1. இணைச்சட்டம் என்னும் இந்நூல் கூறுவது என்ன? இஸ்ராயேல் மக்கள் பாலை நிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்கு சற்றுமுன் அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பே இந்நூலின் உள்ளடக்கம். 2. அராபாவுக்கும் ஒரேபுக்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பதினோரு நாள் பயணத் தொலைவு (1:2). 3. இஸ்ராயேல் எகிப்தை விட்டு வந்ததிலிருந்து எத்தனை வருடங்கள் கழிந்தன? நாற்பது வருடங்கள் (1:3). 4. சேயிர் நாட்டில் வாழ்ந்தது யார்? ஏசாவின் புதல்வர்கள் (2:5). 5. ஏசாவின் புதல்வர்களைக் கொண்டு ஆண்டவர் என்ன செய்ய சொல்லி மக்களிடம் கூறினார்? அவர்களிடமிருந்து விலைக்கு உணவு வாங்கி உண்ணவும், விலைக்குத் தண்ணீர் வாங்கிக் குடிக்கவும் கூறினார். (2:6). 6. ஆர் பகுதி யாருக்கு உடைமையாகக் கொடுக்கப்பட்டது? லோத்தின் புதல்வருக்கு (2:9). 7. கானான் நாட்டைக் காண, மோயிசனுக்கு ஆண்டவர் எங்கு செல்லுமாறு கட்டளையிட்டார்? பிஸ்கா மலைக்கு (3:27). 8. பெகோரில் இஸ்ராயேலுக்கு நேர்ந்தது என்ன? பெகோரில் பாகாலை வழிபட்டவர்கள் அனைவரையும் கடவுள் அழித்தார் (3:3). 9. இஸ்ராயேலர் பன்றி இறைச்சியை உண்ண அனுமதிக்கப்பட்டார்களா? இல்லை (14:8). 10. அடிமைகளுக்கென கொடுக்கப்பட்ட சட்டம் என்ன? ஆறு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஏழாம் ஆண்டு அவர்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் (14:12). 11. சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டால் அவருடைய உடலை என்ன செய்ய வேண்டும்? அவரை அன்றே அடக்கம் செய்ய வேண்டும் (21:23). 12. ஆடைகள் அணிவது, குறித்த கட்டளைகள் என்ன? ஆண்களின் ஆடைகளை பெண்கள் அணியலாகாது பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது (22:5). 13. விபச்சாரத்திற்கான தண்டனை என்ன? அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவன் இருவரும் சாகடிக்கப்பட்ட வேண்டும் (22:22). 14. அடுத்தவர் விளைநிலத்திலிருந்து உண்ணலாமா? விருப்பம்போல் பறித்து உண்ணலாம் ஆனால் கூடையில் எதையும் வைத்தலாகாது (23:24). 15. ஒருவன் மணவிலக்கு செய்த தன் மனைவி வேரொருவரை மணந்து விதவையானால் அவளை மீண்டும் தன் மனைவியாக்கிக் கொள்ளலாமா? இல்லை (24:4). 16. மோயிசனுக்கு பிறகு இஸ்ராயேலரை வழி நடத்த நியமிக்கப்பட்டவர் யார்? யோசுவா (31:14). 17. மோசே திருச்சட்டத்தை நூலாக எழுதிமுடித்த பின்பு அதை எங்கே வைத்தார்? உடன்படிக்கைப் பேழையின் அருகில் வைத்தார் (31:26). 18. ஆண்டவர் மோசேவை எங்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்? நெபோ மலைக்கு (34:1). 19. நெபோ மலையில் அவருக்கு நேர்ந்தது என்ன? அங்கே இறந்தார் (34:5). 20. மோசே இறக்கும்பொழுது அவருக்கு வயது என்ன? 120 (34:7). 21. மோசேவை எங்கே அடக்கம் செய்தனர்? பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் (34:6). 22. இஸ்ராயேல் மக்கள் மோசேவுக்காக எங்கே துக்கம் கொண்டாடினார்கள்? மோவாச் சமவெளியில் (34:8). 23. அவர்கள் எத்தனை நாட்கள் துக்கம் கொண்டாடினார்கள்? 30 நாட்கள் (34:8). 24. மோசேவின் கல்லறை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதா? இல்லை (34:7). |