Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(3) லேவியர்

 
1. வேதாகமத்தில் பாஸ்கா நிகழ்சியை விரித்துரைக்கும் நூல் எது?
    விடுதலை ஆகமம்

2. லேவியர் ஆகமத்தின் மையக்கருத்து என்ன ?
    பழங்கால இஸ்ராயேலரின் கடவுளின் தூயதன்மையூம், அவரை 
    வழிபடுவதற்கான  முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான 
    நெறிகளும்,அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலின்
    வழியாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

3. மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ ஆண்டவருக்கு எரி பலி 
    செலுத்தினால், என்ன படைக்கவேண்டும்?

    மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காளையை அவர் படைக்க 
     வேண்டும்   (1:3)

4. எரிபலிக்கான ஒருவரது நேர்ச்சை, ஆட்டு மந்தையிலுள்ள செம்மறி அல்லது 
     வெள்ளாடாக இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும்?.

     அவர் பழுதற்ற ஒரு ஆட்டு கிடாயை கொண்டுவரவேண்டும் (1:10)

5. எரிபலிக்கான ஒருவரது நேர்ச்சை, பறவையாக இருந்தால் அவர் என்ன செய்ய
    வேண்டும்?

     காட்டுப் புறாக்களையாவது, மாடாப்புறாக்களையாவது நேர்ச்சையாகச்
     செலுத்த வேண்டும். (1 :14)

6. தானியப் படையல்களை எவ்வாறு பலிசெலுத்துவது?
    மெல்லிய மாவு மேல் எண்ணெய் வார்த்து சாம்பிராணிப்பொடி தூவியிருக்க
       வேண்டும்.(2:1)

7. நேர்ச்சையாக அடுப்பிலே சுட்ட உணவுப் படையலாக இருந்தால் செய்ய 
     வேண்டியது என்ன ?

     எண்ணையில் பிசைந்த மெல்லிய மாவில் செய்த அடைகளுமாய் இருக்க
      வேண்டும்.(2:4)

8. நேர்ச்சையாக முதல் பலன்களில் உணவுப் படையலை ஆண்டவருக்கு 
      செலுத்தினால் எப்படி செய்ய வேண்டும் ?

      அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டிப் படைக்க வேண்டும் (2:14)

9. ஆட்டு இரத்தத்தை பீடத்தின் மேலும் சுற்றிலும்
தெளிக்கக் கூடியவர்கள் யார் ?
     ஆரோனின் புதல்வராகிய குருக்கள்(3:8)

10. ஆண்டவரின் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்ற ஆரோனின் 
       புதல்வர்கள் யாவர் ?

       நாதாபும் அபிகூவும் (10 :1)

11. ஆண்டவர் அவர்களுக்கு எவ்வாறு தண்டனையை வழங்கினார்?
      ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்தது அவர்களை விழுங்கியது(10:2)

12.  குடித்தலைப்பற்றி ஆண்டவர் ஆரோனிடம் என்ன கூறினார்?
      திராட்சை ரசத்தையோ மதுவையோ குடித்துவிட்டு சந்திப்புக் கூடாரத்திற்குள் 
       நுழைய வேண்டாம் என்று கூறினார்.(10:9)

13. ஆண்டவர் மோயீசனிடம் தூய்மையைப்பற்றி என்ன கூறினார்?
       தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும், ஆண்டவருமாகிய நான்
       தூயவர் (19:1)

14. ஆண்டவர் மோயீசனிடம் யூபிலி ஆண்டைப்பற்றி கூறியது என்ன?
      ஒவ்வொரு ஐம்பதாவது ஆண்டும் புனிதமான ஆண்டாக இருக்கட்டும்.

15. இஸ்ராயேலின் முக்கிய சமயப் பெருவிழாக்களைக் கூறுக?
        1) ஆண்டவருக்கான ஓய்வு  நாள்
        2) பாஸ்காவும் புளிப்பற்ற அப்பமும்
        3) அறுவடைப் பெருவிழா
        4) புத்தாண்டுப் பெருவிழா
        5) கூடாரப்பெருவிழா (23)

16. இந்நூலில் காணப்படும் வசனங்களில் நன்கு அறிந்த வசனங்கள் எது?
      உன்மீது நீ அன்பு கூருவதுபோல, உன் அயலார்  மீதும் அன்பு கூர்வாயாக(19:18)

 

புதுமைகள் புரிந்திடும் லூர்துமாதாவே!
புண்ணிய பூமியின் பாதுகாவலியே