதியைக் காக்கும் நேரிய தெய்வம் - நமக்குத்துணை....
மேதினி யாவும் மீட்கின்ற தெய்வம் - நமக்குத்துணை.....
ஆயிரம் வழிகளில் அருகினில் இருப்பார்- நமக்குத்துணை.....
அல்லல்கள் நீக்கி அரவணைத்திடுவார்- நமக்குத்துணை.....
அவர் வாழுகின்ற தந்தைநிறை வாஞ்சையான நம் தந்தை 2


1267

அழைத்துச் செல்வாயே அன்பின் அரசே (2)

- பிழைகள் பொறுத்தெமைப் பெருவாழ்வினுக்கே
- பொய்மையில் நின்றோம் மெய்மையை நோக்கி
- காரிருள் நின்றோம் பேரொளி நோக்கி
- சாவினில் நின்றோம் வாழ்வினை நோக்கி




1268
அன்பெனக்கு இல்லையேல் நான் ஒன்றுமில்லையே


என்னென்னவோ திறமைகள் எனக்கிருந்தும்...
எதுவரைக் கல்வியை நான் அறிந்தும்...

சொந்தங்கள் பந்தங்கள் சூழ்ந்திருந்தும்...
செல்வங்கள் நிறையவே சேர்ந்திருந்தும்...

அனைத்தையும் நான் இங்கு அறிந்திருந்தும்...
ஆற்றல்கள் அனைத்தும் எனக்கிருந்தும்...

விசுவாசத்தில் நான் நிலைத்திருந்தும்...
ஆண்டவரை நான் அறிந்திருந்தும்...





ஆவியின் இறைவா சரணம் சரணம்
ஆற்றலின் ஊற்றே சரணம் சரணம்
அக்கினி பிளம்பே சரணம் சரணம்
அருளின் வடிவே சரணம் சரணம்


உலகின் முதலே சரணம் சரணம்
உயிர்ப்பின் உயிரே சரணம் சரணம்
விண்ணக விளக்கே சரணம் சரணம்
வேட்கை தணிப்பாய் சரணம் சரணம்

தேவனைப் போற்றுவாய் சரணம் சரணம்
பேரொலியோனே சரணம் சரணம்
நீதியின் காவலரே சரணம் சரணம்
நித்திய பொருளே சரணம் சரணம்

சக்தியின் உருவே சரணம் சரணம்
சமத்துவம் தருவாய் சரணம் சரணம்
அறத்தின் நாயகனே சரணம் சரணம்
உறவை வளர்ப்பாய் சரணம் சரணம்




1269
ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா - 2
புதுவாழ்வெனக்குள் பொழிந்தருளும் - 4


உயிரளிப்பவரே நிறைவளிப்பவரே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

சாந்தி தருபவா சக்தி தருபவா - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4




ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் (2)


புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைத்
தாங்கிடும் நங்கூரமே (2)
தாங்கிடும் நங்கூரமே தினம் தாங்கிடும் நங்கூரமே

எதிர்க்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே (2)
எனைக் காக்கும் புகலிடமே - தினம் எனைக் காக்கும் புகலிடமே

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே (2)
நீங்காத பேரின்பமே - என்னைவிட்டு நீங்காத பேரின்பமே

இருள் நீக்கும் சுடரே என் இயேசுராஜா என் வாழ்வின் ஆனந்தமே (2)
என் வாழ்வின் ஆனந்தமே - ராஜா என் வாழ்வின் ஆனந்தமே

மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோசமே (2)
மாபெரும் சந்தோசமே - நாதா மாபெரும் சந்தோசமே

காயங்கள் ஆற்றி கண்ணீர் துடைக்கும் நல்ல சமாரியனே
நல்ல சமாரியனே - நல்ல சமாரியனே





ஆராதனை ஆராதனை - 4
வாரும் இயேசு தேவா வரம் தாரும் இயேசு நாதா - 4
1. நீயே எனக்கு உயிர் தந்தாய் என் உயிரில் நிலைத்திட வா (5)

2. நீயே எனக்கு ஆற்றல் தந்தாய் என் ஆற்றலை உணர்த்திட வா (5)

3. நீயே எனக்கு மகிழ்ச்சி தந்தாய் என் மகிழ்ச்சியை வளர்த்திட வா(5)






ஆராதனை ஆராதனை மூவொரு இறைவா




ஆராதனை ஆராதனை
வாரும் இயேசு தேவா (2)






ஆராதிப்போம் நாம் எல்லோரும் ஆராதிப்போமே
மூவொரு இறைவனை ஆராதிப்போமே
ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆண்டவராம் இயேசுவையே ஆராதிக்கின்றோம்


ஆராதிக்கும் இடங்களிளெல்லாம் இறைவன் இருக்கின்றார்
ஆராதிக்கும் மனிதரிலெல்லாம் செயல்படுகின்றார்
விண்ணக இன்பம் மண்ணில் தான் ஆராதிப்போமே
மண்ணை விண்ணாய் மாற்றிய பிறகும் ஆராதிப்போமே

பாவங்கள் நீங்க இயேசுவை தினமும் ஆராதிப்போமே
சாத்தானை வெல்ல மீட்பரை தினமும் ஆராதிப்போமே
சாபங்கள் நீங்க இயேசுவை தினமும் ஆராதிப்போமே
சாத்தானை வெல்ல மீட்பரை தினமும் ஆராதிப்போமே
நோய்கள் அகல இறைபுகழ் பாடி ஆராதிப்போமே
இறைவனின் அரசு வழங்கிட இணைந்து ஆராதிப்போமே




இதுவரையில் நடந்ததெல்லாம்
இது வரையில் நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
என் தேவா கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்


அப்பா உமக்கு நன்றி - என் தேவா உமக்கு நன்றி

நோய் நொடியால் அவதியுற்று கதறினேன் ஐயா
மருத்துவராய் உடனிருந்து தேற்றினீர் ஐயா

எண்ணமெங்கும் தேவையோடு வேண்டினேன் ஐயா
என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்தீர் ஐயா

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பாவங்களை களைந்திடவே வரம் தந்தீரே

மனம் வெதும்பி துயரத்தோடு அழுதேன் ஐயா
சுகம் தந்து நலம்தந்து தாங்கினீர் ஐயா

திக்கற்று திசைமாறி தொலைந்திடும் போது
தேடி வந்து கரம் பிடித்து துணை செய்தீரே

ஒதுக்கப்பட்ட கல்லாக கிடந்தேன் ஐயா
மூலைக் கல்லாய் முன்னின்று நடத்தினீர் ஐயா

அலைகடலில் படகெனவே தவித்திடும் போது
துடுப்பெனவே துணையாக வந்தீர் ஐயா

பிள்ளை வரம் இல்லையென்று கேவலமானேன்
தாய் வரமே தந்தெனக்கு தாயாகினாய்

கெடுங்குடியால் கடன் சுமையால் நொந்தேன் ஐயா
படும் பாட்டை நீக்கி நீரும் நிம்மதி தந்தீர்




1270
இந்த நாளினைத் தந்த இறைவா
உந்தன் தாளினை நான் தொழுதேன் (2)


நலம் வளம் அருள் செய்தவா - உந்தன்
மலர்ப்பதம் சரணடைந்தேன் (2)
நன்றி நன்றி தந்தையே நன்றி - 2
- நன்றி நன்றி இயேசுவே நன்றி - 2
- நன்றி நன்றி ஆவியே நன்றி - 2




1271
இயேசு இயேசு கிறிஸ்துவே - 2
இயேசு எங்கள் அன்பனே - 2 (5)


இயேசு எங்கள் இறைவனே...
இயேசு எங்கள் தந்தையே...
இயேசு எங்கள் நண்பரே...
இயேசு எங்கள் மீட்பரே...
இயேசு எங்கள் தெய்வமே...




1272
இயேசு என் தெய்வம் இயேசு என் செல்வம்
இயேசு என் எல்லாம்
இயேசு என் நண்பன் இயேசு என் அன்பன்
இயேசு என் தலைவன் (2)


மலைபோல் துன்பங்கள் எனைச் சூழ்ந்தாலும்
பனிபோல் மறையச் செய்வார் (2)

தவறுகள் செய்தாலும் அன்புடன் என்னைத்
தழுவிடும் தந்தையவர் (2)




1273
இயேசு வாராய் நீ வாராய்
எந்தன் வாழ்வினிலே (2)
வேகமாய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே - 2
வேகமாய் இறங்கி வா எந்தன் வாழ்வினிலே


- எந்தன் வியாதியிலே...
- எந்தன் ஆன்மாவில்...
- எந்தன் நெஞ்சினிலே...





1274
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே - 3


காலமெல்லம் உனைக் காண்பதற்கு
காரிருள் நீக்கி அருள்வாயே - 3

யேசு உன் பொன்மொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதி அருள்வாயே - 3





இயேசுவே என்னை மன்னியும்
இயேசுவே என்னை மன்னியும்

பாவம் செய்தேன் என்யேசுவே
உம்மை நோகச் செய்தேன் என்யேசுவே

பாவம் செய்தேன் என்யேசுவே
அநியாயம் செய்தேன் என்னை மன்னியும்

தீமை செய்தேன் என்யேசுவே
பொறாமை கொண்டேன் என்யேசுவே

களவு செய்தேன் என்யேசுவே
வாழ்வில் பிளவு கண்டேன் என்யேசுவே

வசை மொழிந்தேன் என்யேசுவே
வாழ்வில் இசை மறந்தேன் என்யேசுவே




இயேசு இயேசு இயேசுவே எம் வாழ்வை மாற்றுவீர் (2)
இயேசு இயேசு இயேசுவே உம் ஆவியைத் தருவீர் (2)
இயேசு இயேசு இயேசுவே எம் நோயைப் போக்குவீர் (2)
இயேசு இயேசு இயேசுவே உம் ஆவியைத் தருவீர்


இயேசு இயேசு இயேசுவே உம் அமைதியைத் தருவீர் (2)
இயேசு இயேசு இயேசுவே உம் ஆவியைத் தருவீர் (2)
இயேசு இயேசு இயேசுவே என் மனதை மாற்றுவீர் (2)
இயேசு இயேசு இயேசுவே உம் ஆவியைத் தருவீர் (3)




1275
இயேசுவே இயேசுவே இயேசுவே

இயேசுவே இயேசுவே இயேசு ஈசனே
இயேசுவே இயேசுவே இயேசுவே சரணம்
இயேசுவே இயேசுவே இயேசு ஈசனே
இயேசுவே சரணம் ஈசனே சரணம்
இயேசுவே இயேசுவே இயேசு ஈசனே


இயேசுவே இயேசுவே இயேசுவே

1276
இயேசுவே என் உயிரே என் அருகே நீ இருப்பாய் (6) 
என் அருகே நீ இருப்பாய் (2)

