Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(9) 1 சாமுவேல்

 
1. 1சாமுவேல் என்னும் நூலில் இடம் பெறுவது என்ன?
     இதில் இஸ்ராயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. நீதித் 
     தலைவர்களின் காலம் அரசுரிமையின் காலமாக மாறியது குறித்தநிகழ்ச்சிகள்  
    இடம் பெறுகின்றன.

2. எல்கானா என்பவர் யார்?
    எரொகாமின் மகன் (1:1).

3. எல்கானாவின் மனைவியர் யாவர்?
    அன்னா, பெனின்னா (1:2).

4. எல்கானா தன் மனைவியரை ஆண்டுதோறும் எங்கே கூட்டிச் செல்வார்?
    சிலோவில் படைகளின் ஆண்டவரை வழிபட (1:3)

5. சிலோவில் குருவாக இருந்தவர்கள் யாவர்?
    ஏலியின் புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் (1:3).

6. அன்னா வழிபடும்போது அழுதது ஏன்?
   அவள் மலடியாக இருந்ததால், பெனின்னா அவளை துன்புறுத்தி வதைத்தாள்  
    (1:6).

7. அன்னா ஆண்டவரை நோக்கி மன்றாடியது என்ன?
    ஆண்டவர் அவருக்கு ஒர் ஆண் குழந்தையை தந்தால் அவனை அவன்வாழ்நாள் 
    முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதாக மன்றாடினார் (1:11).

8. குரு ஏலி, அன்னாவின் வேண்டுதலுக்கு என்ன பதிலளித்தார்?
    இஸ்ராயேலின் கடவுள் நீ அவாரி டம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக்
    கேட்டருள்வார் (1:77).

9. அன்னாவுக்கு பிறந்த மகன் பெயர் என்ன?
    சாமுவேல் (1:20).

10. அன்னா, ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றினாள்?
      சிலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து சிறுவனை ஏலியிடம்  
      ஒப்படைத்தாள் (1:24-25).

11. ஆண்டவர் அன்னாவுக்கு என்ன கைமாறு அளித்தார்?
      அன்னா, மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார் (2:21)

12. ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது என்ன?
     ஏலி தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும்   
     அவர்களைத்  தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டுக்கு நீங்காத    
     தண்டனை  தீர்ப்பு வழங்குவேன் என்று சாமுவேலிடம் கூறினார் (1:13).

13. ஆண்டவரின் வார்த்தைகளை ஏலியின் மூலமாக அறிந்த சாமுவேல் என்ன
      கூறினார்?

    அவர் ஆண்டவர்தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் 
    செய்யட்டும்"  என்றார் (3:18).

14. இஸ்ராயேல் பெலிஸ்தியருக்கு எதிராக போர் தொடுத்ததில் எத்தனை   
       இஸ்ரயேல்  மக்கள் இறந்தனர்?

      4000 பேர் (4:2).

15. இஸ்ராயேல் மக்கள் அதன்பிறகு என்ன செய்தனர்?
     வீரர்களை சிலோவுக்கு அனுப்பி உடன்படிக்கைப் பேழையை எடுத்து வர 
     செய்தனர் (4:4).

16. பேழையோடு வந்தது யார்?
      ஏலியின் இருபுதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் (4:4).

17. இரண்டாவது போரில் இஸ்ராயேலுக்கு நேர்ந்தது என்ன?
      30,000 காலாட்படையினர் மாண்டனர் (4:10).

18. கடவுளின் பேழை என்ன ஆனது?
     கடவுளின் பேழை பிலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது (4:11).

19. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதை அறிந்த ஏலிக்கு ஆனது என்ன?
     அவர் தம் இருக்கையினின்று பின்புறம் கதவருகே விழுந்து கழுத்து முறிந்து 
     இறந்தார் (4:18).

20. ஏலி சாகும் போது அவருக்கு வயது என்ன?
      98 வயது (4:15).

21. ஏலி இஸ்ராயேலை எத்தனை ஆண்டு ஆட்சி புரிந்தார்?
      40 ஆண்டுகள் (4:18).

22. பினகாசின் மனைவி இறந்தது எப்படி?
      தன் மகனைப் பெற்றெடுக்கும்பொழுது இறந்தார் (4:20).

23. பினகாசின் மனைவியின் கடைசி வார்த்தைகள் யாவை?
'     இஸ்ராயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது" (4:22).

