Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(37) ஆகாய்

ஆகாய் என்பவர் கி.மு.6ஆம் நூற்றாண்டில் யூத மக்களிடையே வாழ்ந்த இறைவாக்கினர் ஆவார். பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள், எருசலேம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு இவரது இறைவாக்குகள் தூண்டின. மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக இவர் வழியாக கடவுள் வாக்களித்ததை ஆகாய் நூல் எடுத்துரைக்கிறது.
1) ஆகாய் என்னும் பெயருக்கு  பொருள் என்ன?
    ஆகாய் என்னும் இப்பெயருக்கு "விழாக் கொண்டாட்டம்" அல்லது "திருப்பயணம்  
    செய்வோன்" என்று பொருள்.

2) ஆகாய் இறைவாக்கினர் இறைவாக்குரைத்த காலம் எது ?
    ஆகாய் இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு கி.மு. 520ஆம் ஆண்டு
    வழங்கப்பட்டது.

3)  மக்களிடம் கூறுமாறு ஆண்டவர் ஆகாயிடம் சொன்னது என்ன?
     ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான காலம் இன்னும்
     வரவில்லை .(1:2)

4) ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான காலம் இன்னும்  
    வரவில்லையென ஆண்டவர் கூறியது ஏன்?

     ஏனெனில் மக்கள் தூயவர்களாக இல்லை.

5)  யூதாவின் ஆளுனராக இருந்தவர் யார்?
      செருபாபேல். (2:2)

6)  அப்பொழுது தலைமைக் குருவாக இருந்தவர் யார்?
      யோசுவா. (2:2)

7)  ஆகாய் 2:6 ல் என்ன கூறுகின்றார்?
    ஏனென்றால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்லிக் 
   கொண்டிருக்கிறார், "கொஞ்ச காலத்திற்குள்ளே, நான் மீண்டும்எல்லாவற்றையும்
     அசையச் செய்வேன். நான் பரலோகத்தையும் பூமியையும் அசையச் செய்வேன்.
      நான் கடலையும் வறண்ட நிலத்தையும் அசையச் செய்வேன். ஏனென்றால் சர்வ
      வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார், "கொஞ்ச
      காலத்திற்குள்ளே, நான் மீண்டும் எல்லாவற்றையும் அசையச் செய்வேன். நான்
       பரலோகத்தையும் பூமியையும் அசையச் செய்வேன். நான் கடலையும் வறண்ட
        நிலத்தையும் அசையச் செய்வேன்".

 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்