Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(8)  ரூத்து

 

1. நகோமி என்பவர் யார்?
    எலிமலேக்கின் மனைவி (1:2)

2. அவர்கள் வாழ்ந்து இருந்த இடம் எது?
    பெத்லகேம் (1:1).

3. எலிமலேக்கின் மைந்தர்களின் பெயர் என்ன?
    மக்லோன், கிலியோன் (1:2).

4. இவர்கள் பெத்லகேம் விட்டு வெளியேற காரணம் என்ன?
    அங்கு கொடிய பஞ்சம் உண்டானதால் (1:1).

5. அவர்கள் அங்கிருந்து எங்கே சென்றார்கள்?
    மோவாபு நாட்டிற்கு (1:1).

6. மக்லோன், கிலியோன் இருவரும் யாரை மணந்தனா;?
    ஒர்பா, ரூத்து (1:4).

7. பத்து ஆண்டுகளுக்குப்பின் மோவாபில் நடந்தது என்ன?
     மக்லோனும், கிலியோனும் இறந்தனர் (1:5).

8. தன்னுடைய இருமகன்களும் இறந்த பிறகு நகோமி என்ன செய்தாள்?
   தன்  மருமகள்கள் இருவரையும் பார்த்து 'உங்கள் தாய்வீட்டிற்கு திரும்பிச்  
   செல்லுங்கள்" என்றார் (1:8).

9. மருமகள்கள் இருவரும் தங்களது தாய்வீட்டிற்குத் திரும்பினார்களா?
    ஒர்பா திரும்பிச்சென்றாள். ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார்.
    (1:14-15).

10. ரூத்தை நகோமி எங்கே கூட்டிச்சென்றார்?
     பெத்லகேம் (1:19).

11. பெத்லகேம் ஊர் பெண்கள் 'இவள் நகோமி தானே?"என கூறியபோது நகோமி  
      கூறியது என்ன?

     'என்னை நகோமி| என அழைக்காதீர்கள்; மாரா| என அழையுங்கள்" என்றார். 
     (1:20).

12. நகோமி ஏன் இவ்வாறு கூறினாள்?
      நகோமி| என்றால் இன்பம் மாரா| என்றால் கசப்பு. இவளுடைய வாழ்க்கை 
       கசப்பாக மாறினதால், இவளை மாரா என்று அழைக்குமாறு கேட்டுக் 
       கொண்டாள் (1:21).

13. நகோமியின் உறவினாரின் பெயர் என்ன?

     யோவாசு (2:1)

14. யோவாசு ரூத்தை கண்டார்?
      அவருடைய வயலில் (2:8).

15. அவர், ரூத்தை மணமுடித்துக் கொண்டாரா?
      ஆம் (4:13).

16. யோவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகனின் பெயர் என்ன?
     ஒபேது (4:17).

17. ஒபேதுவின்பெயர் ரூத்து என்னும் நூலில் இடம்பெற காரணம் என்ன?
     ஏனெனில் ஒபேது தாவீதுக்கு தாத்தா (4:22).
 

இருள் அகற்றும் ஒளிச்சுடரே நோயகற்றும் அருமருந்தே
உன் புகழை பாடவந்தோம்  லூர்து நகர் தாய்மரியே