அஞ்சலிப் பாடல் | இறைவா உந்தன் திருவாய் |
இறைவா உந்தன் திருவாய் மலர்ந்த வாழ்வின் வார்த்தைக்கு மலரஞ்சலி - 2 அஞ்சலி அஞ்சலி மலரஞ்சலி ஆண்டவர் அருள்வாக்கே அஞ்சலி - 2 இடரிருள் விலகச் சுடரொளி பாய்ச்சும் கடவுளின் வார்த்தைக்குத்; தீபாஞ்சலி - 2 அஞ்சலி அஞ்சலி தீபாஞ்சலி ஆண்டவர் அருள்வாக்கே அஞ்சலி - 2 நறுமணப் புகைபோல் மனங்களை உயர்த்தும் நற்செய்தி வார்த்தைக்குத் தூபாஞ்சலி - 2 அஞ்சலி அஞ்சலி தூபாஞ்சலி ஆண்டவர் அருள்வாக்கே அஞ்சலி 2 |