24. பிலிஸ்தியர் கடவுளின் பேழையை என்ன செய்தார்கள்?
      தாகோன் சிலை அருகில் வைத்தனர் (5:2).

25. தாகோன் சிலை என்ன ஆனது?
      ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் வழுந்தது (5:3).

26. கடவுளின் பேழை பிலிஸ்தியரோடு எவ்வளவு காலமாக இருந்தது?
      ஏழு மாதம் (6:1).

27. கடவுளின் பேழையை இஸ்ராயேலுக்கு எவ்வாறு திருப்பி அனுப்பினர்?
      இருகறவைப் பசுக்களைக் கொண்டு இழுத்துச் செல்லும் வண்டியில் வைத்து
      அனுப்பினர் (6:10).

28. இஸ்ராயேலரால் பேழை எங்கே எடுத்துச் செல்லப்பட்டது?
      கிரியத்து எயாரிம் (6:21).

29. இப்பேழை எங்கே வைக்கப்பட்டது?
      அபினதாபின் வீட்டில் (7:1).

30. பேழையைக் காக்க யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது?
      அபினதாபின் மகன் எல்யாசர் 7:1).

31. இஸ்ராயேலின் நீதித்தலைவராக சாமுவேல் நியமிக்கப்பட்டது எங்கே?
     மிஸ்பாவில் (7:6).

32. பெலிஸ்தியர்கள் தோற்கடிக்கப்பட்டது எப்படி?
      பெலிஸ்தியர்மீது போரிடி முழங்கச்செய்து அவர்களை கலங்கடிக்க அவர்கள்  
       இஸ்ராயேலர் முன்பாகத் தோல்வியுற்றனர் (7:10).

33. நீதித் தலைவர்களாக சாமுவேல் யாரை நியமித்தார்?
      தம் புதல்வர்கள், யோவேல், அபியா (8:2).

34. இஸ்ராயேலின் பெரியோர், அரசரிடம் வேண்டிக் கேட்டது என்ன?
      சாமுவேலின் புதல்வர்கள் அவரது வழிமுறைகள்படி நடக்காததால் ஓர்  
      அரசனை  நியமிக்குமாறு கேட்டனர் (8:5).

35. அதற்கு சாமுவேல் அழித்த பதில் என்ன?
      உங்களுக்கு அரசர் நியமிக்கப்படும் என்றார் (8:9).

36. இஸ்ராயேலின் அரசராக நியமிக்கப்பட்டவர் யார்?
      சவுல் (9:26).

37. சவுலின் தந்தை பெயர் என்ன?
      கீசின் (10:21).

38. சவுல் அரசராக எவ்வாறு திருநிலைப்படுத்தப்பட்டார்?
      சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து அவர் தலைமீது வார்த்து திருநிலைப்
      படுத்தினார்  (10:1).

39. சவுல் தன் சிற்றப்பனிடம் திருநிலைப் படுத்துவதைப் பற்றி கூறினாரா?
      இல்லை (10:6).

40. இஸ்ராயேலர், சவுலை தங்களுடைய அரசராக தேர்ந்தெடுத்தது எப்படி?
      சீட்டுப்போட்டு (10:21).

41. யாபேசு நகரை எதிர்த்தது யார்?
      நாகாசு (11:1).

42. நாகாசு விதித்த நிபந்தனை என்ன?
     இஸ்ராயேலரின் ஒவ்வொருவரின் வலக்கண்ணும் பிடுங்கப்படவேண்டும்  
    அவர்கள் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்க வேண்டும் (11:2).

43. அவருடைய நிபந்தனைக்கு மக்களின் பதில் என்ன?
      ஏழுநாட்கள் தவணை தருமாறு கேட்டார்கள் (11:3).

44. மக்கள் செய்தது என்ன?
      சவுலிடம் செய்தியை சொன்னார்கள் (11:4).

45. நாகாசை எதிர்த்து போரிட, சவுல் எத்தனைபேரை சேர்த்தார்?
     இஸ்ராயேலின் மக்கள் மூன்று இலட்சம், யுதாவின் மக்கள் முப்பதாயிரம் (11:8).

46. நாகாசின் படை என்ன ஆனது?
      தோற்கடிக்கப்பட்டது (11:11).

