Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(45) பாரூக்கு

இவர் இறைவாக்கினர் எரேமியாவின் செயலர் என்பது மரபு வழிச் செய்தி. எரேமியா நூலின் படி இவரின் தந்தை நேரியா ஆவார். அதே நூலில் யூதாவின் அரசனான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கினை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்து, எரேமியாவின் கட்டளைக்கிணங்க நோன்பு நாளன்று, யூதர்களின் கோவிலுக்கு சென்று அங்குக் குழுமியிருந்த மக்களின் செவிகளில் விழும்படி, தான் எழுதிவைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டினார்
1)  பாரூக்கு என்பவர் யார்?
     இவர் நேரியாவின் மகன் (1:1)

2)  இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
     எருசலேம் நாட்டின் அழிவைப்பற்றி எரேமியா முன்னறிவித்ததாகும்.

3)  இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதற்குரிய காரணம்என்ன?
       கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே.
 

4)  பாரூக்கு இஸ்ராயேலுக்கு எவ்வாறு நம்பிக்கை அளித்தார்?

     "நீங்கள் வேற்றினத்தாரிடம் இருக்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று:
      நீங்கள் கடவுளுக்கு சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப்பட்டீர்கள்
      (4:5-6)

 
5) இவரின் நூல் வலியுறுத்தும் செய்தி என்ன?
      அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி,    
      உண்மை ஞானமாகிய திருச் சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால், கடவுள்
      அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து,
      அவர்களுக்கு மீட்பை அருள்வார் என்னும்  செய்தியை இவரின் நூல்
      வலியுறுத்துகிறது.
 
 
6) யூதர்கள் எருசலேமில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்கள்?
      ஏழு தலைமுறைகளுக்கு.
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்