Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(7)  நீதித் தலைவர்கள்

 
1. நீதித் தலைவர்கள் என்பவர்கள் யாராக இருந்தார்கள்?
     இவர்கள் வலிமைமிகு வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும்  
     ஆளுநர்களாகவும் இருந்தார்கள்.

2. யோசுவாவிற்கு அடுத்தபடியாக இஸ்ராயேலை வழிநடத்த நியமிக்கப்பட்டவர்  
     யார்?

     யூதா (1:2).

3. யூதாவிற்கு உதவியாக அவருடன் யாரை கூட்டிச் சென்றார்?
     தம் சகோதரராகிய சிமியோனை (1:3).

4. பெசக்கில் நடந்த போரினால் ஆனதென்ன?
     10,000 கானானியரும் பொரிசியரும் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் (1:4).

5. இஸ்ராயேல், அதோனிபெசக்கை பிடித்து என்ன செய்தனர்?
    அவரது கை, கால்களின் பெருவிரல்களை துண்டித்தனர் (1:7).

6. அதோனிபெசக்கின் கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்டபோது 
    அவர் கூறியது என்ன?

     'நான் செய்தவாறே கடவுள் எனக்கு செய்துள்ளார்" என்றார் (1:7).

7. யூதா எருசலேமை கைப்பற்றினாரா?
    ஆம் அதைக் கைப்பற்றி வாள்முனையால் மக்களை வெட்டி வீழ்த்தி நகரை  
    நெருப்புக்கு இரையாக்கினார் (1:8).

8. லுர்சு என்னும் நகரை கட்டியவர் யார்?
     இஸ்ராயேலர்களுக்கு பெத்தேலின் நுழைவாயிலை கட்டியவர் (1:24).

9. ஆண்டவாரின் தூதர் இஸ்ராயேல் மக்களுக்கு தோன்றியது எங்கே?
    பொக்கிம் (2:1).

10. கடவுள் இஸ்ராயேலை மெசப்பொத்தாமியா மன்னனிடம் எட்டாண்டுகள்   
      ஒப்படைத்தது ஏன்?

      ஏனெனில் அவர்கள் பாகாலுக்கு ஊழியம் செய்தனர் (3:7).

11. இஸ்ராயேல் மக்கள் மோவாபின் மன்னனுக்கு எத்தனை ஆண்டுகள்          
      அடிமைகளாக இருந்தனர்?

      18 ஆண்டுகள் (3:14).

12. மோவாபு மன்னனை கொன்று இஸ்ராயேல் மக்களை விடுதலை செய்தது யார்?
       ஏகூது (3:15)

13. மோவாப் மன்னனின் இறப்பிற்கு பிறகு இஸ்ராயேல் மக்கள் எத்தனை   
      ஆண்டுகள் அமைதியாக இருந்தனர்?

       80 ஆண்டுகள் (3:30).

14. ஏகூது இறந்தபிறகு இஸ்ராயேல் மக்கள் என்ன செய்தனர்?
      அவர்கள் மீண்டும் பாகாலை வழிபட்டனர் (4:1).

15. தெபோரா என்பவர் யார்?
     இஸ்ராயேலருக்கு இறைவாக்கினரும், நீதித்தலைவியுமாக இருந்தவர் (4:4).

16. தெபோரா காலத்தில் கானானியர்களின் தலைவராக இருந்தவர் யார்?
      சீசரா (4:12).

17. சீசராவிடம் இருந்த இரும்புத் தேர்கள் எத்தனை?
      900 (4:13).

18. சீசராவுக்கு எதிராக போர்புர்ரிந்தவர்கள் யார்?
       பாராக்கும், அவருடைய 10,000 பேரும் (4:14).

19. சீசராவைக் கொன்றது யார்?
     எபோரின் மனைவி யாவேல் (4:21).

20. சீசரா இறந்த பிறகு இஸ்ராயேலர் எத்தனை ஆண்டுகள் அமைதியாக
      வாழ்ந்தனர்?

      40 ஆண்டுகள் (5:31).

21. கிதியோனுக்கு ஆண்டவாரின் தூதர் எங்கு தோன்றினார்?
      ஒபிரா (6:11-12).

22. கடவுள் கிதியோனுக்க கூறியது என்ன?
      மிதியானியாரின் கையிலிருந்து இஸ்ராயேலரை விடுவிக்குமாறு கூறினார் 
      (6:14).

