01. இந்நூல் எதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது? இஸ்ராயேலர் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்தது வரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பே இந்நூல். 02. ஆண்டவர் மோயீசனிடம் எப்பொழுது கணக்கெடுக்கும்படி கூறினார் ? இஸ்ராயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல்நாள்;. (1:1-2). 03. கணக்கெடுக்கும் போது இஸ்ராயேலர்கள் எங்கிருந்தனர் ? சீனாய் பாலைநிலத்தில்.(1:1). 04. யார் யாரையெல்லாம் கணக்கெடுக்கும்படி கூறினார் ? இருபதோ அதற்கு மேலோ வயதுடைய போருக்குச் செல்லத்தக்க அனைவரையும். (1:3). 05. மோயிசனுக்கும், ஆரோனுக்கும் துணையாக யார் நியமிக்கப்பட்டார்கள்? ஒவ்வொரு குலத்தின் வீட்டுத்தலைவனும். (1:5). 06. மொத்தம் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை என்ன? 603,550 (1:46). 07. எந்த குலத்தவரின் எண்ணிக்கை எடுக்கப்படவில்லை? லேவி (1:49). 08. ஏன் லேவி குலத்தை மட்டும் எண்ணவில்லை? ஆண்டவர் இக்குலத்தின் கணக்கெடுப்பு எடுக்கவேண்டாம் என்றார் (1:49). 09. லேவி குலத்திற்கு என்ன பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது? உடன்படிக்கைக் கூடாரத்தின் பொறுப்பை (1:50). 10. லேவி குலத்தவர் எங்கே பாளையமிறங்கினர் ? உடன்படிக்கை கூடாரத்தைச் சுற்றி (1:53). 11. முதலில் அணிவகுத்து செல்ல வேண்டிய குலம் எது? யுதாவின் கொடியுடைய பாளையத்தவர் (2:9). 12. யுதா அணியினரின் எண்ணிக்கை என்ன? 186,400 (2:9). 13. இறுதியாக அணிவகுத்து செல்லவேண்டிய குலம் எது? டோர் குலம் (2:31). 14. டோர் குலத்தின் மொத்த எண்ணிக்கை என்ன? 157,600 (2:31). 15. ஆரோனின் இறந்த மகன்களுக்கு பதிலாக குருக்களாக யார் நியமிக்கப்பட்டார்கள்? எலயாசர், இத்தாமர் (3:4). 16. ஆரோனுக்கு பணிவிடை புரிய நியமிக்கப்பட்ட குலம் எது? லேவி குலம் (3:6). 17. குருத்துவ பணி செய்ய நியமனம் செய்யப்பட்டவர்கள் யாவர் ? ஆரோனும், அவன் புதல்வரும் (3:10). 18. லேவியின் புதல்வர்கள் பெயர் என்ன? கேர் சோன், கோகாத்து, மெரார்ரி (3:17). 19. லேவியர் குலத்தின் மொத்த எண்ணிக்கை என்ன? 22,000 (3:39). 20. இஸ்ராயேல் மக்களின் தலைப்பேறுகள் மொத்தம் எத்தனை? 22,273 (3:43). 21. லேவியர் எத்தனை வருடம் கூடாரப் பணிகளைச் செய்யலாம்? இருபத்தைந்து வயதுக்கு மேலும் ஐம்பது வயதுக்குள்ளும் (8:24). 22. எக்காளம் முழங்க யார் நியமிக்கப்பட்டது? ஆரோனின் புதல்வர்கள் (9:8). 23. தபேரா என்னும் இடத்தில் நடந்தது என்ன? மக்கள் தங்கள் கடினப் பாடுகளைப் பற்றி முறையிட்டதால் ஆண்டவர் சினம் கொண்டு பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை ஆண்டவர் எரித்து விட்டார் (11:1). 24. 'தபேரா"என்பதன் பொருள் என்ன? எபிரேயத்தில் 'எரிந்து கொண்டிருப்பது" என்று பொருள் (11:3). 25. இஸ்ராயேல் மக்கள் மோயிசனைப் பற்றி தவறாக பேசியது ஏன்? பலர் உணவிலே மிகவும் விருப்பம் கொண்டிருந்தனர். எகிப்தில் உண்ட மீன், வெள்ளாரிக்காய் போன்றவற்றின் மேல் ஆர்வம் காட்டியதால் (11:5). 26. மன்னா எவ்வாறு தோற்றமளித்தது? கொத்துமல்லி விதைபோன்றும் முத்துப் போன்றும் இருந்தது (11:7). 