Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

அஞ்சலிப் பாடல் ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து  


அன்பின் அருட்பலியில்... அகமே காணிக்கை.... அருளே அஞ்சலி -
ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து
அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி
அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி
அன்பாகத் தந்தோம் எம் நேசத் தந்தாய்

அர்ப்பணத்தின் அஞ்சலி.. அன்புடனே எம்பலி

ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து
அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி
அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி
அன்பாகத் தந்தோம் எம் நேசத் தந்தாய்

நட்பு எனும் பூச்சூடி நெஞ்சங்கள் ஒன்றித்து
அப்பத்தின் வடிவத்தில் அன்புடன் எமைத் தந்தோம்
உன்பாச பலியில் பகையெல்லாம் மறைய
வெளிவேசம் களைந்து இகவாழ்வு மலர
அருட்பாதம் படைத்தோம் அடையாள வடிவில்

அர்ப்பணத்தின் அஞ்சலி.... அன்புடனே எம்பலி

ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து
அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி
அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி
அன்பாகத் தந்தோம் எம் நேசத் தந்தாய்

தியாகமதை மனதேற்றி நேசத்தில் நிதம் நிலைத்து
திராச்சை ரச வடிவத்தில் நிறைவுடன் எமைத் தந்தோம்
இனி வாழும் வாழ்வின் பொழுதெல்லாம் உமதாய்
இதயத்தின் சுவாசம் இறையாட்சி பதிக்க
அருள் வேண்டி வந்தோம் வாழ்வாகும் பலியில்

அர்ப்பணத்தின் அஞ்சலி... அன்புடனே எம்பலி

ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து
அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி
அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி
அன்பாகத் தந்தோம் எம் நேசத் தந்தாய்

அர்ப்பணத்தின் அஞ்சலி... அன்புடனே எம்பலி





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்