47. சவுல்; அரசன் என்று எங்கே எடுத்துரைக்கப்பட்டது?
      கில்காலில் (11:15).

48. சவுலின் மகன் பெயர் என்ன?
      யோனத்தான் (13:16).

49. யோனத்தான் எதிரியை எவ்வாறு வீழ்த்தினார்?
      யோனத்தானும் அவருடைய வீரர்களும், பெலிஸ்தியரின் பாளையத்துக்குள் 
       நுழையும் பொழுது எபிரேயர் யோனத்தானுடன் இணைந்து கொண்டு   
       பெலிஸ்தியருக்கு எதிராக போரிட்டனர் (14:21).

50. சவுலின் இளைய புதல்வியின் பெயர் என்ன?
      மீக்கால் (14:49).

51. சவுலின் படைத்தலைவனாக இருந்தவர் யார்?
      ஆப்னேர் (14:50)

52. சவுலால் உயிருடன் பிடிக்கப்பட்ட அமலேக்கியரின் அரசர் யார்?
      ஆகாகு (15:8)

53. ஆகாகைக் கொன்றவர் யார்?
      சாமுவேல் (15:33)

54. கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது எனக் கூறியது யார்?
        சாமுவேல் (15:22)

55. ஆண்டவர் சாமுவேலை எங்கே அனுப்பினார்?
     பெத்லகேமைச் சேர்ந்த ஈசாயிடம் (16:1)

56. ஈசாயின் வீட்டுக்கு சாமுவேல் அனுப்பப்பட்ட காரணம் என்ன?
      ஈசாயின் புதல்வர்கள் ஒருவரை அசராகத் தேர்தெடுக்க (16:1)

57. சாமுவேல் அரசராக யாரை நியமித்தார் ?
      தாவீதை (16:13)

58. தாவீதை திருப்பொழிவு செய்துவிட்டு சாமுவேல் எங்கே சென்றார்?
      இராமாவுக்கு (16:13)

59. சவுலின் அரசவையில் தாவீது ஆற்றிய பணி என்ன?
     சவுலின் படைக்கலன் தாங்குபவராக இருந்தார் (17;20)

60. சவுல் தீய ஆவியிலிருந்து எவ்வாறு விடுதலை பெற்றார்?
      தீய ஆவி சவுலன் மீது இறங்கியபோதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். 
      தீய ஆவி அவரை விட்டு அகலும். (16:23)

61. இஸ்ராயேல் படைகளிடம் சவால் விட்ட பெலிஸ்திய வீரன் யார்?
      கோலியாத்து (17:10)

62. கோலியாத்தின் உயரம் என்ன?
      ஆறரை முழம் (17:4)

63. அவன் அணிந்திருந்த தலைக்கவசம் எப்படிப்பட்டது?

      வெண்கலத் தலைக்கவசம் (17:5)

64. கோலியாத்தை எதிர்த்து கொலை செய்பவருக்கு என்ன பரிசளிப்பதாக சவுல்  
      கூறினார்?

      அவருக்கு மிகுந்த செல்வமும், தன் மகளையும் மணமுடித்துத் தருவதாகவும் 
       கூறினார் (17:25)

65. கோலியாத்தை எதிர்த்துப் போரிட தாவீது எப்படிச் சென்றார்?
      தன் கவணைக் கையில் எடுத்துக் கொண்டு சென்றார் (17:40)

66. தாவீது கோலியாத்தை எவ்வாறு கொன்றான்?
      ஒரு கல்லை எடுத்து அதை ஒரு கவணில் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய
       நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அவன் தரையில் முகங்குப்புற 
       விழுந்தான். உடனே தாவீது அவனது வாளை உருவி அவனைக் கொன்று, 
       அவன் தலையைக் கொய்தார்.(17:49-51)

67. தாவீதுக்கு மிக நெருக்கமான நண்பனாக மாறியவர் யார்?
      யோனத்தான் (18:1)

68. சவுல் தாவீதின்மேல் சினம் கொண்டது ஏன்?
     சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் 
     எனப் பெண்கள் பாடியதால்.(18:7)

69. தாவீதுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவர் யார்?
      சவுலின் மகள் மீக்கால். (18:27)

70. சவுல் தன்மகன் யோனத்தானிடம் கூறியது என்ன?
      அவர் தாவீதைக் கொல்லப்போவதாகக் கூறினார். (19:1)

