1. எபக்தான நகரைக் கட்டியெழுப்பியது யார்? மேதிய அரசன் அர்ப்பகசாது(1:2) 2. ஏலோபெரின் என்பவர் யார்? ஆசீரியமன்னன் நேபுகத்னேசரின் படைத்தலைவன் (2:4) 3. ஏலோபெரின் யூதாவை நோக்கிச் சென்ற பொழுது, யூதர்கள் என்ன செய்தனர்? கடவுளை மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள். நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக் கொண்டார்கள். (4:9) 4. இஸ்ராயேலைப்பற்றி அமோனிய தலைவர் அக்கியோர் கூறியது என்ன? இந்த இனத்தாரிடம் ஒரு குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும். இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பாதிப்புக்கும் உள்ளாவோம்.(5:21) 5. அசீரியர்கள் சுக்கியோருக்கு செய்தது என்ன? இஸ்ராயேலிடம் ஒப்படைக்கப்பட்டார். (6:10) 6. அதன்பிறகு அசீரியர்கள் என்ன செய்தனர்? அவர்கள் பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, இஸ்ராயேலருக்கு தண்ணீர் கிடைக்காதவாறு அவர்களின் நீரூற்றுக்களைக் கைப்பற்றினார்கள். (7:17) 7. யூதித்து என்பவர் யார்? மெராரியின் மகள். (8:1) 8. யூதித்தின் மனாசே எவ்வாறு இறந்தார்? அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே அவர் இறந்தார் (8:3) 9. யூதித்து எப்படிப்பட்ட பெண்? அவர் பார்வைக்கு அழகானவர். தோற்றத்தில் எழில் மிக்கவர். இவர் கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தவர்.(8:78) 10. பெத்தூலியா நகருக்கு வெளியே எதிர் கொண்ட அசீரிய சுற்றுக்காவல் படை வீரர்களிடம் யூதித்து கூறியது என்ன? "நான் ஒரு எபிரேயப் பெண். நானோ உங்கள் படைத் தலைவர் ஏலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழுவதையூம் கைப்பற்றக் கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன்" (10:12-13) 11. ஏலோபெரினின் பாளையத்தில் அளித்த விருந்து முடிந்தவுடன் யூதித்து என்ன செய்தார்? ஏலோபெரினின் கழுத்தை இருமுறை வெட்டி தலையைத் துண்டித்தார். அவரது தலையை தம் பணிப் பெண்ணிடம் கொடுத்தார். அப்பணிப்பெண் தலையை தன் உணவுப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.பிறகு அவர்கள் இருவரும் பெத்தூலியாவுக்கு தப்பி ஓடினார்கள். (13:8-10) 12. யூதித்து இறக்கும்போது அவருக்கு வயது என்ன? 105 வயது (16:23) |