Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 Gnana Oli

  இயற்கையோடு இயைந்தால்....  இயேசுவின் அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே வணக்கம். பட்ட காலிலே படும், கெட்ட நாடே கெடும் என்ற பழமொழிக்கேற்ப, இன்று நம் நாடு பலபல பேரழிவுகளை சந்திக்கத் தயாராகி கொண்டிருக்கின்றது.

கரோனாவிலிருந்தே இன்னும் முழுமையாக தப்பிப் பிழைக்க முடியாததால், அதனோடு குடும்ப நடத்த வாழ பழகிக் கொள்ளுங்கள், எங்களால் எதுவும் செய்ய முடியது என்று நம் தலைவர்கள்? சொல்லி வாய் மூடவில்லை , அதற்கடுத்தாக இப்போது வெட்டுக்கிளியின் படையெடுப்பில் நாடே கதி கலங்கிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய படையெடுப்பு தொடர்ந்து கொண்டேயிருந்தால், இதனைக்கட்டுப்படுத்தாவிட்டால் பல ஏக்கர் பயிர்களையும், உணவு தானியத்தையும் சில மணி நேரங்களிலேயே கபளீகரம் செய்துவிடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கப்படுகின்றது.

இப்படி கொள்ளை நோயும், இப்படி தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளைப் பார்க்கின்ற போது, மோயீசன் பாரவோன் மன்னனடம் தம் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையோடு நடந்த கொடூர தண்டனைகளால் தண்டிக்கப்பட்ட எகிப்து தேசத்தில் நாம் இருக்கின்றோமா என்ற எண்ணம் தான் நமக்கு வருகின்றது.
எந்தக் காலத்திலும் இப்படியாக நடந்ததாக நம் பாரத தேசம் பார்த்திருக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் தெரிகின்றது.

சாதாரணமாக இப்படி நடக்காது. இதற்கு ஏதாவது காரணமும், பின்னணியும் நிச்சயமாக இருக்கும். இப்படியாக நடக்கின்ற சமயத்தில், இறைவனும், இறைவனோடு சேர்ந்து இயற்கையும் ஏதாவதொரு செய்தியை நமக்கு உரத்து, உரைக்கச் சொல்லும். அது என்ன என்பதை நாம் தற்க்காலிகமாக பயத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டு அடக்கு வாசிப்பதும், எல்லாம் சாதாரண நிலைக்கு வந்த பிறகு, மீண்டும் எல்லாவற்றையும் விட்ட இடத்திலிருந்து தொடர்வது புத்திசாலித்தனமாகவும் இருக்காது. இதுதான் மனித இனம் வாழ்ந்த முறையாகும். அப்படியாக நாம் நடக்கும் போது, இறைவனும், இயற்கையும் மனித குலத்தின் மீதும் இவ்விலகின் மீதும் மீண்டும் தாங்கள் விட்ட இடத்திலிருந்து தங்களது விளையாட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

மனித வாழ்க்கை முழுவதும் இப்படியான படிப்பினைகள் விரவிக்கிடந்தாலும் மனித குலம் முழுமையான பாடம் படிக்கவில்லை .

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றாததால் இன்று இப்படியாக இந்த வெட்டுக்கிளிகளுக்குப் பயந்து கொண்டிருக்கின்றோம். சிட்டுக் குருவிகளின் உணவாக இந்த வெட்டுக்கிளிகள் இருக்கின்றன். அவற்றை வேட்டையாடித்தான் சிட்டுக் குருவிகள் தங்கள் இனத்தைக் காப்பாற்றிக் கொண்டதோடு, நமது விவசாய நிலங்களையும், தானியங்களையும் பாதுகாத்தன.

ஆனால் நாகரீகம் என்ற பெயரிலும், நவீன வளரச்சி என்ற பெயரிலும் சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கான சூழல் இல்லாமல்செய்துவிட்டுடோம். இன்று அவை அழியும் நிலையில் இல்லை. இப் ப டி யாக நடக்காதிருந்திருந்தால், இந்த வெட்டுக்கிளிகளின் கொட்டம் இன்னும் விரைவிலேயே அடக்கப்பட்டிருக்கும். அவற்றைச் செய்ய நம் நண்பர்கர்களாகவும், நம் வீட்டில் ஒருவராக இருந்த நம் சிட்டுக்குருவிகள் இருந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கமும், நம் தவறுகளின் வலியும் புரிகின்றது.

நமது மூளை குருடாயிருந்தால் நமது கண்களால் எதற்கும் பலனில்லை என்று சொல்ல வேண்டுமோ?

அவ்வப்பொழுது நாம் பிழைப்பதற்காக உரம் என்ற பெயரிலும், மரபணு மாற்றப் புரட்சி என்ற பெயரிலும் விவசாய நிலங்களை மலடாக்கி, பறவையினங்களை அழித்தோம், வெண்மைப் புரட்சி என்று வெள்ளை விஷமாக பாலை அருந்தி இன்று இந்திய தேசமே நோயாளிகளாக செயலாற்றலின்றி, தேங்கிப்போன சமூகமாக மாறியிருக்கின்றோம்.
பரபரப்ாக வேகமாக, சூப்பராக வரவேண்டும் என்ற அதிவேக வாழ்க்கை முறையாலும், புலியைப் பார்த்து சூடுபோடுக்கொண்ட பூனைகளாக நாம் மேற்க்கத்தி நாடுகளைப் போல வாழ முயன்று நம் வணக்கத்திற்குரிய முன்னோர்கள் கற்றுக் கொடுத்த இயற்கை விதிகளையும், வாழ்க்கை முறைகளையும், எல்லோரையும் சகோதர வாஞ்சையோடு அணுசரித்து ஒன்றாய் வாழும் முறைகளையும் மறந்து வாழ்வதை விட்டுவிட்டு, அதை மீண்டும் புதுப்பித்து, வாழ ஆரம்பிப்போம் என்றால், இயற்கையும், நம் இந்திய பறவையினங்களும் நம்மைக் காப்பாற்றும். நம் நாட்டு ஜூவராசிகளும் நாமும் ஆனந்தமாய் வாழலாம்.

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்