இயேசுவே என் அன்பே என் இதயம் நீ இருப்பாய் (6) 
என் இதயம் நீ இருப்பாய் (2)

இயேசுவே என் வாழ்வே என் துணையாய் நீ வருவாய் (6)
என் துணையாய் நீ வருவாய் (2)





1276
இறைவா உம் தரிசனம் தா
உன் திருமுகம் காட்டிட வா (4)
தூய பிரபு வாழ்வினைத் தாராய்
எனக்கு நீ அருள் செய்வாய் (2)


தூய பிரபு முக்தியைத் தாராய்
எனக்கு நீ அருள் செய்வாய் (2)

தூய பிரபு சாந்தியைத் தாராய்
எனக்கு நீ அருள் செய்வாய் (2)




1278
இனியொரு பொழுதும் உனைப் பிரியாத
உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்


- கனவிலும் நனவிலும் சொல்லிலும் செயலிலும் (3)

- உயர்விலும் தாழ்விலும் மகிழ்விலும் துயரிலும் (3)

- வாழ்கின்ற வரையிலும் வாழ்கின்ற நிலையிலும் (3)


- உயர்விலும் தாழ்விலும் வாழ்விலும் வீழ்விலும்
(3)

- மகிழ்விலும் துயரிலும் வாழ்வின் எந்நிலையிலும்
(3)

- ஒளியிலும் இருளிலும் வாழ்வின் எந்நிலையிலும்
(3)




1279
இறைவா உன் முகம் காண்பதற்கு
இந்த ஏழையின் உள்ளம் தவிக்கின்றது (2)
நீரே என் அபயம் நீரே என் சரணம் - 2
நீரே என் முதலும் நீரே என் முடிவும் - 2


கண்களின் முன்னே வரவேண்டும் - உன்
பார்வையில் நானே விழவேண்டும் (2)
அழகிய உன்பதம் தொட வேண்டும் - நான்
ஆயிரம் வரங்கள் பெறவேண்டும் (2)

மனதினில் விளையும் பயமெல்லாம் - ஒரு
வார்த்தையில் போக்கிடும் தெய்வமே (2)
தொல்லைகள் என்னைத் தொடும்வேளை - என்
தோழனாய் இருப்பாய் தெய்வமே (2)

இறைவா உன் முகம் காண்பதற்கு
இந்த ஏழையின் உள்ளம் தவிக்கின்றது (2)
நீரே என் வளமும் நீரே என் வாழ்வும் - 2
நீரே என் துணையும் நீரே என் மீட்பும் - 2




1280
இறைவா உம் வார்த்தையிலே வாழ்ந்திட வந்தோம்

- உயிருள்ள வார்த்தைக்காக ஏங்கியே நின்றோம்
- அன்பு மகிழ்ச்சி அமைதியையே பெற்றிட வந்தோம்
- ஆறுதலை வார்த்தையிலே அடைந்திட வந்தோம்
- எளிய மனம் கொண்டவராய் மாறிட வந்தோம்
- சாந்தமுள்ள உளத்தினராய் வாழ்ந்திட வந்தோம்
- மீட்பளிக்கும் வார்த்தையையே பருகிட வந்தோம்
- நீதியினால் பசி தாகம் கொண்டிட வந்தோம்
- சமாதானத் தூதர்களாய் சென்றிட வந்தோம்
- பிறரன்புச் சேவையிலே மகிழ்ந்திட வந்தோம்
- இறையன்பில் இணைந்திடவே கூடியே வந்தோம்





இறைவா உன்னிடம் சரணடைந்தேன்
வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன் (2)
சரணம் சரணம் இறைவா சரணம் (10)
இறைவா உன்னிடம் சரணடைந்தேன்
வாழ்வின் முதல்வனே சரணடைந்தேன்(2)


இயேசுவே உன்னிடம் சரணடைந்தேன்
வாழ்வின் முழுமையே சரணடைந்தேன் (2)
சரணம் சரணம் இயேசுவே சரணம் (10)
இயேசுவே உன்னிடம் சரணடைந்தேன்
வாழ்வின் முழுமையே சரணடைந்தேன் (2)

ஆவியே உன்னிடம் சரணடைந்தேன்
வாழ்வின் தலைவனே சரணடைந்தேன் (2)
சரணம் சரணம் ஆவியே சரணம் (10)
ஆவியே உன்னிடம் சரணடைந்தேன்
வாழ்வின் தலைவனே சரணடைந்தேன் (2)

மூவொரு இறைவா சரணம் ..........



இதயம் தந்தேன் - எனை
ஏற்பாய் இறைவா - எந்தன்
வாழ்வில் புது உதயம் - நீ
தருவாய் தலைவா

இதயம் தந்தோம் - எம்மை
ஏற்பாய் இறைவா - எங்கள்
வாழ்வில் புது உதயம் - நீ
தருவாய் தலைவா

படைப்பினை எனக்கு அளித்தாய்
சரணம் சரணம்
படைப்பினால் உயர்ந்ததை தந்தேன்
சரணம் சரணம் (2)

உள்ளத்தில் நீ ஊக்கம் நீ தந்தாய்
சரணம் சரணம்
ஊக்கத்தால் உழைத்ததை தந்தேன்
சரணம் சரணம் (2)

ஒளியாக வாழ்ந்திடச் செய்தாய்
சரணம் சரணம்
ஒளியே என் வாழ்வினைத் தந்தேன்
சரணம் சரணம் (2)





இயேசுவின் இருதயமே வாழ்வு தாருமே (2)
வாழ்விழந்து வதங்கி நின்றேன் வாழ்வாகுமே (2)
வாழ்வாகுமே வாழ்வாகுமே

இயேசுவின் இருதயமே பார்வை தாருமே (2)
பார்வை இழந்து நம்மை மறந்து பார்வையாகுமே (2)
பார்வையாகுமே பார்வையாகுமே


இயேசுவின் இருதயமே பாவம் போக்குமே (2)
பாவம் செய்து பகைமை கொண்டேன் மன்னித்தருளுமே (2)
மன்னித்தருளுமே மன்னித்தருளுமே

இயேசுவின் இருதயமே நோயை நீக்குமே (2)
நோய்கள் தாக்கி வருந்தும் என்னை குணப்படுத்துமே (2)
குணப்படுத்துமே குணப்படுத்துமே

இயேசுவின் இருதயமே சுமையைத் தாங்குமே (2)
சுமைகள் என்னை வாட்டும் நேரம் சுகம் தாருமே (2)
சுகம் தாருமே சுகம் தாருமே

இயேசுவின் இருதயமே சுத்தம் செய்யுமே (2)
சுத்தமில்லா உள்ளத்தை உன் இரத்தம் கழுவுமே (2)
இரத்தம் கழுவுமே இரத்தம் கழுவுமே

இயேசுவின் இருதயமே மீட்பு தாருமே (2)
மீட்பர் உந்தன் விடுதலை என் வாழ்வை மாற்றுமே (2)
வாழ்வை மாற்றுமே வாழ்வை மாற்றுமே

இயேசுவின் இருதயமே இரக்கம் வையுமே (2)
இரக்கம் கொண்டு மன்னித்தென்னை மனிதனாக்குமே (2)
மனிதனாக்குமே மனிதனாக்குமே

இயேசுவின் இருதயமே வாழ்வு தாருமே
இயேசுவின் இருதயமே பார்வை தாருமே
இயேசுவின் இருதயமே பாவம் போக்குமே
இயேசுவின் இருதயமே நோயை நீக்குமே
இயேசுவின் இருதயமே சுமையைத் தாங்குமே
இயேசுவின் இருதயமே சுத்தம் செய்யுமே
இயேசுவின் இருதயமே மீட்பு தாருமே
இயேசுவின் இருதயமே இரக்கம் வையுமே
இரக்கம் வையுமே  இரக்கம் வையுமே  இரக்கம் வையுமே










1282
உன் பேரைப் பாடாத நாவொன்று எனக்கு
இருந்தென்ன பயோ ஏழிசையே (2)
உன் வாழ்வைச் சொல்லாத இதழொன்று எனக்கு
இருந்தென்ன பலனோ தேன்மொழியே (2)


வைகறைப் பொழுதில் கூவிடும் குயிலுடன்
கலந்து நான் உன்னைப் பாடுகிறேன் (2)
கடற்கரை மணலில் கவிதைகள் எழுதிடும்
நுரையுடன் நான் உன்னைப் போற்றுகிறேன் (2)

மலைகளின் விரிப்பில் புறப்படும் தென்றலின்
இனிமையில் கலந்துன்னைத் தேடுகிறேன் (2)
மலர்களின் முகத்தில் வெளிப்படும் சிரிப்புடன்
கலந்து நான் உன்னை ஏத்துகிறேன் (2)

அருவியின் ஒலியில் எழுந்திடும் மொழியுடன்
இணைந்து நான் உன்னை நாடுகிறேன் (2)
குழந்தையின் மழலை குவித்திடும் இனிப்பில்
மகிழ்ந்துமே நான் உன்னை வாழ்த்துகிறேன் (2)




1283
உன்னருகில் அமர்ந்திடவே ஏங்குகிறேன்
உயிராற்றல் பெற்றிடவே வேண்டுகிறேன் (2)

நம்பிக்கை தீபமாய் என்னில் ஒளிர்ந்திடுவாய் - 2
நலம்பெற எனக்கு புத்தொளி ஊட்டிடுவாய் - 2


வாழ்வின் சுவையே என்னுள் வந்திடுவாய் - 2
வார்த்தையை வாழ்வாக்கி என்னை மாற்றிடுவாய் - 2

அன்பின் சாட்சியாய் என்னை வாழவைப்பாய் - 2
அருளின் ஊற்றினால் என்னை நிரப்பிடுவாய் - 2

மண்ணில் மனித மாண்பினை வளர்த்திடுவாய் - 2
மாண்புரு உலகம் படைத்திட அருள் தருவாய் - 2




1284
உன்னைத் தேடி வந்தேன் சந்நிதியில் நின்றேன்
உனக்கு நான் பிள்ளையல்லவா (4)


