1) மக்கபேயர் என்பதன்
பொருள் என்ன?
மக்கபேயர் என்பதன் பொருள் "சுத்தியல், சம்மட்டி" என்பதாகும்.
2)
மக்கபேயர் என்னும்
நூலின் உள்ளடக்கம் என்ன?
அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி, யோவான் இர்க்கான்
ஆட்சிப்
பொறுப்பு ஏற்றது வரை (175-134)
யூத வரலாற்றில்
இடம் பெற்ற
குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல்
விளக்குகிறது.
3)
அலெக்ஸ்சாண்டர் என்பவர் யார்?
மாசிடோனியராகிய பிலிப்புவின் மகன் (1:1)
4)
அலெக்ஸ்சாண்டர் தனது பேரரசை பிரிக்குமாறு கூறியது ஏன்?
அவர் 12 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் இறக்கும் தறுவாயில்
இருந்ததால். (1:7)
5)
அலெக்ஸ்சாண்டருக்குப் பிறகு சிரியாவை ஆண்ட
மன்னர் யார்?
அந்தியோக்கு எப்பிபான் (1:10)
6)
சில இஸ்ராயேலர் செய்தது என்ன?
அவர்களைச் சுற்றி இருக்கும் வேற்றினத்தாரோடு உடன்படிக்கை
செய்து
கொண்டனர். (1:11)
7) ஜெருசலேமில் இருந்த ஆண்டவரின் இல்லத்தை அந்தியோக்கு
தாக்கியது
எப்பொழுது?
கி.மு. 143ம் ஆண்டில். (1:2)
8)
ஆண்டவரின் இல்லத்தில் இருந்து அந்தியோக்கு கொண்டு சென்றது
என்ன?
வெள்ளியாலும், பொன்னாலும் செய்யப்பட்ட அனைத்துப்
பொருட்களையும்
எடுத்துச் சென்றான். (1:23)
9)
எருசலேம் மாநகரை தீக்கிரையாக்கியவர் யார்?
அந்தியோக்கு மன்னனின் படை வீரருள் ஒருவர். (1:29)
10)
மன்னன் பிறப்பித்த ஆணை என்ன?
சிலைகளை வழிபடுமாறு கட்டளையிட்டார். (1:41)
11)
மன்னனின் கட்டளைகளை மீறுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை
என்ன?
சாவு . (1:50)
12)
மத்தத்தியா என்பவர் யார்?
மோதயினில் வாழ்ந்த ஒரு குருவானவர். (2:1)
13)
மத்தத்தியாவின் மைந்தர்கள் யாவர்?
காத்தி என்ற
யோவானும்,
தாசீ என்ற சீமோனும்,
மக்கபே என்ற
யூதாவும்,
அவரான் என்ற எலயாசரும்,
அப்பு என்ற யோனத்தானும் ஆவார்கள்.(2:2)
14)
மோதயினில் நடந்தது என்ன?
கடவுளைப் புறக்கணிக்குமாறு
யூதர்களைக் கட்டாயப்படுத்துவதற்காக,
மன்னன் ஏற்படுத்திய அலுவலர்கள், மக்களைப் பலி செலுத்தவைக்க
மோதையின் நகருக்கு சென்றார்கள்.
(2:15)
15)
இதற்கு மத்தத்தியா கூறிய பதில் என்ன?
நானும் என் மைந்தர்களும் சகோதரர்களும் எங்கள்
மூதாதையர்களின்
உடன்படிக்கையின் படியே நடப்போம். (2:20)
16)
மத்தத்தியா இவ்வாறு கூறிய பிறகு அவர் செய்தது என்ன?
மன்னனின் அலுவலனைக்
கொன்று, பலிப்பீடத்தையும் இடித்துத்
தள்ளினார்.
(2:25)
17)
மன்னனின் அலுவலனைக் கொன்றபிறகு மத்தத்தியா எங்கு சென்றார்?
அவரும் அவருடைய மைந்தர்களும், நகரில் இருந்த தங்கள்
உடமைகளை
யெல்லாம் விட்டுவிட்டு மலைகளுக்கு தப்பி ஓடினார்கள்.
(2:28)
18)
மத்தத்தியா இறந்த பிறகு, மக்களுக்கு தலைவராக இருந்தவர்
யார்?
அவருடைய மகன் சிமியோன். (2:65)
19) படைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
யூதா மக்கபே. (2:66)
20)
இஸ்ராயேலரோடு போரிட சமாரியாவிலிலுந்து வந்த படையை எதிர்க்க
யாரைத் தலைவனாக ஏற்படுத்தப்பட்டது?
அப்பொல்லோன். (3:10)
21)
அந்தப் போரின்
முடிவு என்ன?
அப்பொல்லோன் போரில் கொலை செய்யப்பட்டார். (3:11)
22)
சமாரியர்களை மறுபடியும்
யூதா எங்கே தோற்கடித்தார்?
எம்மாவுஸ் சமவெளியில். (4:3)
23)
யூதா ஆண்டவரின் இல்லத்தை
தூய்மைப்படுத்தினாரா?
ஆம், திருவுறைவிடத்தை
தூய்மைப்படுத்தினார்கள். (4:43)
24) அந்தியோக்கு எப்பித்தான் இறந்தது எப்படி?
பாரசீக நாட்டு எலிமாய் நகரோடு போர் தொடுத்து போரில்
தோல்வியடைந்த
கவலையினால் அவர் உயிர் விட்டார். (6:1-16)
|
|