23. அதற்கு கிதியோன் என்ன செய்தார்?
      தன் தந்தையால் கட்டப்பட்ட பாகாலின் பலி பீடத்தை தகர்த்தெறிந்தார் (6:30).

24. கிதியோனின் போர்வீரர்களில் எத்தனைபேர் விட்டுக்குத் திருப்பி 
      அனுப்பப்பட்டனர்?

        22,000 பேர் (7:3).

25. மிதியானியரை எதிர்த்து போராட கிதியோனோடு எத்தனைபேர் சென்றனர்?
      300 பேர் (7:7).

26. கிதியோனின் வேலையாள் பெயர் என்ன?
      பூரா (7:10).

27. கிதியோனும் அவருடைய வேலையாளும் எதிரிகளின்  பாளையத்திற்கு   
      சென்றடைந்தபோது அவர்கள் கேட்டது என்ன?

       கனவையும் அதன் பொருளையும் அவனை கூறக் கேட்டார்கள் (7:15).

28. படைவீரனின் கனவு என்ன?
      வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியாரின் பாளையத்திற்குள் 
      சுழன்று வந்தது (7:13).

29. இக்கனவின் அர்த்தம் என்ன?
      கிதியோனின் வாள் மிதியானோரை அழித்துவிடும்(7:14).

30. கிதியோன் தன் 300 போர்வீரர்களின் கையில் என்ன கொடுத்தார்?
      எக்காளங்களையும், காலிப் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் 
      வைக்க நெருப்புப் பந்தங்களையும் கொடுத்தார் (7:16).

31. கிதியோனின் 300 போர்வீரர்களும் என்ன செய்தார்கள்?
   அவர்கள் பாளையத்தை சுற்றிலும் எக்காளம் ஊதிக்கொண்டு ஆண்டவருக்காக! 
    கிதியோனுக்காக! என்று முழங்கினர் (7:20).

32. மிதியானியாரின் வீரர்களுக்கு என்ன ஆனது?
      ஒவ்வொருவனும் மற்றவன் மீது வாள் வீசி இறந்தனர்(7;:22).

33. அன்று மொத்தம் இறந்த போர் வீரர்கள் எத்தனை?
      1,20,000 போர் வீரர்கள் (8:11).

34. கிதியோனால் பிடிக்கப்பட்ட இரு மிதியான் மன்னர்கள் யார்?
      செபாகு, சல்முன்னா (8:21).

35. கிதியோன்; சுக்கோத்து, பெனுவேல் இவ்விரு நகரங்களையும் தண்டிக்க 
       காரணம் என்ன?

      இவ்விரு நகரங்களும் அவருக்கு பின்னே வருபவர்களுக்கு உணவு கொடுக்க  
      மறுத்ததினால்(8:5லி9).

36. மிதியானாரின் மன்னர்களை கொலை செய்ய யாருக்கு கட்டளையிடப்பட்டது?
      தம் தலைமகன் எத்தேருக்கு (8:20)

37. எத்தேர் மன்னர்களை கொலை செய்ய மறுத்தது ஏன்?
       ஏனெனில் அவன் சிறுவனாக இருந்தான் (8:20).

38. இஸ்ராயேலர் கிதியோனிடம் கேட்டது என்ன?
     அவர்களுடைய மன்னராக இருக்கும்படி கேட்டனர் (8:22).

39. கிதியோனின் பதில் என்ன?
      நான் உங்களை ஆளமாட்டேன் என் மகனும் உங்களை ஆளமாட்டான். 
     ஆண்டவரே உங்களை ஆள்வார் (8:23).

40. கிதியோனுக்கு மொத்தம் எத்தனை புதல்வர்கள் இருந்தனர்?
      70 பேர் (8:30).

41. அபிமெலக்கு என்பவர் யார்?
      எருபாகாலின் மகன்.

42. அபிமெலக்கு இஸ்ராயேல் மன்னனாக ஆனது எப்படி?
      தனது எழுபது சகோதரர்களையும் கொன்று மன்னனாக ஆனான் (9:6).

43. இந்த எழுபது போரில் யாராவது தப்பித்தாரா?
      ஆம் கடைசி சகோதரன் மட்டும் ஒளிந்து கொண்டதால் தப்பித்தான் (9:5).