பள்ளம் நோக்கிப் பாய்ந்திடும் நீரைப் போல - 2

நீரைத் தேடி ஓடிவரும் மானைப் போல - 2

கதிரவன் நோக்கித் தேடும் கொடிபோல - 2

நீருக்காக ஏங்கிடும் நிலம் போல - 2

அன்பை நோக்கித் தேடிவரும் நண்பரைப் போல - 2

தாயைப் பார்த்து தாவி வரும் பிள்ளை போல - 2



உம்மைத் தொழுவோம் இறைவா - எம்
உள்ளம் எழுந்து ஆள்வாய் - 2

ஆற்றலால் வெண் அப்பம் மறைந்தாய்
ஆற்றலோடு வாழ எழுந்தாய்

கருணை முகமே கனிந்த மொழியே
உருகி உருகி உம்முன் பணிந்தோம்

நன்மை உருவே நாங்கள் பிறர்க்கு
நன்மை செய்யும் பாதை தந்தாய்

வலிமை இல்லை நலமும் இல்லை
எளியேர் எம்மை நம்பி அழைத்தாய்




1286
உன்னோடு இருக்க வேண்டும் என் சுவாமி
உன்னைப் போல் மாறவேண்டும் (2)
இரவும் பகலும் விழித்திருந்து - உன்
சந்நிதி நானே தொழவேண்டும் (2)
நானுந்தன் கண்ணில் படவேண்டும்
நானுந்தன் அருளைப் பெற வேண்டும்
ஜெய் ஜெய் இயேசு ராஜா - 4


இவ்வாழ்வின் பெருமயெல்லாம் - மண்
தூசியாய் மாறவேண்டும் (2)
உன் வார்த்தை ஒளியில் நான் நடந்து
உனக்காக வாழவேண்டும் - உன்
சாட்சியாய் மாறவேண்டும் (2)
ஜெய் ஜெய் இயேசு ராஜா - 4

நசிந்து போகும் ஆன்மத்திற்காய்
கண்ணீருடன் நான் தொழவேண்டும் (2)
ஒவ்வொரு நாளும் மன்றாடும்
மேய்ப்பனாய் நானே மாறவேண்டும்
உந்தன் அரசு வரவேண்டும் (2)
ஜெய் ஜெய் இயேசு ராஜா - 4




உறவாகி உயிராகி வாழ்வாகி என்றும்
உனைப்போல் எனைக் காக்கும்

என் அன்பு இறைவா சரணம் சரணம்

உயிருக்கு ஒளியே சரணம்
வாழ்விக்கும் உயிரே சரணம்
பாழ் மணல் உணவே சரணம்
வழிகாட்டும் விளக்கே சரணம்

நாணத்தின் உயிரே சரணம்
மாறாத அன்பே சரணம்
உண்மையின் வழியே சரணம்
உன் பாதம் பணிந்தேன் சரணம்
சரணம் தேவா சரணம்

உருவாக்கி உயிர்தந்து வழிகாட்டும் இறைவா
ஒருபோதும் பிரியாமல் எனைக்காக்கும் தலைவா சரணம்
உனையென்றும் மறவாத மனம் வேண்டும் நாதா சரணம்
உன்னோடு உறவாட ஓடோடி வந்தேன் சரணம்
சரணம் சரணம் தேவா சரணம்




என் பகைவருக்கும் எனக்கும்
பாலம் ஒன்று அமைப்பீரே
இயேசுவே இயேசுவே - 2

அந்தப் பாலத்தில் நான் நடக்க
பலம் தாரும் என் இயேசுவே - 2

என் பகைவரை நான் மன்னிக்க
வரம் தாரும் என் இயேசுவே - 2

என் பகைவரை ஏற்றுக்கொள்ள
மனம் தாரும் என் இயேசுவே - 2

என் பகைவரை அன்பு செய்ய
அன்பைத் தாரும் என் இயேசுவே




என் பிழை பொறுத்தருளும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்
இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும் (3)

செந்நீர் வியர்வை சொரிந்தவரே
என் பிழை பொறுத்தருளும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்
இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்  (3)


புண்படக் கசையால் துடித்தவரே
என் பிழை பொறுத்தருளும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்
இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்  (3)

முள்முடி சூடிய மன்னவரே
என் பிழை பொறுத்தருளும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்
இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்  (3)

துன்பச் சிலுவை சுமந்தவரே
என் பிழை பொறுத்தருளும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்
இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும் (3)

தன்னுயிர் தியாகம் புரிந்தவரே 
என் பிழை பொறுத்தருளும் இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும்
இயேசுவே உம் இரத்தத்தால் கழுவிவிடும் (3)




என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய் (2)

செந்நீர் வியர்வை சொரிந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
செந்நீர் வியர்வை சொரிந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
செந்நீர் வியர்வை சொரிந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
செந்நீர் வியர்வை சொரிந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்
செந்நீர் வியர்வை சொரிந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்

புண்பட கசையால் துடித்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்

முள்முடி சூடிய மன்னவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்

துன்பச் சிலுவை சுமந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்

தன்னுயிர் தியாகம் புரிந்தவனே
என் பிழையெல்லாம் பொறுத்தருள்வாய்





1289
எந்தன் இயேசுவே என் இதய தெய்வமே
எந்நாளும் உன் பாதம் தரிசனம் (2)

உன்னிதயம் போல் எனக்கும் ஓர் இதயம் வேண்டும்
உன்னுணர்வு போல் எனக்கும் உள்ளுணர்வு வேண்டும்


உன் விழியின் பார்வையினை என் விழியில் தாரும்
உன் மொழியின் ஆற்றலினை என் மொழியில் சேரும்

அன்பர் பணி செய்வதற்கு அழைத்திட வேண்டும்
உன் வழியில் செல்வதற்கு உன்னருளே போதும்

ஏழையரின் தெருக்களிலே இறங்கிட வேண்டும்
என்னுயிர் உடமையெல்லாம் பகிர்ந்திட வேண்டும்


1290
எந்தையே இறைவா திருவடி சரணம்
இயேசுவே ஆண்டவா திருவடி சரணம்
தூயநல் ஆவியே திருவடி சரணம்
மூவொரு இறைவா திருவடி சரணம்


 


எல்லா காலத்திலும் எல்லா வேளையிலும்
(இறைவா உம்மையே புகழ்வேன் - 2) (2)

ஆதியும் நீயே அந்தமும் நீயே ஜோதியும் நீயே - 2
அன்பின் இருப்பிடம் நீயே - எல்லா...


தாயும் நீயே தந்தையும் நீயே தலைவனும் நீயே - 2
தகைமையின் உறைவிடம் நீயே - எல்லா...

அன்பனும் நீயே நண்பனும் நீயே அனைத்தும் நீயே - 2
எந்தன் பாக்கியமும் நீயே

ஒளியும் நீயே வழியும் நீயே உண்மையும் நீயே - 2
எந்தன் பாக்கியமும் நீயே

  


1291
என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுமே
எந்நாளும் மீட்பரையே நினைந்து வாழ்த்துமே (2)
வாழ்த்திடுவேன் உன்னை வணங்கிடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2


எனக்குத் தந்தாய் தேவா உன் வாழ்வினை - 2
பலகோடி நன்றி சொல்வேன் என் வாழ்விலே - 2
வாழ்த்திடுவேன் உன்னை வணங்கிடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2

தேர்ந்தெடுத்தாய் என்னை உன் தாசனாய் - 2
எப்படி நான் நன்றி சொல்வேன் என் வாழ்விலே - 2
வாழ்த்திடுவேன் உன்னை வணங்கிடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2

 
1292
எல்லாமாய் இருக்கின்ற இறைவா நீ வேண்டும்
- எல்லார்க்கும் துணையாகும் வரம் ஈயவேண்டும் (7)
- மெய்யான வழி சென்று மகிழ்ந்தாட வேண்டும்
- எந்நாளும் உன் நாமம் நான் பாட வேண்டும்




  

என் மீது இரக்கம் வையும் - என்
மன்றாட்டுக்குச் செவிசாயும்

நான் செய்த பாவம் சுமையாய் உள்ளது
பாவத்தைக் கழுவி தூய்மையாக்கும் (2)

தூயதோர் உள்ளம் என்னிலே தாரும்
குருதியின் ஆவியை அனுப்பி வையும் (2)

உந்தன் சந்நிதி தேடி வந்தேன் - உன்
திரு முகத்தைக் காட்டுமையா (2)

உந்தன் அருகினில் அமர்ந்திட வந்தேன்
தயவுடன் என்னோடு பேசுமையா (2)





 
1293
என் ஆண்டவனே என் ஆனந்தமே (2)
என் ஆண்டவனே என் ஆனந்தமே (2)
என் ஆண்டவனே என் ஆனந்தமே (2)
என் ஆண்டவனே என் ஆனந்தமே (2)
என் ஆண்டவனே என் ஆனந்தமே (2)
என் ஆண்டவனே என் ஆனந்தமே
(2)




1294
என் இதயம் உன் ஆலயமே
என்னில் குடிகொள்ள வா ஓ தேவா
என்னில் உயிரூட்டவா (2)
சரணம் தேவா சரணம் தேவா - 4


பாவமகற்றி உன் குடிலாக
என்னை மாற்றுமைய்யா (2)
உன் உருவம் என் இதயத்திலே - 2
நிரந்தரம் பதிக்குமையா ஓ தேவா
நிரந்தரம் பதிக்குமையா (2)

நீருக்காக ஏங்கும் என்
நிலத்தைப் பாருமைய்யா (2)
வாழ்வு தரும் உம் நீரளித்து - 2
வாழ்வினைச் செழிக்க வைப்பீர் ஓ தேவா
வாழ்வினைச் செழிக்க வைப்பீர் (2)


1296
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் - 2
எந்நாளும் உன் அன்பில் நான் வாழவேண்டும் - 2 (2)


என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் - 2
எந்நாளும் உன் புகழ் நான் பாடவேண்டும் - 2 (2)

என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் - 2
இல்லாத குறையெல்லாம் நான் தீர்க்கவேண்டும் - 2 (2)

என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் - 2
சமதர்ம சமுதாயம் நான் காணவேண்டும் - 2 (2)




1297
என் விழியே இயேசுவை நீ பாரு 2
என் நாவே இயேசுவை நீ பாடு 2


என் சிரசே இயேசுவை நீ வணங்கு 2
என் நெஞ்சே இயேசுவிடம் உனை வழங்கு 2

என் கரமே இயேசுவின் மொழி எழுது 2
என் காதே இயேசுவின் மொழி கேளு 2

என் காலே இயேசுவின் வழி சொல்லு -2
என் உயிரே இயேசுவின் பதம் சேரு 2





1298
என்னுயிரே இறைவா - 2
உன் திருவடி சரணம் - 2
உன் பதம் அமர்ந்து உன் முகம் காண
என்ன தவம் செய்தேன் - நான்
என்ன தவம் செய்தேன் (2) என் உயிரே...