27. ஆண்டவர் இஸ்ராயேல் மக்களுக்கு இறைச்சியளித்தாரா? ஆம், அவர்களுக்கு காடைகளை அனுப்பினார் (11:31). 28. மோயிசன் எப்படிப்பட்ட மனிதராக திகழ்ந்தார் ? பூவுலகில் அனைத்து மாந்தாரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார் (12:3). 29. மிரியாமைக்கு ஏன் தொழுநோய் பிடித்தது? மிரியாமை மோயிசனுக்கு எதிராக பேசியதால் (12:1). 30. இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு குலத்தின் தலைவரையும் மோயிசன் எங்கே அனுப்பினார் ? கானான் நாட்டை உளவு பார்க்க (13:17). 31. அவர்கள் எத்தனை நாட்களுக்கு பிறகு திரும்பி வந்தனர் ? 40 நாட்களுக்குப் பின் (13:25). 32. அவர்கள் கொண்டு வந்த செய்தி என்ன? அந்நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது. அங்கு வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள் (13:27,28). 33. கானான் நாட்டை முதலில் சென்று பிடித்துக் கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டது யார்? காலேபு (13:30). 34. கானான் நாட்டிற்கு உளவு பார்க்க சென்றவர்களில் இருவர் மட்டும் தண்டனை பெறவில்லை. அவர்கள் யாவர் ? யோசுவாவும்? காலேபும் (14:6). 35. ஓய்வு நாளை மீறி விறகு பொறுக்கிய மனிதன் என்ன ஆனான்? கல்லால் எரிந்து கொலை செய்யப்பட்டான் (15:36) 36. மோயிசனுக்கு எதிராக எழும்பிய 250 தலைவர்களுக்கு நேர்ந்தது என்ன? ஆண்டவாரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு அவர்களை விழுங்கிவிட்டது (16:35) 37. இந்த 250 பேருக்கும் தலைவர் யார் ? கோராகு (16:6). 38. தாத்தான்? அபிராம் இவ்விருவருக்கும் நேர்ந்தது என்ன? நிலம் தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கிவிட்டது (16:32). 39. கொள்ளை நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை என்ன? 14,700 (16:49). 40. ஒவ்வொரு குலத்தின் கோலிலும் என்ன எழுதப்பட வேண்டும் என ஆண்டவர் கட்டளையிட்டார் ? ஒவ்வொருவாரின் பெயரையும் அக்கோலின் மேல் எழுதும்படி கட்டளையிட்டார் (17:2). 41. அடுத்தநாள் யாருடைய கோல் துளிர் விட்டிருந்தது? ஆரோனின் கோல் (17:8). 42. ஆரோனின் கோல் எங்கே வைக்கப்பட்டது? உடன்படிக்கைப் பேழைமுன் வைக்கப்பட்டது (17:10). 43. குருத்துவ பணியை ஆரோனையும் அவருடைய புதல்வரையும் தவிர வேறு எவரேனும் செய்ய அனுமதிக்கப்பட்டதா? இல்லை (18:7). 44. இஸ்ராயேல் மக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களில் லேவியருக்கு சொந்தமான பங்கு என்ன? பத்திலொரு பங்கு (18:25). 45. ஆரோனுக்குறிய பங்கு என்ன? ஆண்டவாரின் படையல் (18:28) 46. இஸ்ராயேல் மக்கள் முதல் மாதத்தில் எங்கு சென்றடைந்தார்கள்? சீன் பாலைநிலத்தை சென்றடைந்தனர் (20:1). 47. சீன் பாலைநிலத்திற்கு வந்து இஸ்ரயேல் மக்கள் எங்கு தங்கினர் ? காதேசு (20:1). 48. மிரியாம் எந்த இடத்தில் இறந்தார்? காதேசு (20:1). 49. காதேசில் தங்கியிருந்த இஸ்ராயேல் மக்களுக்கு மோயிசன் தண்ணீர் வழங்கியது எப்படி? பாறையிலிருந்து தண்ணீர் வரவழைத்து அவர்களுக்கு வழங்கினர் (20:11). 