|
|
|
பொதுக்காலம்
25 ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு
வறியோரையும் வாங்கலாமா?
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம்
8: 4-7
வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே,
இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது
முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது
முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி,
கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும்
இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும்
விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?"
ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகின்றார்:
அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 113: 1-2.
4-6. 7-8 (பல்லவி: 1,7காண்க) Mp3
=================================================================================
பல்லவி: ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப்
போற்றுங்கள்.
2
ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும்
வாழ்த்தப் பெறுவதாக! - பல்லவி
4
மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்
விட உயர்ந்தது அவரது மாட்சி.
5
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில்
வீற்றிருப்பவர் யார்?
6
அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். - பல்லவி
7
ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக்
குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்;
8
உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை
அமரச் செய்கின்றார். - பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை
அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய
முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8
அன்பிற்குரியவர்களே,
அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து
பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத்
தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய்,
தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர்
நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம்
மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா
மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென
அவர் விரும்புகிறார்.
ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும்
ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின்
மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில்
அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும்
திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக்
கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே;
பொய் அல்ல.
எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு
கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
2 கொரி 8: 9
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும்
அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும்
பணிவிடை செய்ய முடியாது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 1-13
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: செல்வர் ஒருவருக்கு
வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப்
பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக்
கூப்பிட்டு, உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம்
பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய்
இருக்க முடியாது என்று அவரிடம் கூறினார்.
அந்த வீட்டுப் பொறுப்பாளர், நான் என்ன செய்வேன்? வீட்டுப்
பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கிவிடப் போகிறாரே! மண்
வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.
வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும்போது பிறர் என்னைத்
தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்
என எனக்குத் தெரியும் என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்
கொண்டார்.
பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார்.
முதலாவது வந்தவரிடம், நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?
என்று கேட்டார். அதற்கு அவர், நூறு குடம் எண்ணெய் என்றார்.
வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து
ஐம்பது என்று உடனே எழுதும் என்றார். பின்பு அடுத்தவரிடம்,
நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? என்று கேட்டார். அதற்கு
அவர், நூறு மூடை கோதுமை என்றார். அவர், இதோ, உம் கடன்
சீட்டு; எண்பது என்று எழுதும் என்றார்.
நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால்,
தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின்
மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய்
நடந்து கொள்ளுகிறார்கள்.
ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்
கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது
தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.
மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய்
இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும்
நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில்
நீங்கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச்
செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில்
நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக்
கொடுப்பவர் யார்?
எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய
முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு
கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய
முடியாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும்
பணிவிடை செய்ய முடியாது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
16: 10-13
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: மிகச் சிறியவற்றில் நம்பத்
தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச்
சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய்
இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?
பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப்
போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?
எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய
முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு
கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய
முடியாது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|