| 1. யோசுவா என்பவர் யார்? நூனின் மகனும் மோசேயின் உதவியாளரும் (1:1). 2. ஆண்டவர் யோசுவாவிடம் கூறியது என்ன? புறப்பட்டு யோர்தானை கடந்து செல்லுமாறு கூறினார் (1:2). 3. யோசுவா இரண்டு ஒற்றர்களை எங்கே அனுப்பினார்? எரிக்கோ நகருக்கு (2:1). 4. இவ்விரு ஒற்றர்களும் எங்கே தங்கியிருந்தார்கள்? இராகாபு என்ற விலைமாதின் வீட்டில் (2:1). 5. இஸ்ராயேல் ஒற்றர்களை பிடிக்கவந்த ஆட்களிடம் இராகாபு செய்தது என்ன? அவர்களை ஒளித்து வைத்தார் (2:6). 6. இராகாபு தன்னுடைய குடும்பத்தாரை வாழவிடுமாறு ஒற்றர்களை கேட்டபோது அவர்கள் அவருக்கு வாக்களித்தது என்ன? நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம், நம்பிக்கையூடன் நடந்து கொள்வோம் என்றனர் (2:14). 7. ஒற்றர்கள் இராகாபுக்கு அடையாளமாக கொடுத்தது என்ன? சிகப்புக் கயிற்றை சன்னலில் கட்டி வைக்குமாறு கூறினார்கள் (2:18). 8. லேவியக் குருக்கள் உடன்படிக்கை பேழையை தூக்கி யோர்தானை கடக்கும் போது நடந்தது என்ன? யோர்தான் தண்ணீர் இரண்டாக பிரிந்து நின்றது (3:15). 9. மக்கள் யோர்தானை எவ்வாறு கடந்தனர்? வரண்ட தரை வழியாக கடந்தனர் (3:17). 10. யோர்தான் கரையிலிருந்து பன்னிரு கற்களை எடுத்துச் செல்லுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது ஏன்? யோர்தானில் நடந்த புதுமையை நினைவுட்டுவதற்காக (4:7). 11. இவ்வாறு கொண்டுவந்த பன்னிரு கற்களை எங்கே நிலைநாட்டினர்? கில்காலில் நாட்டினர் (4:20). 12. கானானியர்கள் கலக்கமுற்றது ஏன்? ஆண்டவர் இஸ்ராயேலர் கண்முன் அவர்கள் கடக்கும்வரை யோர்தான் நீரை வற்றச் செய்ததை நினைத்து கலக்கமுற்றனர் (5:1). 13. மக்களுக்கு மன்னா வழங்குவது எப்போது நிறுத்தப்பட்டது? நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது (5:12). 14. எரிகோவில் யோசுவா முன் தோன்றியது யார்? ஆண்டவரின் படைத்தலைவன் (5:14). 15. எரிகோவின் மதில்கள் எவ்வாறு இடிந்து விழுந்தன? மக்களை பேரொளி எழுப்பியாதால் மதில்கள் இடிந்து விழுந்தன (6:20). 16. எரிகோ நகர் மக்களுக்கு ஆனது என்ன? அனைவரும் சாகடிக்கப்பட்டனர் (6:21). 17. யார் யாரெல்லாம் காப்பாற்றப்பட்டனர்? இராகாபும் அவரது குடும்பத்தினரும் (6:25). 18. ஆண்டவர் எரிகோவில் மக்கள் மீது சினம் கொண்டதேன்? யூத குலத்தைச் சார்ந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்துகொண்டதால் (7:1) 19. ஆக்கானின் பாவத்தால் இஸ்ராயேல் மக்களுக்கு ஏற்பட்டது என்ன? ஆயிநகரை கைப்பற்ற முடியவில்லை. மேலும் 36பேர் கொல்லப்பட்டனர் (7:4-5). 20. ஆக்கான் தண்டிக்கப்பட்டது எங்கே? ஆக்கான் பள்ளத்தாக்கில் (7:24-25). 21. ஆக்கான் எவ்வாறு தண்டிக்கப்பட்டான்? இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர் 7:25) 22. ஆயி நகரை கைப்பற்ற யோசுவா எத்தனை போர்வீரர்களை அனுப்பினார்? 30,000 போர்வீரர்களை (8:3). 23. ஆயி நகாரில் கொலைசெய்யப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை என்ன? 12,000 (8:25). 24. ஆயி மன்னனுக்கு நேர்ந்தது என்ன? அவரைத் தூக்கிலேற்றினர் (8:29). 25. கிபயோனியர் செய்தது என்ன? அவர்கள் இஸ்ராயேல் மக்களோடு சமாதானம் செய்து கொண்டனர் (9:25). 26. ஐந்து மன்னர்கள் ஒன்றுகூடி கிபயோனுக்கு எதிராக போர்தொடுத்தது ஏன்? அவர்கள் இஸ்ராயேலுடன் சமாதானம் செய்து கொண்டதால் (10:1). 27. கிபயோனுக்கு உதவியாக யோசுவா சென்றாரா? ஆம் (10:7). 28. யோசுவா, இந்த ஐந்து மன்னர்களையும் தண்டித்தது எப்படி? அவர்களை வாளால் வெட்டிக் கொன்று ஐந்து மரங்களில் தொங்கவிட்டார் (10:26). 29. யோசுவா மொத்தம் எத்தனை மன்னர்களை அழித்தார்? 31 மன்னர்களை (12:24). 30. காலேபுக்கு கிடைத்த பங்கு என்ன? எபிரோன் (15:13). 31. காலேபு தம் மகள் அக்சாவை தன் சகோதராரின் மகனுக்கு மனைவியாக கொடுத்தது ஏன்? ஏனெனில் கிரியத்து சேபேரைக் கைப்பற்றுபவருக்கு தன்னுடைய மகளை மனைவியாகத் தருவதாக வாக்களித்திருந்தார் (15:76). 32. யோசுவா இஸ்ராயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டிய இடம் எது? செக்கேம் (24:1). 33. யோசுவா இறக்கும்போது அவருக்கு வயது என்ன? 110 வயது (24:29). 34. அவரை எங்கே அடக்கம் செய்தனர்? திம்னத் செரா (24:30). 35. இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த யோசேப்பின்எலும்புகளை எங்கே புதைத்தனர்? செக்கேமில் உள்ள ஒரு நிலப்பகுதியில் (24:32). |