44. யோத்தாம் அபிமெலக்கை எங்கிருந்து சபித்தான்?
      கொரிசிம் மலையிலிருந்து (9:7).

45. அபிமெலக்கு இஸ்ராயேல் மக்கள் மீது எத்தனை ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்?
      3 ஆண்டுகள் (9:22).

46. அபிமெலக்கு எவ்வாறு இறந்தான்?
     அபிமெலக்கு தெபேசு நகரை கைப்பற்ற சென்றபொழுது ஒருபெண் அரைக்கும் 
      கல் கொண்டு அவனைச் சாகடித்தார் (9:53).

47. தான் சாகும்பொழுது அபிமெலக்கு படைக்கலம்  தாங்கியிருந்த
       பணியாளனிடம் கூறியது என்ன?

       'உன் வாளை உருவி, ஒரு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் 
       பற்றி சொல்லாதபடி என்னைக் கொன்றுவிடு" என்றார் (9:54).

48. அபிமெலக்குக்குப் பின் இஸ்ராயேல் மன்னராக நியமிக்கப்பட்டவர் யார்?
       தோலா (10:1).

49. தோலா எத்தனை வருடங்கள் நீதித் தலைவராக இருந்தார்?
       23 ஆண்டுகள் (10:2).

50. தோலாவுக்குப் பின் ஆட்சிபுரிந்தது யார்?
       யாயீர் (10:3).

51. இப்தா என்பவர் யார்?
      இவர் ஒரு விலைமாதின் மகன் (11:1).

52. இப்தா தன்னுடைய தந்தையின் வீட்டிலிருந்து துரத்தப்பட்டது ஏன்?
      அவ்வீட்டில் அவருக்குப் பங்கு இல்லாததாலும் வேறொரு பெண்ணின்    
       மகனாயிருந்ததாலும் (11:2).

53. இப்தா தன் தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு எங்கு வாழ்ந்து 
       வந்தார்?

      தோபு நாட்டில் (11:3).

54. இப்தா அம்மோனியருக்கு எதிராகப் போரிடச் சென்றபோது ஆண்டவருக்கு 
      அவர் அளித்த வாக்கு என்ன?

      அம்மோனியாரிடமிருந்து வெற்றியோடு திரும்பும்பொழுது யார் என்னைச்  
      சந்திக்க என்வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர்   
      ஆண்டவருக்கு உரியவர் அவரைக் கொண்டு வந்து எரிபலியாக்குவேன்(11:31)

55. இவ்வாறு அவர் வெற்றியோடு வீடு திரும்பும்போது அவர் யாரை சந்தித்தார்?
      அவருடைய மகள் (11:34).

56. தன் தந்தையிடம் அவள் வேண்டியது என்ன?
      'இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள் நான் மலைகளில் சுற்றித் 
       திரிந்து எனது கன்னிமை குறித்து  என் தோழியருடன் துக்கம் 
       கொண்டாடுவேன்" (11:37).

57. இரண்டு மாதங்களுக்கு பிறகு என்ன ஆனது?
       தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்கு செய்தார் (11:39).

58. இப்தாவின் புதல்வியின் இறப்பை இஸ்ராயேல் மகளிர்  எப்படி நினைவு
      கூர்ந்தனர்?

      ஆண்டுதோறும் நான்கு நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள் (11:40).

59. இப்தா எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
      ஆறு ஆண்டுகள் (12:7).

60. இப்தாவுக்குப் பிறகு இஸ்ராயேலை ஆட்சி செய்தவர் யார்?
      இப்சான் (12:8).

61. சிம்சோனின் தந்தை பெயர் என்ன?
      மனோவாகு (13:22).

62. ஆண்டவரின் தூதர் மனோவாகுவின் மனைவியிடம் கூறியது என்ன?
      'நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய் சவரக்கத்தி அவன் தலைமீது 
       படக்கூடாது" (13:5).

63. சிம்சோன் முதலில் யாரை மணந்தார்?
      பெலிஸ்திய மகளிருள் ஒருவரை (14:2).

64. திமினாவில் கண்ட சிங்கக்குட்டியை சிம்சோன் எவ்வாறு கொன்றார்?
      அவர் தன்னுடைய வெறுங்கையால் இரண்டாக கிழித்தார் (14:6).