1299
எண்ணெய் இல்லா தீபம் போல் - 2
அணைந்து போகுதே என் ஆன்மா - 2 (2)
ஆசை என்னும் காற்றிலே
பாவம் என்னும் புயலாலே (2)
அணைந்து போகுதே என் தீபம்
தள்ளாடிப் போகுதே என் ஆன்மா


என் வீட்டு தீபம் நீர்தானென்று
இதயத்தில் அழைத்தேன் என் மன்னவா (2)
நீர் இந்த உலகத்தில் ஒளியான தேவா - 2
என் இல்லம் ஒளியேற்ற விரைவில் வா - 2

துயரத்தில் தள்ளாடும் என் வாழ்விலே
தவறாமல் தரவேண்டும் உம் ஆவியை (2)
பரிசுத்த தைலத்தால் அபிசேகம் செய்வாய் - 2
உன் சாட்சியாய் என்னை மாற்றிடுவாய் - 2




1300
என்னே உயர்வானது - இயேசு
உன் நாமமே (2)
எல்லா படைப்புடனே
உன்னைப் புகழ்ந்திடுவேன் (2)
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2


காலை வேளையிலும் - உன்னைப்
புகழ்ந்திடுவேன் (2)
மாலை நேரத்திலும் - உன்னைத்
துதித்திடுவேன் (2)
வேதனைக் காலத்திலும் - உன்னைப்
புகழ்ந்திடுவேன் (2)
ஆனந்த நேரத்திலும் - உன்னைத்
துதித்திடுவேன் (2)
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2

வியாதி வேளையிலும் - உன்னைப்
புகழ்ந்திடுவேன் (2)
ஆரோக்கிய நாட்களிலும் - உன்னைத்
துதித்திடுவேன் (2)
ஆபத்து நேரத்திலும் - உன்னைப்
புகழ்ந்திடுவேன் (2)
எல்லா வேளையிலும் - உன்னைத்
துதித்திடுவேன் (2)
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2



என்னை மன்னியும் என் இறைவனே
என்னை மன்னியும் 2


ஆயன் உன் அன்பை உதறினேன்
நாளும் பாவங்கள் பல செய்தேன்

நாதா ஒரு வார்த்தை சொல்லுமே
பாவி நான் இன்று குணமாவேன்

ஊதாரி மைந்தனாய் அலைகின்றேன்
உனது மகனாய் ஏற்றுக்கொள்ளும்





என் இயேசுவே என்னை மன்னியும் - 2 (3)

உன் குரல் எனத் தெரிந்தும் கேட்காமல் நான் திரிந்தேன்...


உன் முகத்தைக் கண்ட பின்னும் பேசாமல் திரும்பிக்கொண்டேன்...


உன் அருள் எனில் இருந்தும் உணராமல் நான் வாழ்ந்தேன்...

உன் வழியை அறிந்திருந்தும் நடவாமல் மாறிச் சென்றேன்...

உதவி செய்ய வாய்ப்பிருந்தும் உதவாமல் உதறிச் சென்றேன்...

உண்மை வாழ்வில் தெளிவிருந்தும் உலகப்போக்கில் நானலைந்தேன்...




எனக்குள்ளே வாழும் எங்களன்பு தேவனே - உம்மையே துதிக்கின்றேன்
வார்த்தையான தேவன் வாழவைக்கும் தேவன்
- உம்மையே........


அப்பத்தில் வாழும் நற்கருணை நாதா - உம்மையே துதிக்கின்றேன்
அன்பு செய்யும் தேவன் அரவணைக்கும் தேவன்  - உம்மையே........
ஊற்றான தேவன் உயிர் கொடுக்கும் தேவன் - உம்மையே துதிக்கின்றேன்


ஆறுதலின் தேவன் ஆறுதலின் தேவன் - உம்மையே........
பார்க்கின்ற தேவன் பலியான தேவன்  - உம்மையே........
விடுவிக்கும் தேவன் குணமாக்கும் தேவன்  - உம்மையே........
காண்கின்ற தேவன் காப்பாற்றும் தேவன்  - உம்மையே........


இரக்கத்தின் தேவன் பரிவு காட்டும் தேவன்  - உம்மையே........
பெலப்படுத்தும் தேவன் பலனான தேவன் - உம்மையே........
கருணை காட்டும் தேவன் காவல் காக்கும் தேவன்  - உம்மையே........
சுமை தாங்கும் தேவன் பாவம் போக்கும் தேவன்  - உம்மையே........


வல்லமையான தேவன் வளமான தேவன்  - உம்மையே........
வல்லவரான தேவன் நல்லவரான தேவன்  - உம்மையே........
திடப்படுத்தும் தேவன் எனைத் தேற்றும் தேவன்  - உம்மையே........
கற்றுத் தரும் தேவன் ஞானம் தரும் தேவன்  - உம்மையே........
எனக்குள்ளே வாழும் எங்களன்பு தேவனே  - உம்மையே........



பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் இறைவனே
என் பாவமெல்லாம் பொறுத்தருள்வாய்


உமக்கும் அயலார்க்கும் எதிராக நான் செய்த
பசியாய் தாகமாய் இருந்தோரைப் புறக்கணித்து
ஆதரவில்லா அன்னியராய் இருந்தோரை ஏற்க மறுத்து
உமக்கெதிராய் நான் செய்த..........பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் ...


நோயுற்று வாடியே இருந்தோரை மறந்திருந்து
வாழ வழி இல்லாமல் எளியோராய் இருந்தவரை ஏற்க மறுத்து
உமக்கெதிராய் நான் செய்த.........பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் ...

வறுமையாலும எளிமையாலும் வாழ வழி இல்லாமல்
பாதையே இல்லாமல் உலகினிலே வாழ்பவரை
ஏற்க மறுத்து உமக்கெதிராய் நான் செய்த.........பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் ...

அநீதியான தீர்ப்பாலும் தவறிப் பிழை செய்திருந்து
சிறையினிலே வாடி வாடி வாழ்பவரை புறக்கணித்து
ஏற்க மறுத்து உமக்கெதிராய் நான் செய்த.........பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் ...

நீதிக்காக நேர்மைக்காக போராடும் மனிதர்களை
நானுமறிந்து இருந்தாலும் மதியிழந்து மறந்திருந்து
ஏற்க மறுத்து உமக்கெதிராய் நான் செய்த.........பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் ...

மனம் மாறி குணம் மாறி வருவோரை புறக்கணித்து
இரக்கமே இல்லாமல் அணைத்திடவே மனமில்லாமல்
ஏற்க மறுத்து உமக்கெதிராய் நான் செய்த.........பாவமெல்லாம் பொறுத்தருள்வாய் ...





1301

ஒளியாய் வந்தவா போற்றி போற்றி
உண்மைக்கு உண்மையே போற்றி போற்றி (2)
முழுமுதற் கடவுளே போற்றி - 2
அருள் நிறை ஆண்டவா போற்றி போற்றி

புன்னகை வடிவே போற்றி
புகழ் நிறை தலைவா போற்றி (2)
என்னகம் நிறைந்தவா போற்றி - 2
அனைத்தும் படைத்தவா போற்றி போற்றி
ஒளியாய் வந்தவா போற்றி
உண்மைக்கு உண்மையே போற்றி

அழகின் உருவே போற்றி
மகிழ்வின் மயமே போற்றி (2)
வாழ்வின் முடிவே போற்றி - 2
வானக விருந்தே போற்றி போற்றி
ஒளியாய் வந்தவா போற்றி
உண்மைக்கு உண்மையே போற்றி







கனிவு காட்டுமையா எந்தன் கவலை தீருமையா - 2
கருணை கூருமையா எங்கள் கறைகள் நீக்குமையா
எங்கள் கறைகள் நீக்குமையா - இயேசையா -4 (2)


கள்ளம் கபடு சூது நினைப்பேன் காரிருள் நீக்குமையா -2
உள்ளம் உருகி உனை நான் அழைத்தேன் -2
உன் கரம் நீட்டுமையா-2 - இயேசையா -4 (2)

இறை உன்னை பிரிந்தேன் இதயம் நொந்தழுதேன்
இரக்கம் காட்டுமையா (2)
மறையினை மறந்தேன் மனதையும் இழந்தேன் -2
மன்னிப்பு தாருமையா -2 - இயேசையா -4 (2)

அனலிடை துடித்த புழுப்போலானேன் அன்பு கூருமையா-2
கானலைக் கண்ட மான் போலானேன் -2
மயக்கம் தீருமையா -2 - இயேசையா -4 (2)



1302

கருணை காட்டுமையா கவலை நீக்குமையா - 2

ஆதாமின் பிழைகளைப் பொறுத்தது போல்
அன்போடு அணைத்துக் காத்தது போல் - கருணை


இஸ்ராயேல் பிழைகளை பொறுத்தது போல்
இடர்களை போக்கி காத்தது போல் - கருணை

தாவீதின் பிழைகளைப் பொறுத்தது போல்
தாழ்நிலை நீக்கி அணைத்தது போல் - கருணை

மதலேன் மரியாளைப் பொறுத்தது போல்
மறுவிலா வாழ்வில் இணைத்தது போல் - கருணை

சமாரியப் பெண்ணை பொறுத்தது போல்
சத்திய வழியில் அழைத்தது போல் - கருணை

விபசாரப் பெண்ணைப் பொறுத்தது போல்
விடுதலை வாழ்வைக் கொடுத்தது போல் - கருணை

சிலுவையில் கள்வனைப் பொறுத்தது போல்
சிதறிய மனிதரை இணைத்தது போல் - கருணை

கொலை செய்த யூதரைப் பொறுத்தது போல்
குவலயம் வாழச் செய்தது போல் - கருணை





கருணை இறைவா சரணம்
கடைக்கண் பாராய் சரணம்


நட்பினை விடுத்தோம்
நலம்தனை இழந்தோம் - கருணை

ஆசைகள் வளர்த்தோம்
அன்பினை விடுத்தோம் - கருணை

நீதியை மறந்தோம்
நேர்மையைத் துறந்தோம் - கருணை

ஒளியினை வெறுத்தோம்
இருளினில் அலைந்தோம் - கருணை



கண்ணீர் துடைப்பாய் கவலை தீர்ப்பாய்
எந்தன் இயேசுவே
அருள் வரம் தந்து ஆசீர்வதிப்பாய்
என்றும் இயேசுவே

நோயினால் வருந்தி உன் பாதம்
கண்ணீரோடு நான் வந்தேன்
அருமருந்தாகி சுகம் தந்து
என்னைக் காப்பாய் யேசையா
வெறுமை தனிமை எனையழுத்த
அன்பைத் தேடி நான் அலைந்தேன்
தாயாய் தோழனாய் உடனிருந்து
அன்பைப் பொழிவாய் யேசையா

குழந்தைப் பாக்கியம் இல்லாமல்
ஏச்சும் பேச்சும் நான் அடைந்தேன்
பேரைச் சொல்லும் குழந்தை வரம்
துள்ளிடச் செய்வாய் யேசையா
குடியும் கடனும் அதிகமாகி
மனச்சுமையோடு நானும் வந்தேன்
மனக்குறை பணக்குறை நீக்கிடவே
நல்வழி காட்டுவாய் யேசையா