50. ஆண்டவர் மோயிசனிடமும், ஆரோனிடமும் காதேசில் என்ன கூறினார் ? நான் இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கவிருக்கும் நாட்டுக்குள் அவன் நுழைய மாட்டான். ஏனெனில், 'மொரிபாவின் தண்ணீர்" அருகில் நீங்கள் என் கட்டளையை மீறினீர்கள் (20:24). 51. காதேசின் தண்ணீர் மொரிபா என அழைக்கப்படுவது ஏன்? இஸ்ராயேல் மக்கள் ஆண்டவாரிடம் வாதாடியதால் (20:13). 52. ஏதோம் மன்னன், தன்னுடைய எல்லையை கடக்க மோயிசனுக்கு அனுமதி அளித்தாரா? இல்லை (20:18) 53. மோயிசன், ஆரோனையும் அவருடைய மகனையும் ஓர் என்ற மலைக்கு கொண்டு சென்று என்ன செய்தார் ? மோசே ஆரோனின் உடைகளை உரிந்து அவற்றை அவர் மகன் எலயாசருக்கு உடுத்தினார் (20:28). 54. ஓர் மலையில் ஆரோனுக்கு என்ன நேர்ந்தது? அங்கேயே இறந்தார் (20:28). 55. இஸ்ராயேல் வீட்டார் ஆரோனுக்காக எத்தனை நாட்கள் துக்கம் கொண்டாடினர் ? 30 நாட்கள் (20:29). 56. இஸ்ராயேல் மக்களை தாக்கிய மன்னன் யார் ? அராது மன்னன் (21:1). 57. இஸ்ராயேல் மக்கள் அராது மன்னனுக்கு எதிராக என்ன செய்தனர் ? அராது மன்னனின் நகரத்தையும், நகர மக்களையும் அழித்தனர் (21:3). 58. இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசியபோது கடவுள் அவர்களை எப்படி தண்டித்தார்? ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை அவர்களிடையே அனுப்பி சாகடித்தார் (21:6). 59. மோசே மக்களுக்காக மன்றாடியபொழுது கடவுள் என்ன கட்டளையிட்டார் ? வெண்கலப் பாம்பொன்றை செய்து ஒரு கம்பத்தில் பொருத்துமாறு கூறினார் . கடிக்கப்பட்டவர்கள் இதைப் பார்த்தால் பிழைப்பார்கள் (21:8). 60. எமோரிய மன்னன் சீகோன் தன் எல்லை வழியே இஸ்ராயேல் கடந்து செல்ல அனுமதித்தானா? இல்லை (21:23). 61. சீகோன்? இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக எங்கு போரிட்டார் ? யாகாஸ் (21:23). 62. யாகாஸ் போரில் நடந்தது என்ன? இஸ்ராயேல் வாழ்முனையில் சீகோனை கொன்று அந்நாட்டை கைப்பற்றினார் (21:24). 63. எமோரியாரின் தலைநகர் எது? எஸ்யான் (21:26). 64. பாசான் நகர மன்னன் யார் ? ஓகு (21:33). 65. இஸ்ராயேலை எதிர்த்து ஓகு எங்கு போரிட்டார்? எதிரேயி (21:33). 66. ஓகுவை தோற்கடித்த பிறகு இஸ்ராயேலர் எங்கு சென்றனர்? மோவாபிய சமவெளிக்கு(22:1). 67. மோவாபின் மன்னன் யார் ? பாலாக்கு (22:4). 68. பிலயாம் என்பவர் யார் ? மோவாபு இறைவாக்கினர். 69. பாலாக்கு பிலயாமிடம் கேட்டது என்ன? இஸ்ராயேல் மக்களை சபிக்குமாறு கேட்டார் (22:6). 70. ஆண்டவர் பிலயாமிடம் கூறியது என்ன? எழுந்து பாலாக்கிடம் செல என்றார் (22:21); 71. பிலயாமின் கழுதை வழியில் யாரைக் கண்டது? ஆண்டவாரின் தூதர் (22:23). 72. பிலயாம் இஸ்ராயேலை சபித்தாரா? இல்லை அவர்களுக்கு ஆசி வழங்கினார் (23:11). 73. பிலயாம் வரவிருக்கும் மெசியாவைப் பற்றி என்ன கூறினார் ? நான் அவரைக் காண்பேன்: ஆனால் இப்போதன்று. நான் அவரைப் பார்ப்பேன்: ஆனால் அண்மையிலன்று: யாக்கோபிலிருந்து விண்மின் ஒன்று உதிக்கும் இஸ்ராயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும் (24:17). 74. சித்திமில் இஸ்ராயேல் மக்கள் தங்கியிருந்த போது செய்த பாவம் என்ன? மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடந்தனர் (25:1). 