Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(38) செக்கரியா

1) செக்கரியா என்பவர் யார்?
    இவர் அபியா வகுப்பைச் சேர்ந்த குரு ஆவார். செக்கரியா விவிலியம் மற்றும்
    திருக்குரானில்  குறிப்பிடப்படும்  நபர் ஆவார். விவிலியம்  இவரை  திருமுழுக்கு
    யோவானின் தந்தை எனவும், ஆரோன் குலத்தவர் எனவும் இறைவாக்கினர்
    எனவும் குறிக்கின்றது. இவர் இயேசுவின் தாய் மரியாவின் உறவினராகிய
    எலிசபெத்தின் கணவராவார்.

2) இவர் வாழ்ந்த காலம் எது?
    லூக்கா நற்செய்தியின் படி முதலாம் ஏரோதின் ஆட்சியின் போது இவர்
    வாழ்ந்தவர்.

3) மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு ஆண்டவர் செக்கரியாவிடம் கூறியதுஎன்ன  
   " என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களிடம் திரும்பி வருவேன்". (1:3)

4) இறைவாக்கினர் கண்ட முதல் காட்சி என்ன?
    ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டி எழுப்புமாறு கூறிய வானதூதரைக்
    கண்டார். (1:16)

5) வருங்காலத் தலைமுறையினரைப் பற்றி ஆண்டவர் கூறியது என்ன?
    "அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்: உண்மையிலும், நீதியிலும் நான் 
    அவர்களுக்கு கடவு ளாய் இருப்பேன்".(8:8)

6) ஆண்டவர் மக்களைப் பார்த்து செய்யச் சொன்னது என்ன?
     ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்;
     உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு
     வழிகோலுவதாயும் இருக்கட்டும்;
     ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க
     வேண்டாம்;
     பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்; ஏனெனில், இவற்றையெல்லாம் நான்
     வெறுக்கிறேன், 8: 16-17

7) நோன்பைப் பற்றி ஆண்டவர் கூறுவது என்ன?
     நோன்பிருப்பதைவிட வாய்மையும், நல்லுறவையும் நாடுங்கள். (8:19)

8) மெசியாவைப்பற்றி சக்கரியா முன்னுரைத்தது என்ன?
     "இதோ உன் அரசர் உன்னிடம் (9:9)

9) இந்த சக்கரியாவின் முன்னறிவிப்பு இயேசுவைப் பற்றித்தான் என நாம் எப்படி
    அறிந்து கொள்வது?

    குருத்து ஞாயிறு அன்று இயேசு கழுதையின்மேல் அமர்ந்து எருசலேமுக்குள்
    நுழைந்தார்.
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்