மருத்துவராலே இயலாமல்
கைவிடப்பட்டு துயருற்றேன்
அற்புதமாக நலம் தந்து
சாட்சியாய் மாற்றுவாய் யேசையா
ஒருவருக்கொருவர் குடும்பத்தில்
புரிதல் இன்றித் தனியானோம்
உம் திருவருளால் ஒன்றாகி
இல்லறம் இணைப்பாய் யேசையா

படித்தும் வேலை இல்லாமல்
வாழ்வை இழந்து தடம் புரண்டேன்
நல்லதோர் வேலை வாய்ப்பினையே
தந்து காப்பாய் யேசையா
திருமண காரியம் நடந்தேற
தடைகள் பலமாய் வந்தாலும்
சுபமாய் எல்லாம் சுகமாகி
நல்வரன் தருவாய் யேசையா

தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெற்றிட வேண்டிப் படித்தேன் நான்
உழைப்பிற்கேற்ப மதிப் பெண்ணை
உயர்ந்திடக் கொடுப்பாய் யேசையா
பொருளாதார நெருக்கடியால்
குடும்பத்தோடு துயருற்றோம்
தேவைகள் எல்லாம் தீர்த்து எம்மை
வளம்பெறச் செய்வாய் யேசையா




கண்ணீர் சிந்துகிறோம் - கொஞ்சம்
கருணை காட்டுமையா

கண்கள் செய்த பாவத்திற்காய்
கண்ணீர் சிந்துகிறோம் - எங்கள்
கால்கள் செய்த பாவத்திற்காய்
தூரம் நடக்கின்றோம்
கைகள் செய்த பாவத்திற்காய்
கையேந்தி நிற்கின்றோம் - எங்கள்
மனங்கள் செய்த பாவத்திற்காய்
அமைதி இழக்கின்றோம்- ஐயா

அயலவரை வெறுத்தமைக்காய்
அகதி ஆகின்றோம் - எங்கள்
சகோதரரை வெறுத்தமைக்காய்
சோதனை அடைந்தோம்
ஆண்டவனே உன்னை மறந்தோம்
அழிவை அடைகின்றோம் - இந்த
அவனியிலே ஆசை வைத்தோம்
ஆறுதல் இழந்தோம் - ஐயா

தண்டனைகள் போதுமையா
தணிந்து வாருமே - இந்த
வேதனைகள் போதுமையா
விரைந்து வாருமே
சோதனைகள் இனியும் வந்தால்
எங்கே நாம் செல்வோம் - இந்த
வேதனைகள் தொடருமென்றால்
யாரிடம் போவோம் - ஐயா



குறை நீக்கிக் கறை போக்கும் கருணா நீ வா வா (2)
நிறைவாய் நின் அருளைத் தர வா வா தலைவா (2)
ஆறுதலைத் தந்திட நீ அன்பனாய் வா வா (2)
தேறுதலைத் தந்திட நீ தேனமுதாய் வா வா (2)





குணப்படுத்தும் இயேசையா உமக்கே நன்றி

குணப்படுத்தும் எம்மை குணப்படுத்தும்
ஆண்டவரே எம்மை குணப்படுத்தும்


இயேசுவே தேவ மருத்துவரே - குணப்படுத்தும்...
பாசமாய் எம்மை அணைப்பவரே - குணப்படுத்தும்.
தேவனே எம்மை மன்னிப்பவரே - குணப்படுத்தும்.
ஆயனே எங்கள் அருமருந்தே - குணப்படுத்தும்.

எமக்காய் காயங்கள் சுமந்தவரே - குணப்படுத்தும்.
காயங்களால் சுகம் தருபவரே - குணப்படுத்தும்.
எம் துன்பம கண்டு அழுபவரே - குணப்படுத்தும்.
எம் பாவம் தீர்த்து அருள்பவரே - குணப்படுத்தும்.





குணமளிப்பார் இயேசு - உனக்கு
குணமளிப்பார் இயேசு - நிச்சயம்
குணமளிப்பார் இயேசு - உன்
பாவங்களிலிருந்தும் - உன்;
நோய்களிலிருந்தும் - உன்
குவலையிலிருந்தும் - உன்
கண்ணீரிலிருந்தும் - (குணமளிப்பார் இயேசு)


வரண்ட நிலத்தைக் கண்டு அவரும்
தண்ணீர் ஊற்றுவார்
இருண்ட மனதைத் தேற்ற அவரும்
ஒளியை வீசுவார் - 2

எதையும் நினைத்து கலங்காதே
நோயை நினைத்து உருகாதே - 2
உன்னைத் தெரிந்த இறைவன்
உன்னை நிட்சயம் காப்பாரே - 2

பள்ளத்தாக்கில் நடக்கும்போதும்
பக்கம் வந்திடுவார் - 2
அபயக்குரலைக் கேட்கும்போதும்
உதவி தந்திடுவார் - 2 (குணமளிப்பார் இயேசு)

ஏக்கம் பலவும் சூழும்போது
எழுந்து வந்திடுவார் - 2
துயரம் நம்மை அழுத்தும்போது
துணையாய் நின்றிடுவார் (எதையும் நினைத்து)

கடன்கள் தொல்லை தாக்கும்போது
உடன் இருந்திடுவார் - 2
முடிந்துபோன நிலையைக்கூட
முறித்து மாற்றுவார் - 2 (எதையும் நினைத்து)




குணமாக்கும் இயேசுவே குணமாக்கும்
திரு இரத்தத்தால் என்னைக் கழுவிவிடும் இயேசுவே


பச்சிலையோ மருந்தோ குணமாக்கவில்லை
உன் வார்த்தையும்........
திரு இரத்தத்தால் கழுவும் (2)

இறந்து போன லாசரை உயிர்தெழச்செய்தீர்
கண்தெரியாக் குருடனை குணமாக்கினீர்
திரு இரத்தத்தால் கழுவும் (2)











1307
குயவனே வள்ளலே - என்
வாழ்வின் தீபமே (2)
களிமண் என்னைப் பாண்டமாக
இனிதே மாற்றிடுவீர் (2)
இயேசு ஐயா இயேசு ஐயா
நீர் என் வாழ்வும் என் வளமும் ஐயா (2)


பயனில்லாத பாத்ரமாய் - என்னைத்
தூக்கி எறிய வேண்டாம் (2)
உன் வரம் பொங்கும் பாத்ரமாக
என்னை மாற்றிடுவீர் (2)
இயேசு ஐயா இயேசு ஐயா
நீர் என் வாழ்வும் என் வளமும் ஐயா (2)

உடைந்து போன குழலாய் - என்னை
ஒதுக்கி வைக்க வேண்டாம் (2)
உன் அருள் பாடும் சிறந்த குழலாய்
என்னை மாற்றிடுவீர் (2)
இயேசு ஐயா இயேசு ஐயா
நீர் என் வாழ்வும் என் வளமும் ஐயா (2)



1308
சரணம் சரணம் இயேசு - நாதா
சரணம் சரணம்

அகரம் நீயே ஆதியும் நீயே
இன்பமும் நீயே ஈசனும் நீயே

உண்மை நீயே ஊனும் நீயே
எண்ணும் நீயே ஈகமும் நீயே


1309
சுமையோடு வந்தோம் - எம்
சுமை தீர்ப்பாய் இறைவா

துணையின்றி வந்தோம் - எம்
துணையாவாய் இறைவா

நலம் நாடி வந்தோம் - எம்
நலமாவாய் இறைவா




1310
தந்தையே என் இறைவா
உமதன்பைத் தருவாய்
இயேசுவே என் ஒளியே
என்னோடு இருப்பாய்
ஆவியே என் உயிரே
துணையாக வருவாய்


1311
தந்தை இறைவனை நினைத்து விட்டால்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
இயேசு மீட்பரை நினைத்து விட்.டால்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்
ஆவி இறைவனை நினைத்து விட்.டால்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம்


1312
தந்தையே இறைவனே இரக்கமாயிரும்
மைந்தனே இயேசுவே இரக்கமாயிரும்
ஆவியே துணைவனே இரக்கமாயிரும்
உறவில் வாழும் மூவொரு தெய்வமே இரக்கமாயிரும்


ஊதாரி மைந்தனாய் அலைந்து திரிந்து
உந்தன் அன்பை உதறிச் சென்றேன் - 2
என் தேவனே என் இறைவனே
என்னை மன்னியும் என்னை மன்னியும்



1313

தந்தையே இறைவா போற்றி 8
திருமகன் கிறீஒதுவே போற்றி 8
தூய நல் ஆவியே போற்றி
8



1314

தேவனின் திருமகனே தேடும் ஆயனே
எம் பிழை பொறுத்தருள்வாய்


உன் வழி மறந்து எம் வழி நடந்தோம்
உயிர்தரும் உண்மைகள் உதறிச் சென்றோமே
ஓய்வின்றி அலைந்தோமே

அன்பினில் மறந்து அகந்தையில் நின்றோம்
அழிந்திடும் சிலைக்கு அடிமை செய்தோமே
ஆறுதல் இழந்தோமே

தன்னலம் மிகவே தலைக்கனம் கொண்டோம்
தந்தையின் அழைப்பைத் தகர்த்தெறிந்தோமே
தனிமையில் உழன்றோமே

அண்ணலே உந்தன் அழைப்பினை மறந்தோம்
ஆயிரம் குரல்களைத் தொடர்ந்தலைந்தோமே
ஆயனைப் பிரிந்தோமே



1315

தேடுகிறேன் உம்மையே இயேசுவே தினம்
வாடுகிறேன் உமக்காக இயேசுவே

பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே - என்
வாழ்வை இன்று மாற்றிவிடும் இயேசுவே

பாவத்தில் உழலுகின்றேன் இயேசுவே பெரும்
பாவி என்னை மீட்க வாரம் இயேசுவே
பாதை தவறி சென்றுவிட்டேன் இயேசுவே எனக்கு
பாதை காட்ட விரைந்து வாரும் இயேசுவே

இருளிலே சிக்கி விட்டேன் இயேசுவே எனக்கு
ஒளியைத்தர ஓடி வாரும் இயேசுவே

பாவக்கறை பெருகிவிட்டது இயேசுவே உந்தன்
இரத்தத்தாலே கழுவ வாரும் இயேசுவே



1316
தொடும் என் கண்களையே
உம்மை நான் காண வேண்டும் - இயேசுவே
உம்மை நான் காண வேண்டும்


தொடும் என் காதுகளை
உம் குரல் கேட்க வேண்டுமே - இயேசுவே
உம் குரலை கேட்க வேண்டுமே

தொடும் என் மனதினையே
மனப்புண்கள் ஆற வேண்டுமே - இயேசுவே
மனப் புண்கள் ஆற வேண்டும்

தொடும் என் உடலினையே
உடல் நோய்கள் தீர வேண்டுமே - இயேசுவே
உடல் நோய்கள் தீர வேண்டுமே

