Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(43) சீராக்கின் ஞானம்

1. சீராக்கின் ஞானம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
    ஏசுவின் மகன் சீராக்.

2. இந்நூலை எந்த மொழியில் எழுதினார்?
    எபிரேய மொழியில்.

3. இந்நூலை கிரேக்க மொழியில் மொழி பெயர்த்தது யார்?
     ஏசுவின் பேரன். (முகவுரை 1:14)

4. இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
    ஞானம் பற்றிய கருத்துக் குவியலைக் கொண்டது.

6. இந்நூலாசிரியரின்படி ஞானத்தின் ஊற்று எது?
     ஞானம் எல்லாம் ஆண்டவரிடமிருந்தே வருகிறது: அது என்னும் அவரோடு
      இருக்கிறது.(1:1)

8. ஞானத்தின் தொடக்கம் எது?
     ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதல். (1:14)

10. ஞானத்தைத் தர நாம் செய்யவேண்டியது என்ன?
       கட்டளைகளைக் கடைப்பிடித்தால் ஆண்டவரே வாரி வழங்குவார். (1:26)

12. தந்தையரை மேம்படுத்துவோருக்கு கிடைக்கும் பலன் என்ன?
      நீடு வாழுவார். (3:6)

14. மகன் தன் தந்தைக்கு செய்யவேண்டிய கடமை என்ன?
      "குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு, அவரது
       வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தை புண்படுத்தாதே". (3:12)

16. இறுமாப்பு கொண்டோருக்கு அதைக் குணப்படுத்த மருந்து உண்டா?
      மருந்தேயில்லை: ஏனெனில் தீமை அவர்களுக்குள் வேரூன்றி விட்டது. (3:18)

18. தருமம் செய்வதால் நமக்குக் கிடைப்பது என்ன?
      "எரியும் நெருப்பை தண்ணீர் அவிக்கும்: தருமம் செய்தல் பாவங்களைக்
        கழுவிப்போக்கும்". (3:30)

20. ஏழை மனிதரிடம் நடந்து கொள்ளும் முறை என்ன?
      "துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளிவிடாதே: ஏழையிடமிருந்து   
        உன்முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே". (4:4)

21. சீராக்கின் ஞானம் 4:1-5 ல் சொல்வது என்ன?
      "குழந்தாய்,
      -  ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;
      -  கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே.
      -  பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே;
      -  வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே..
      -  உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து
      -  உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே;
      -  உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே."

22. சீராக்கின் ஞானம் 6:5-16ல் சொல்வது என்ன?
    - "இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்;
    -    பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.
    -   அனைவரோடும் நட்புடன் பழகு;
    -  ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும்.
    -   ஆய்ந்து நட்புக்கொள்; நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.
    -   தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு;
    -  அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.
    -  பகைவர்களாக மாறும் நண்பர்களும் உண்டு;
    -  அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு
    -   இழிவைக் கொண்டு வருவார்கள்...
    -   நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்;
    -  ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்."





 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்