71. சவுல் தாவீதைக் கொல்லப்போகும் செயலை தாவீதுக்கு எச்சரித்தது யார்?
      யோனத்தான். (18:2)

72. மீக்கால் தாவீதை எவ்வாறு காப்பாற்றினார்?
     அவன் தாவீதை பல்கணி (ஐன்னல்) வழியாக இறக்கி விடவே அவரும் 
     அங்கிருந்து  தப்பி ஓடி விட்டார். (19:12)

73. தாவீது எங்கே தப்பி ஓடினார்?
      சாமுவேலைச் சந்திக்க இராமாவுக்குச் சென்றார். (19:18)

74. யோனத்தான் தாவீதை எவ்வாறு அன்பு செய்தார்?
      தம் உயிரென அன்பு கொண்டிருந்தார். (20:17)

75. தாவீது இராமாவிலிருந்து எங்கே சென்றார்?
      நாவோத்துக்கு. ( 19:23)

76. அதுலாமில் தாவீதோடு சேர்ந்தவரின் எண்ணிக்கை என்ன?
       சுமார் 400 பேர். (22:2)

77. சவுல் நோபுவின் குருக்களையும் மக்களையும் கொலை செய்தது ஏன்?
      தாவீது ஓடிப்போனதை அறிந்தும், அதை அவரிடமிருந்து மறைத்து விட்டதால். 
       (22:17)

78. இந்தக் கொலையைப் பற்றி தாவீதுக்கு தெரிவித்தவர் யார்?
      அகிமெலக்கின் புதல்வி அபியத்தார். (22:20)

79. தாவீது சவுலைக் கொலை செய்யாமல் விடக் காரணம் என்ன?
      ஏனெனில் சவுல் ஆண்டவரால் திருப் பொழிவு செய்யப்பட்டவர். 24:10)

80. சாமுவேல் எங்கு இறந்தார்?
      இராமாவில். ( 25:1)

81. தாவீதும், அவருடைய மக்களும் நாபாலுக்கு எதிராகச் சென்றது ஏன்?
      தாவீதின் மக்களுக்கு உணவு கொடுக்க மறுத்ததால். 25:11)

82. நாபாலின் மனைவி யார்?
      ஆபிகாயில். (25:3)

83. ஆபிகாயில் செய்தது என்ன?
       உணவு தயாரித்து தாவீது மக்களுக்குக் கொடுத்தார். (25: 18-19)

84. தாவீது நாபாலை உயிரோடு விட்டாரா?
      ஆம், அபிகாயின் வேண்டுதலால் நாபாலைக் கொலை செய்யவில்லை. (25:35)

85. நாபால் எப்போது இறந்தார்?
      சுமார் 10 நாட்களுக்குப் பின். ( 25:38)

86. அதன் பிறகு தாவீது செய்தது என்ன?
      ஆபிகாயிடம் ஆள் அனுப்பி தாவீது அவளை மணக்க விரும்புகிறார் 
      எனக் கூறினார்.   (25:40)

87. ஆபிகாயில் தாவீதை மணந்து கொள்ளச் சம்மதித்தாளா?
      ஆம். (25:42)

88. தாவீதின் வேறொரு மனைவியின் பெயர் என்ன?
      அகினோவாம். (25:43)

89. சவுல் குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடிச் சென்றது ஏன்?
      இறந்துபோன சாமுவேலிடம் பேசுவதற்காக. (28:11)

90. சாமுவேல் சவுலிடம் பேசினாரா?
      ஆம், ஆண்டவர் சவுலையும், இஸ்ராயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம்  
       ஒப்படைப்பார் என்றார். (28:19)

91. சவுல் பெலிஸ்தியர்களுக்கு எதிராக எங்கே போரிட்டார்?
      கில்போவா மலையில். ( 31:1)

92. கில்போவா மலையில் ஆனது என்ன?
      யோனத்தானும், அவருடைய சகோதரர்களும் கொல்லப்பட்டனர்.இஸ்ராயேல்  
      தோல்வியுற்றது. சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன் மீது விழுந்து 
       மடிந்தார்.  (31:4-5)
 

தூய அன்னை மரியே! வாழ்க தேவதாயே!
வரங்களை பொழிவாய் மனங்களில் இனிமை
வாழ்க எங்கள் தாயே !