தொடும் உன் ஆன்மாவையே
என் பாவம் போக்க வேண்டுமே - இயேசுவே
என் பாவம் போக்க வேண்டுமே

தொடும் என் இதயத்தையே
உன் அன்பு ஊற வேண்டுமே - இயேசுவே
உம் அன்பு ஊற வேண்டுமே



1317
சச்சிதானந்தா இதயத்தின் தலைவா
சரணம் சரணம் உன்னடி பணிந்தேன் (4)


தந்தையும் நீரே சரணம்
என் அன்னையும் நீரே சரணம்
என் தலைவனும் நீரே சரணம்
என் தோழனும் நீரே சரணம்
என் தந்தையும் நீரே சரணம் சரணம்
என் அன்னையும் நீரே சரணம் சரணம்
என் தலைவனும் நீரே சரணம் சரணம்
என் தோழனும் நீரே சரணம் சரணம்
எல்லாம் நீரே எந்தையும் நீரே - எந்தன்
உலகின் எல்லையும் நீரே (2)

என் ஆசையும் நீரே சரணம்
என் ஆனந்தம் நீரே சரணம்
என் தீபமும் நீரே சரணம்
என் பாதையும் நீரே சரணம்
என் ஆசையும் நீரே சரணம் சரணம்
என் ஆனந்தம் நீரே சரணம் சரணம்
என் தீபமும் நீரே சரணம் சரணம்
என் பாதையும் நீரே சரணம் சரணம்
எல்லாம் நீரே எந்தையும் நீரே - எந்தன்
உலகின் எல்லையும் நீரே (2)



திருவடி பணிந்தோம் சரணமையா





1318
தரிசு நிலமாய் நீரின்றி வாழ்வில்
தவிக்கும் என்னிடம் வா
என் வாழ்வின் ஊற்றே வா (3)


உடைந்த படகாய் நீயின்றி - வாழ்வில்
தவிக்கும் என் மனம் வா
என் வாழ்வின் ஊட்டமே வா (3)

உலர்ந்த மலராய் நீயின்றி - வாழ்வில்
தவிக்கும் என் உளம் வா
என் வாழ்வின் ஆற்றலே வா (3)

தளர்ந்த வாழ்வில் சோர்ந்திடும் - வேளை
அழைக்கும் என்னிடம் வா
உன் ஜீவ வார்த்தையைத் தா (3)




திருமுன் வந்தோம் தலைவா வாராய் (2)
தொழுதோம் உன்னை அருள் வரம் தாராய்  (2)
கருணையின் வடிவே நெஞ்சினில் வாராய்   (2)
கலங்கிடும் நெஞ்சினில் அமைதியைத் தாராய்    (2)
திருமுன் வந்தோம் தலைவா வாராய்  (2)
தொழுதோம் உன்னை அருள் வரம் தாராய்
    (2)


1319
தொழுது மலர்கொண்டு வாழ்த்துவோம்
இறைமகனே நீ மலராகுவாய்
எம்மை மீட்க வந்த இயேசுவே
உமக்கு யாம் அளிக்கும் அஞ்சலி
மலரஞ்சலி தீபாஞ்சலி தூபாஞ்சலி







தேவாதி தேவா திருவடி சரணம் - 2
ராஜாதி ராஜா மலரடி சரணம் - 2
அன்பின் அண்ணலை வாழ்த்துவோம் - 2
விடுதலை வேந்தனை புகழுவோம் - 2


சிந்தனை எல்லாம் நிறைந்தவன் நீயே
சொல் செயல் யாவும் உம் வழிதானே (2)
உம்திரு உள்ளம் நிறைவேற வேண்டும் - 2
உம் இறையரசு நிலைபெற வேண்டும்

எளிமையின் பாதையில் ஏற்றங்கள் தந்தாய்
நேரிய மனங்களில் தீபமாய் நின்றாய் (2)
வறியவர் வாழ்வு வளம் பல காணும் - 2
நெறியுடை அரசை நிறுவிடு நாதா



1321
தேவாதி தேவா உன் திருவடி சரணம்
திரு இயேசு நாதா உன் திருவடி சரணம்
திருத்தூய ஆவி உன் திருவடி சரணம்
திரியேக தேவா உன் திருவடி சரணம்

1322
நற்கருணை நாதா சரணம் சரணம்
பொற்கரிய போதா சரணம் சரணம்
சற்குருவே தலைவா சரணம் சரணம்
நற்குருவே நாதா சரணம் சரணம்



1323
நம்பி வந்தேன் இயேசுவே
என்னை குணப்படுத்தும்


எனது நலமே எண்ணி வாழ்ந்து
பாவம் செய்தேன் இரங்குமே

நான் வாழ பிறரைக்கெடுத்த
பாவி என்னை மன்னியும்

உடலினாலும் உள்ளத்தாலும்
பாவம் செய்தேன் இரங்குமே




1324
நன்றி நன்றி இயேசுவே
நன்றி என்றும் நன்றி உமக்கு (2)


கோடி நன்றி பாடினாலும்
இன்னும் பாடி மகிழ்வேன் நான் (2)

அன்பு பக்தி விசுவாசத்துடன்
ஆவல் நிறை நன்றி சொல்வேன் (2)

அளவில்லா உன் அன்பில் விளைந்த
அற்புத நற்கொடைகட்கு (2)



நன்றி நன்றி இறைவா நன்றி நன்றி தலைவா (2)
- வரங்கள் கோடி தந்ததால் வளங்கள் வாழ்வில் வந்ததால்
- இதய அமைதி தந்ததால் புதிய நலன்கள் வந்ததால்
- அடியேன் செபத்தைக் கேட்டதால் அறிவால் என்னை மீட்டதால்
- உலகைப் படைத்துக் காப்பதால் உறவை வளர்க்கப் பிறப்பதால்
- சிலுவை மரணம் ஏற்றதால் சிறுமைப் பேயை வென்றதால்
- ஒளியாய் மீண்டும் உயிர்த்ததால் அழியா வாழ்வைத் தந்ததால்
- தேற்றும் ஆவி தந்ததால் ஊற்றும் வலிமை தந்ததால்








1325
நன்மையெல்லாம் தந்தவரே தந்தையே - இதய
நன்றியினால் புகழுகின்றோம் உம்மையே
நன்மையெல்லாம் தந்தவரே தந்தையே


ஆண்டவரே ஆதியும் நீர் அந்தமும் நீரே
ஆட்கொண்ட ஆவியும் நீர் அரசரும் நீரே

மண்புனலின் தணல் காற்றை படைத்தவர் நீரே
மண்டலங்கள் அத்தனையும் தந்தவர் நீரே

கண்ணோடு ஒளி தந்து காண வைத்தீரே
காட்சி எழில்கோடி தரும் கர்த்தரும் நீரே

உணவோடு சுவை படைத்து உண்ண வைத்தீரே
ஊட்டி விட்டு தான் மகிழும் அன்னையும் நீரே

இன்பம் நிறை விண்ணரசை படைத்தவர் நீரே
எங்களுக்கு வழியாக மகனைத் தந்தீரே

மனித இனம் மீட்படைய மனது வைத்தீரே
மகனாலே திருச்சபையை தோன்ற வைத்தீரே

மக்கள் எங்கள் பாவங்களை அறிந்தவர் நீரே
மன்னிப்பும் மீட்பினையும் அளித்தவர் நீரே.



1326
நான் பாவி இயேசுவே - என்
வாழ்வை மாற்றுமே


விழுந்துவிட்டேன் மீண்டும் தவறிவிட்டேன்
என்னை தூக்கும் இயேசுவே - 2
சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே - 2

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே - 2

புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை காட்டும் இயேசுவே - 2

நாடுகிறேன் உம்மை தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே



பக்திபோடு பண்ணிசைத்து பரமனைத் தொழுவோம்
பாதுகாக்கும் பரம்பொருளை பணிந்து துதிப்போம்
முக்தி தரும் முதல்வன் முன்னே மணடியிடுவோம்
சக்தி பெறச் சரணடைவோம் சேயர் நாமெல்லாம்



1328
பரலோக தந்தாய் சரணம் சரணம் - 2
பரம தயாளா சரணம் சரணம் - 2
பரிசுத்த ஆவியே சரணம் சரணம் - 2




1329
பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம் - 2
எங்களைப் படைத்த தந்தையே சரணம் - 2
கறைகளைப் போக்கும் இறைவனே சரணம் - 2
கரம் கூப்பி பணிந்தோம் சரணம் சரணம்
பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம்


புவிமீட்க வந்தாய் புதல்வனே சரணம் - 2
எங்களை இரட்சித்த இதயனே சரணம் - 2
சிலுவையில் மரித்து உயிர்த்தவா சரணம் - 2
சிரம் தாழ்த்திப் பணிந்தோம் சரணம் சரணம்
புவிமீட்க வந்தாய் புதல்வனே சரணம்

அன்பாகி நின்றாய் ஆவியே சரணம் - 2
எங்களை அர்ச்சிக்கும் அமுதனே சரணம் - 2
கண்போல காத்திடும் அண்ணலே சரணம் - 2
மனம் வாழ்த்தி அழைத்தோம் சரணம் சரணம்
அன்பாகி நின்றாய் ஆவியே சரணம்

பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம் - 2
புவிமீட்க வந்தாய் புதல்வனே சரணம் - 2
அன்பாகி நின்றாய் ஆவியே சரணம் - 2
முதல்வனே புதல்வனே ஆவியே சரணம்
பரலோகத் தந்தாய் முதல்வனே சரணம் (2)


1330
புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு காலையிலே

புகழ்ந்திடு காலையிலே புகழ்ந்திடு காலையிலே

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு பகலினிலே
புகழ்ந்திடு பகலினிலே புகழ்ந்திடு பகலினிலே

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு மாலையிலே
புகழ்ந்திடு மாலையிலே புகழ்ந்திடு மாலையிலே

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு இரவினிலே
புகழ்ந்திடு இரவினிலே புகழ்ந்திடு இரவினிலே

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு பொழுதெல்லாம்
புகழ்ந்திடு பொழுதெல்லாம் புகழ்ந்திடு பொழுதெல்லாம்

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு வாழ்வெல்லாம்

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு தந்தையை
புகழ்ந்திடு தந்தையை புகழ்ந்திடு தந்தையை

புகழ்ந்திடு மனமே புகழ்ந்திடு யேசுவை
புகழ்ந்திடு ஆவியை
புகழ்ந்திடு ஆவியை புகழ்ந்திடு ஆவியை



1331
பேசுவாய் எந்தன் இறைவா
அடிமை நானும் கேட்கின்றேனே (2)

அடிமை நானும் கேட்கின்றேனே
ஏழை எனக்கருள் வள்ளல் நீயே (2)




