அஞ்சலிப் பாடல் | மலர்மிசை ஆகிய மன்னவா |
மலர்மிசை ஆகிய மன்னவா போற்றி நிலமிசை எங்கும் உன் திருப்பெயர் போற்றி ஏழிசை நாதனே ஈசனே போற்றி ஆழி சூழ் அவனியில் ஆண்டவா போற்றி தந்தையே போற்றி எந்தையே போற்றி இறைவனே போற்றி -2 மனங்கமழ் தூபமாய் எழுபவா போற்றி மனங்களில் தீபமாய் ஒளிர்பவா போற்றி தன்னையே பலியென தருபவா போற்றி உன்னையே உணவென அருள்பவா போற்றி யேசுவே போற்றி மைந்தனே போற்றி ஆயனே போற்றி-2 அக்கினிப் பிளம்பென வருபவா போற்றி அருட்பெரும் ஜோதியாய் எரிபவா போற்றி அருட்கொடை ஏழையும் பொழிபவா போற்றி ஆற்றலின் ஊற்றே ஆவியே போற்றி ஆவியே போற்றி ஆற்றலே போற்றி ஜோதியே போற்றி -2 |