Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(43) சாலமோனின் ஞானம்

1. சாலமோனின் ஞானம் என்னும் நூல் எப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது
     ஞானமும், மனிதரின் துடிவும். (1:5)
     ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி. (6:9)
     மீட்பு வரலாற்றில் ஞானம். (10:19)

2. ஞானம் காணப்படாத இடம் எது?
     வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை, பாவத்திற்கு   
     அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதிலை. (1:4)

3. பிறப்பு- இறப்பு பற்றி இந் நூலாசிரியர் கூறுவது என்ன?
     தற்செயலாய் நாம் பிறந்தோம், இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். (1:2)

4. நீதிமான்களின் ஆன்மாக்கள் எங்கே உள்ளன?
     கடவுளின் கையில் உள்ளன. (3:1)

5. உரிய காலத்திற்கு முன் இறப்பவர்களைப்பற்றி ஆசிரியர் கூறுவது என்ன?
    நீதிமான்கள் உரிய காலத்திற்கு முன் இறந்தாலும், இளைப்பாற்றி
    அடைவார்கள். (4:7)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்