1)
அபக்கூக்கு என்னும்
நூல் எப்பொழுது எழுதப்பட்டது?
கி.மு. 600ல்
2)
இந்நூலின் உள்ளடக்கம் என்ன?
நேர்மையற்றோர், கொடியோர் ஆகியவர்களுக்கு தண்டணை வழங்க
ஆண்டவர்
கல்தேயர் இனத்தை தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி
கூறுகிறது. (1:6)
3)
இந்நூல் எவ்வடிவில் ஏற்றப்பட்டது?
கவிதை மற்றும் ஊரையாடல் பாணியில் எழுதப்பட்டது.
4) நேர்மையுடையோர்
எவ்வாறு வாழவேண்டும் என
ஆண்டவர்
கூறுகின்றார்?
நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையினால் வாழ்வார்கள்
என்றும் ஆண்டவர் மறுமொழி கூறினார்.(2:4)
5)
செல்வத்தைப் பற்றி இறைவாக்கினர் கருத்து என்ன?
செல்வம் ஏமாற்றி விடும். (2:5)
6)
அபக்கூக்கு 1:2 ம்
அதிகாரத்தில் கூறுவது என்ன
"ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;
நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு
வன்முறையை
முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல்
இருப்பீர்?"
7) தீயவைகளென இறைவாக்கினர் குறிப்பிடுபவை யாவை?
1- தமக்கென அனைத்தையும் குவித்துக் கொள்வது.
2-பிறரை சாதகமாய் பயன்படுத்த கொடுமைப்படுத்துதல்.
3-இரத்தப்பழியால் நகரைக் கட்டி அமைத்தல்.
4-அடுத்தவரை குடிவெறியர்களாக்குதல்
5-சிலை வழிபாடு. (2:6-19)
8) அபக்கூக்கு
3:17-19 அதிகாரத்தில் கூறுவது யாது?
"அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனிதராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களிகூர்வேன்;
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை;
அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்;
உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்."
|
|