1332
பேதைபோல் இருந்து பாடுகிறேன் நான்
பேரருள் புரிவாய் குருதேவா

இலட்சிய வாழ்வைத் தேடிடும்போது
இடர்களைத் தாங்கும் வரம் தாராய்

எனைப்பிறர் இகழ்ந்து தூற்றிடும்போது
எனை மறந்திருக்கும் வரம் தாhய்

புகழ்ச்சியின் ஏணியில் ஏறிடும்போது
பிறரையும் மதிக்கும் வரம் தாராய்

தளர்ச்சியும் நோயும் தொடர்ந்திடும்போது
தவத்தினைப் பேணும் வரம் தாராய்

கவலையின் பிடியில் கலங்கிடும்போது
கதிபெற எனக்கு வரம் தாராய்

இறைவழி நடக்க முனைந்திடும்போது
என் வழி மறக்க வரம் தாராய்

இறை பிறர் அன்பில் நிலைத்திடும்போது
இகபர மகிழ்வின் வரம் தாராய்



போற்றுவோம் புகழுவோம் நன்றி கூறுவோம்

துன்பத்தில் துணையான தூய தேவனை
தூய்மையின் பொருளான இனிய நேசனை
அகிலத்தைக் காத்திடும் அன்பு தேவனை
அனைத்தையும் ஆண்டுவரும் இனிய நேசனை
நோயில் மருந்தான மகிமை தேவனை
நாவினில் நின்றாடும் இனிய நேசனை
தீயவன் தீக்கனைகளை எதிர்த்த தேவனை
தியாகத்தில் ஒளியான புனித நேசனை


அகத்தினில் அன்பான அருமை தேவனை
அமைதிக் கடலான கருணை நேசனை
என்றும் எம்மில் வாழும் இயேசு தேவனை
எல்லாம் இனிதாக்கும் எளிமை நேசனை
நன்மையின் நாயகனாம் நல்ல தேவனை
நலமாய் நமைத்தாங்கும் நல்ல நேசனை
உள்ளத்தில் உறைந்திடும் உண்மை தேவனை
உலகின் ஒளியாக எழுந்த நேசனை



வந்து பாரும் எம் இறைவா வந்து பாரும்
நீண்ட நாட்கள் சிதைந்துபோன எம் இனத்தைப் பாருமையா (2)
வந்து நீர் பாருமையா பா.........ருமையா

வந்துபாரும் எம் இறைவா வந்து பாரும் - 3

அமைதி வாழ்வு குலைந்து போன
யாழ்ப்பாணத்தின் அலங்கோலம் - வந்து பாரும்...

உமது மக்களும் அவர்கள் மண்ணும்
தீக்கிரையாய் போன நிலையை - வந்து பாரும்...

மீன்கள் பாட கலைவளர்த்த
மட்டுநகர் பட்ட கோலம் - வந்து பாரும்...

நாளும் ஒன்றாய் வாழ்ந்த இனம்
சூழ்ச்சியினால் பிரியும் நிலையை - வந்து பாரும்...

வீடிழந்து நிலமிழந்து ஊர் பிரிந்த
மக்கள் படும் துயரை - வந்து பாரும்...

வீரம் தெரிந்த வன்னி மண்ணின்
சொரியும் குருதி மழையை இன்று

வதைமுகாமின் முட்களுக்குள்
மனித உரிமை மடியும் நிலையை

இயற்றை வளம் நிறைந்திருந்த
திருமலையின் அவலநிலையை

வீடிழந்து நிழமிழந்து
ஊர் பிரிந்த மக்கள் துயரை

நெல்கதிரால் பசி தீர்த்த
மன்னாரைப் கருணையோடு

மக்கள் வெள்ளம் தஞ்சம் தேடி
மடுப்பதியில் வாடும் நிலையை



வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும்

வேண்டுகின்றேன் தினமும் தொடர்ந்து
துவளுகின்றேன் தினமும் தனியே
தேடுகின்றேன் தினமும் உன்னையே


அழுகின்றேன் தினமும் நொந்து
புலம்புகின்றேன் தினமும் அழுது
வருந்துகின்றேன் தினமும் நினைந்து



1333
வந்தோம் தந்தாய் - உள்ளம்
ஒன்றி வாழ்த்துச் சொல்ல வந்தோம் தந்தாய் (2)


வந்தோம் தந்தாய் - உள்ளம்
ஒன்றி ஆசி கொள்ள வந்தோம் தந்தாய் (2)

உந்தன் அன்பு உள்ளம் - கொண்டு
உலகில் நாங்கள் வாழவே (2) (வந்தோம்...)

தூய உள்ளம் கொண்டு - என்றும்
துணிந்து நாங்கள் வாழவே (2) (வந்தோம்...)

உறவு சொல்லும் உயர்வு - எல்லாம்
உணர்ந்து நாங்கள் வாழவே (2) (வந்தோம்...)

நீதி தேடும் நெஞ்சம் - கொண்டு
நிலைத்து நாங்கள் வாழவே (2) (வந்தோம்...)

நேர்மை குன்றா உறுதி - கொண்டு
நிமிர்ந்து நாங்கள் வாழவே (2) (வந்தோம்...)

தியாகம் என்னும் செஞ்சுடர் - ஒளியில்
தினமும் நாங்கள் வாழவே (2) (வந்தோம்...)



1334
வருந்தி சுமந்திடும் மாந்தரே
வாருங்கள் செல்வோம் இறைவனிடம் (2)
சுமைகளை அவரே இறக்கி வைப்பார்
சோர்வினை அவரே போக்கிடுவார் (2)
சரணம் சரணம் சரணம் தேவா - 4


குற்றம் குறைகளைக் களைந்திடுவார்
மன்னிப்பும் அவரே வழங்கிடுவார் (2)
அனாதையாய் நம்மை விடாமலே
அபயம் நமக்கு அளித்திடுவார் (2)
சரணம் சரணம் சரணம் தேவா - 4

அமைதியின்றி வாழ்வோர்க்கு
ஆறுதல் மொழிகள் கூறிடுவார் (2)
அன்பும் அருளும் நமக்களித்து
மகிழ்வினை நமக்கே தந்திடுவார் (2)
சரணம் சரணம் சரணம் தேவா 4



1335
விண்ணப்பத்தைக் கேட்டருளும்
விண்ணில் வாழும் யேசு தேவா 2
வா தேவா வா தேவா
என் மனக் கோவிலில் வா தேவா 2

அப்பா பிதாவே அன்பான தேவா
மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே 2

அன்பான தெய்வமே ஆ ஆ - 2 ஆவியைத் தாரும்
ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் - 2

துன்பம் தயரங்கள் போக்கிடவே
மனிதரே ஆண்டவரைத் துதித்திடுங்கள் - 2
ஆ ஆ ஆ ஆ
ஆவியில் புதுப்படைப்பாகிடவே -2
முழு மனத்தோடு துதித்திடுங்கள்




1336
வாழிய இயேசுவே உம்திரு நாமம் - 2
சரணம் இறைவா உமதடி சரணம்



1337
மலர்மிசையாகிய மன்னவா போற்றி
நிலமிசை எங்கும் உன் திருப்பெயர் போற்றி
ஏழிசை நாதனே ஈசனே போற்றி
ஆழிசூழ் அவனியின் ஆண்டவா போற்றி
தந்தையே போற்றி எந்தையே போற்றி இறைவனே போற்றி - 2


மணம்கமழ் தூபமாய் எழுபவா போற்றி
மனங்களில் தீபமாய் ஒளிர்பவா போற்றி
தன்னையே பலியென தருபவா போற்றி
உன்னையே உணவென அருள்பவா போற்றி
இயேசுவே போற்றி மைந்தனே போற்றி ஆயனே போற்றி - 2

அக்கினி பிழம்பென வருபவா போற்றி
அருட்பெரும் ஜோதியாய் எரிபவா போற்றி
அருட்கொடை ஏழையும் பொழிபவா போற்றி
ஆற்றலின் ஊற்றே ஆவியே போற்றி
ஆவியே போற்றி ஆற்றலே போற்றி ஜோதியே போற்றி - 2

மூவொரு இறைவனே போற்றி போற்றி
முழுமுதல் தலைவனே போற்றி போற்றி
அம்மையே அப்பனே போற்றி போற்றி
இம்மையே மறுமையே போற்றி போற்றி
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி


1338
மழையைப்போல வருவாயே இயேசையா
வரண்டுபோன பூமி நானையா

என் வாழ்விலே விளைச்சல் இல்லையே
என் மனதிலே சாந்தி இல்லையே

பாவங்கள் எல்லாம் போக்கிடுமையா
பயத்தை மனதிலே நீக்கிடுமையா
இயேசுக்கிறிஸ்துவே என் தெய்வமே
இனிய வரங்களால் என்னைக் காத்திடுவீரே

மனக்குறை எல்லாம் தீர்த்திடும் ஐயா
உடல் குறை எல்லாம் நீக்கிடும் ஐயா
இயேசுக்கிறிஸ்துவே குணமளிப்பவரே
உமது கரங்களால் என்னைக் குணப்படுத்திடுமே


1339
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா
இறைவா என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா

ஊதாரி மைந்தனாய் ஊர் ஊராய் அலைந்தேன்
தந்தை வீடு திரும்பிய தனையனை ஏற்பாய்

குடிவெறியால் என் குடும்பத்தைக் குலைத்தேன்
கொடுங் கோபத்தால் என் நண்பனை இழந்தேன்
தரங்கெட்ட மகளிரைத் தேடி அலைந்தேன்
தகாத வார்த்தைகளால் தவறிழைத்தேன்

புறங்கூறி பிறர் பெயர் கெடுத்திடச் செய்தேன்
பொறாமை கொண்டு நான் வஞ்சகம் செய்தேன்
வரவுக்கு மீறிய வீண் செலவுகள் செய்தேன்
வாழத்துடித்த என் கருவையும் கொன்றேன்

ஞாயிறு திருப்பலி சென்றிட மறந்தேன்
ஞாயிறு மறைக்கல்வி கற்பதை வெறுத்தேன்
என் தீய பழக்கத்தால் படிப்பையும் கெடுத்தேன்
என் தாய் தந்தையை மதித்திட மறந்தேன்

வாஸ்து ஜோதிடம் நான் குறி பார்த்தேன்
வார்த்தை மாறாத தெய்வத்தை மறந்தேன்
நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர்
எனை முழுதும் நான் உமக்கே அர்ப்பணித்தேன்


1340
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னவனே என்னை மன்னிப்பாயா


பாதை தவறி நான் விழுந்தேன்
பாவக்குழியில் நான் விழுந்தேன்
தாங்கிய கரங்களை உதறிவிட்டேன் - உன்
ஏங்கிய இதயத்தை நொறுக்கிவிட்டேன்