65. சிம்சோன் தன் மனைவி வீட்டாரிடம் கேட்ட விடுகதை என்ன?
      'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது, வலியவனிடமிருந்து இனியது 
        வந்தது" (14:14).

66. அவர்கள் இவ்விடுகதைக்கு விடை எப்படி கண்டுபிடித்தார்கள்?
       சிம்சோனின் மனைவியின் மூலமாக (14:17).

67. இவ்விடுகதையின் விடை என்ன?
     தேனும், சிங்கமும் (14:18).

68. சிம்சோனின் மனைவி யாருக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டது?
      அவருடைய தோழனுக்கு (15:2).

69. சிம்சோன் கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு எத்தனை பிலிஸ்தியரைக்
      கொன்றார்?

       1000 பேரை (15:15).

70. இலேகியில் நடந்தது என்ன?
      கடவுள் ஒரு நிலப்பிளவிலிருந்து சிம்சோனுக்கு தண்ணீர் கொடுத்தார் (15:19).

71. சிம்சோன் எத்தனை ஆண்டுகள் இஸ்ராயேலுக்கு நீதித் தலைவராக இருந்தார்?
      20 ஆண்டுகள் (15:20).

72. சிம்சோன் காசாவிலிருந்து எப்படி தப்பினார்?
      அவர் நள்ளிரவில் எழுந்து நகர்வாயில் கதவுகளைப் பிடுங்கி தோள்களின்மீது   
      வைத்துக் கொண்டு தப்பினார் (16:3).

73. சோரேக்குப் பள்ளத்தாக்கில் சிம்சோன் மணந்தது யாரை?
       தெலீலா (16:4).

74. சிம்சோனை அழிப்பதற்காக, பெலிஸ்தியச் சிற்றரசர்கள் தெலீலாவுக்கு 
       எவ்வளவு காசு கொடுத்தனர்?

       1,100 வெள்ளிக்காசு (16:5).

75. சிம்சோனின் பெரும் வலிமையின் இரகசியம் என்ன?
      சவரக் கத்தியே படாத அவரது தலைமுடி, அவரது தலை மழிக்கப்பட்டால்   
      அவரது ஆற்றல் அகன்றுவிடும் (16:17).

76. சிம்சோன் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்?
      தெலீலா, அவரை தன் மடியில் தூங்கவைத்து, ஓர் ஆளைக் கூப்பிட்டு 
      அவருடைய தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். 
      பெலிஸ்த்தியர்கள் அவரைப் பிடித்தனர் (16:19).

77. சிறைபிடிக்கப்பட்ட சிம்சோனை பிலிஸ்தியர் என்ன செய்தனர்?
      அவர் கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு சிறையில் அரைக்கும் வேலைக்கு
      அவரை உட்படுத்தினர் (16:21).

78. சிறையிலிருந்து சிம்சோனை வெளியில் கொண்டுவர காரணம் என்ன?
      மக்களுக்கு வேடிக்கை காட்டுவதற்காக (16:25).

79. சிம்சோனைப் பார்க்க கூடியிருந்தோர் எத்தனை பேர்?
       ஏறக்குறைய 3000 பேர் (16:27).

80. அங்கு கூடியிருந்த மக்களை சிம்சோன் எவ்வாறு கொன்றான்?
      அந்த வீட்டை தாங்கிநின்ற நடுத்தூண்களையும் கீழேசாய்த்து அவர்களை
       கொன்றார் (16:29-30).

81. சிம்சோனும் அவர்களோடு இறந்தாரா?
      ஆம் (16:31).

82. பென்யமின் மக்களுக்கு எதிராக போர்தொடுக்க இஸ்ராயேலரை வழி
       நடத்தியது யார்?

       யூதா (20:18).

83. இந்தப் போருக்குப் பிறகு இஸ்ராயேலாரின் நிலமை எப்படி இருந்தது?
      இஸ்ராயேலுக்கு அரசன் இல்லாததால் ஒவ்வொருவரும்அவரவர் பார்வையில் 
      நேர்மையெனப்பட்டதை செய்து  கொண்டிருந்தனர் (21:25).



 

கவலை மோதி வாட்டும் எமைக் காப்பதுன் கடமை,
தபமும் தயையும் நிறையும் மரியே அபயம் எங்கள் தாயே!