75. இப்படிப்பட்ட பாவத்தை செய்த பிறகு இஸ்ராயேல் மக்கள் செய்தது என்ன? அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர் (25:2). 76. இதற்கு ஆண்டவர் என்ன தண்டனை வழங்குமாறு கட்டளையிட்டார் ? பாகால் பெகோரை அடிபணிந்த தம் ஆட்களை கொன்று விடுமாறு கட்டளையிட்டார் (25:5). 77. அப்பொழுது சாகடிக்கப்பட்டவாரின் மொத்த எண்ணிக்கை என்ன? 24,800 பேர் (25:9). 78. எலயாசாரின் புதல்வன் பினகாசு ஆண்டவரின் சினத்தை எவ்வாறு அகற்றினான்? மிதியானியப் பெண்ணையும், சிம்ரியையும் கொன்று (25:8). 79. உரிமைச் சொத்தை பற்றி ஆண்டவர் கட்டளையிட்டது என்ன? மகன் இல்லாமல் ஒருவன் இறந்துவிட்டால் அவனுடைய உரிமைச் சொத்து அவன் மகளுக்கு சேரவேண்டும் (27:8). 80. இஸ்ராயேல் மக்களுக்கென கொடுத்துள்ள நாட்டை மோயிசன் எம்மலையில் இருந்து பார்த்தார் ? அபாரிம் மலை (27:12). 81. இஸ்ராயேலுக்கு கொடுக்கப்பட்ட நாட்டில் நுழைய மோயிசனுக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? ஏனெனில் சீன் பாலைநிலத்தில் மக்கள் முன்னிலையில் ஆண்டவருடைய புனிதத்தை எடுத்துரைக்காததால் (27:14). 82. மோசேவுக்கு அடுத்தப்படியாக இஸ்ராயேல் மக்களை வழிநடத்த கடவுள் யாரை நியமித்தார் ? யோசுவாவை (27:22). 83. மோயிசன் யோசுவாவை எவ்வாறு நியமித்தார் ? தம் கைகளை அவர் மேல் வைத்து (27:23). 84. மிதியானுக்கு எதிராக போர் புரிய எத்தனைப்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ? இஸ்ராயேல் குலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 1000 பேர் (31:4). 85. இந்த படை வீரர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ? எலயாசர் மகன் பினகாசு (31:6). 86. கொல்லப்பட்ட மிதியானின் அரசர்கள் எத்தனை? ஐந்து (31:8) 87. இஸ்ராயேல் மக்கள் மிதியானின் பெண்களையும், குழந்தைகளையும் என்ன செய்தனர் ? அவர்களை சிறைபிடித்தனர் (31:9). 88. இவர்களை சிறைபிடித்து என்ன செய்தனர் ? ஆண் குழந்தைகளையும், திருமணமான பெண்களையும் கொலைசெய்தனர். திருமணமாகாத பெண்களை உயிருடன் வைத்துக்கொண்டனர் (31:17-18). 89. எத்தனை இளம்பெண்களை உயிருடன் விட்டனர் ? 32,000 (31:5). 90. 'கெனாத்" என்னும் நகர் 'நோபாகு" என மாற்றப்பட்டது ஏன்? நோபாகு அந்நகரை கைப்பற்றியதால், அந்நகரை தம் பெயராலேயே நோபாகு என்று அழைத்தார் (32:42). 91. ஆரோன் எங்கு இறந்தார் ? அப்பொழுது அவருடைய வயது என்ன? ஓர் மலையில், வயது 124 (33:39). 92. கானான் நாட்டை எவ்வாறு பிரித்தெடுக்குமாறு கடவுள் கட்டளையிட்டார் ? ஒன்பது குலங்களுக்கும், பாதிக் குலத்துக்கும் திருவுளச் சீட்டு மூலம் உடைமையாக்கிக் கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது (34:13). 93. ஆறு நகர்களில் தங்க வேண்டாம் என ஆண்டவர் அவர்களுக்கு கூறியது ஏன்? தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகலிடம் பெறுவதற்காக (35:15). 94. இந்த ஆறு நகர்களும் எங்கே காணப்பட்டன? யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும், கானான் நாட்டுக்குள் மூன்று நகர்களும் (35:14). |