மாய உலகத்தில் எனை இழந்தேன்
மங்காத ஒளி உம்மை மறந்துவிட்டேன்
மாபரன் குருதியைச் சிதறவிட்டேன்
மனிதனின் குணத்தைக் குறைத்துவிட்டேன்

மன்னிக்கிறேன் மன்னிக்கிறேன்
என்மகனே(ளே) எப்போதும் மன்னிக்கிறேன் (2)
முள்முடி வேதனை உனக்காக
மும்முறை விழுந்ததும் உனக்காக
ஆணி கொண்ட காயங்கள் உனக்காக என்
ஆவியும் உயிரும் உனக்காக

சிலுவைப்பாடுகள் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
கல்வாரிப் பலியும் உனக்காக
காலமெல்லாம் நான் உனக்காக



மன்னித்தருளும் மன்னித்தருளும்
என் தேவா மன்னித்தருளும்

மனதுருகி வருந்தி வந்தேன்
மனம் மாறி திருந்த வந்தேன் ஏற்றுக் கொள்ளும்


ஊதாரி மைந்தனாய் உம்மை விட்டுப் பிரிந்தேன்
என் பிழை நீக்கியே மன்னித்தருளும்

தீயவன் எனக்கு தூயதை மறந்தேன்
என் பிழை நீக்கியே மன்னித்தருளும்

அன்பினைத் துறந்து வன்முறை புரிந்தேன்
என் பிழை நீக்கியே மன்னித்தருளும்

பாவத்தின் பிடியில் அடிமையாய் அலைந்தேன்
என் பாவம் அகற்றியே மன்னித்தருளும்

இயேசு ராஜனே பாவி எம்மையே மன்னித்தருளும் (4)



1341
மன்றாடிப் புலம்புகின்றோம் - யேசுவே
மன்னிக்க வேண்டுகின்றோம்

அன்பான தேவன் உம் வழி மறந்தோம்
அன்றாட வாழ்வில் பாவங்கள் புரிந்தோம்


அருளின் கடலே உம்மையே மறந்தோம்
ஆயிரம் பிழைகள் உளமாரப் புரிந்தோம்

ஐயா நின் பொன் மொழி அடிமைகள் மறந்தோம்
பொய் மொழி புகழும் புன்மைகள் புரிந்தோம்

அருளாட்சி அளிக்கும் நின் அழைப்பினை மறந்தோம்
நரகினைப் பெறத் தகும் கொடுமைகள் புரிந்தோம்

ஈடில்லா உமது பாடுகள் மறந்தோம்
மன்னித்து அருளென வேண்டுதல் புரிந்தோம்

துயருறும் உமது தூய்மையை மறந்தோம்
மகிழ்வுறும் ஆசையில் மாசுகள் புரிந்தோம்

பேரருட் பெருமகன் உம்மையே மறந்தோம்
ஆற்றறிவால் பிறர் அழுதிடப் புரிந்தோம்




மூவொரு இறைவா முழுமுதல் தலைவா
போற்றி போற்றி போற்றி
முழுமை மகிமை வலிமை உமதே
போற்றி போற்றி போற்றி
தூயவர் தூயவர் தூயவர் நீரே
போற்றி போற்றி போற்ற
ி
துதி புகழ் நாளும் உமக்கே உமக்கே
போற்றி போற்றி போற்றி
மூவோர் இறைவா போற்றி போற்றி
எங்கள் முழுமுதல்வா போற்றி

விண்ணகம் வாழும் தேவதந்தையே
போற்றி போற்றி போற்றி
எங்கிலும் யாவிலும் நிறைந்து இயல்பவா
போற்றி போற்றி போற்றி
அன்னையும் தந்தையும் ஆன அன்பரே
போற்றி போற்றி போற்றி
யாவையும் படைத்து காக்கும் அரசரே
போற்றி போற்றி போற்றி
தந்தை இறைவா போற்றி போற்றி
உம்மை ஆராதித்தோம் போற்றி

தந்தையின் அன்பால் வந்த இயேசுவே
போற்றி போற்றி போற்றி
வாழ்வு வழங்க வந்த இறைவனின் வாக்கே
போற்றி போற்றி போற்றி
தியாக பலியிலே எம்மை மீட்டவா
போற்றி போற்றி போற்றி
நோயில் குணம் தரும் தேவ மருத்துவா
போற்றி போற்றி போற்றி
முதலே இறைவா போற்றி போற்றி
உநதன் முதலபையம் போற்றி

உன்னத ஆவியே உயிர்களின் ஊற்றே
போற்றி போற்றி போற்றி
உள்ளத்து வெளியே ஒளிரும் ஆவியே
போற்றி போற்றி போற்றி
அசைந்து அனைத்திலும் ஆற்றலானவா
போற்றி போற்றி போற்றி
அப்பா தந்தாய் என்று அழைக்கச் சொல்பவா
போற்றி போற்றி போற்றி

ஆவியே இறைவா போற்றி போற்றி
உம்மை சரணடைந்தோம் போற்றி
தந்தையே இறைவா போற்றி போற்றி
உம்மை ஆராதிப்போம் போற்றி
முதலே இறைவா போற்றி போற்றி
உநதன் முதலபையம் போற்றி
ஆவியே இறைவா போற்றி போற்றி
உம்மை சரணடைந்தோம் போற்றி போற்றி



மூவொரு இறைவா சரணம்
மூவொரு இறைவா சரணம்
மூவொரு இறைவா சரணம்
முழுமுதல் தலைவா சரணம்
அடியேன் உன்பதம் சரணடைந்தேன்
படைப்பின் சிகரமாய் எனை மாற்றி
பதரான என் நிலை உயரச் செய்தாய் -2


போற்றுவேன் புகழுவேன் தினம் தினம்
உன் நாமமே
பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும்
என் வாழ்விலே -2

சோதனை சூழ்கையில் உடனிருந்தாய்
மன வேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் -  இறைவாஆ...ஆ...
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய்
அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்
அடிமை என் வாழ்வினை உயரச்செய்து
அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய்
போற்றுவேன் புகழுவேன்...

பெயர் சொல்லி அழைத்து அருள் அளித்தாய்
உன் பணிதனை கொடுத்து உடன் நடந்தாய்
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் - இறைவா ஆ..ஆ..
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய்
சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்
அமைதியின் தூதனாய் எனை மாற்றி
அருள் வழி சென்றிட துணை புரிவாய்
போற்றுவேன் புகழுவேன்...


1342

வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும் (2)

வேண்டுகிறேன் தினமும் - தொடர்ந்து
வேண்டுகிறேன் தினமும்.


துவளுகிறேன் தினமும் - தனியே
துவளுகிறேன் தினமும்

தேடுகிறேன் தினமும் - மகிழ்வாய்
தேடுகிறேன் தினமும்

அழுகின்றேன் தினமும் - நொந்து
அழுகின்றேன் தினமும்

புலம்புகிறேன் தினமும் - அழுது
புலம்புகிறேன் தினமும்

வருந்துகின்றேன் தினமும் நொந்து
வருந்துகின்றேன் தினமும்





வருந்தி சுமந்திடும் மாந்தரே
வாருங்கள் செல்வோம் இறைவனிடம் (2)
சுமைகளை அவரே இறக்கி வைப்பார்
சோர்வினை அவரே போக்கிடுவார் (2)
சரணம் சரணம் சரணம் தேவா - 4


குற்றம் குறைகளைக் களைந்திடுவார்
மன்னிப்பும் அவரே வழங்கிடுவார் (2)
அனாதையாய் நம்மை விடாமலே
அபயம் நமக்கு அளித்திடுவார் (2)
சரணம் சரணம் சரணம் தேவா - 4

அமைதியின்றி வாழ்வோர்க்கு
ஆறுதல் மொழிகள் கூறிடுவார் (2)
அன்பும் அருளும் நமக்களித்து
மகிழ்வினை நமக்கே தந்திடுவார் (2)
சரணம் சரணம் சரணம் தேவா - 4



1342

வருந்தி வருகின்றேன் - மனம்
திருந்தி வருகின்றேன்

இறைவா கொடுத்தாய் நெறிமுறைகள் பத்து
என நான் அறிந்தும் பாவம் செய்தேன்

இறைவன் நீ ஒருவன் எனத் தெரிந்தும் உனக்கு
இணையாகத் தொழுதேன் படைப்புக்களை


கடவுளின் பெயரைக் கறைப்படுத்தினேன்
கதியினை இழந்தேன் களை இழந்தேன்

பரிசுத்த நாட்களை மறந்திருந்தேன் - எனைப்
படைத்தவர் உனை நான் தொழ மறந்தேன்

தாய் தந்தை குருவை மதிக்கவில்லை - மனத்
தாழ்மையாய் அவர் முன் நடக்கவில்லை

உயிர்களை மதித்துப் பேணவில்லை - பல
உயிர்களை வதைத்தே பழி புரிந்தேன்

களவுகள் புரிந்தேன் வழி மறந்தேன் - பிறர்
கலங்கிடச் செய்தேன் கயவனானேன்

உடலின்பம் தன்னில் உழன்று நின்றேன்
காம உலகினில் அலைந்தேன் உருவிழந்தேன்

பொய்களை உரைத்து புறணி சொன்னேன் - பிறர்
பொருள் பெறவும் மாய விலை பேசினேன்

பிறர் தாரம் விரும்பி பிழை புரிந்தேன் - அந்த
பிழைகளால் குடும்பம் புலன் கெடுத்தேன்

பிறர் சொத்து பொருள்மேல் ஆசை வைத்தேன்
மனம் பேராசை கொள்ள இடம் கொடுத்தேன்

இறையன்பும் பிறரன்பும் இழந்துவிட்டேன் - இனி
இகபர வாழ்வையும் இழந்துவிட்டேன்.


வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
நற்கருணை நாதரே ஆராதிக்கின்றோம்


விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
குணப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்

இரட்சிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்
இரக்கமுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம்
சுகம் கொடுக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம்
தரிசனமாகும் தெய்வமே ஆராதிக்கின்றோம்




1344

வாழ்வு தருவது இறை வார்த்தை (2)

எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்கள் வசம்


துயரப்பட்டோர் பேறுபெற்றோர்
ஆறுதலை அடைவார்கள்

சாந்தம் உள்ளோர் பேறுபெற்றோர்
மண்ணுலகம் அவர் உரிமை

நீதியில் நிலைப்போர் பேறுபெற்றோர்
நிறைவினையே பெறுவார்கள்

இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்
இரக்கத்தையே பெறுவார்கள்

சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்
இறைமக்களாய்த் திகழ்வார்கள்

துன்பம் சுமப்போர் பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே

விசுவாசம் கொள்வோர் பேறுபெற்றோர்
பலம் நிறைவாய்ப் பெறுவார்கள்







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்