Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(34) நாகூம்

"சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது ஆண்டவர் வழி; மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்!" - நாகூம் 1:3
1) நாகூம் என்னும் நூலின் பொருளடக்கம் என்ன?
    இசுரயேலின் மிகப் பழைய, கொடிய எதிரியான அசீரியருடைய தலைநகராம்  
    நினிவே பெருநகரின் வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ந்து பாடும் கவிதையாக  
   "நாகூம்" என்னும் இந்நூல் அமைந்துள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டின் 
    இறுதியில் நினிவே அழிவுற்றது. ஆணவம் கொண்டு மற்ற மக்களைக்  
    கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் ஆண்டவர் தண்டிக்காமல் விட மாட்டார் 
    என்பதை இந்நூல் விளக்குகிறது.

2) நாகூம் என்னும் பெயரின் பொருள் என்ன?
    நாகூம் என்னும் பெயரின் பொருள் "ஆறுதலளிப்பவர்" என்பதாகும்.

3) நாகூம் என்பவர் யார்?
    இவர் எல்கோசை சார்ந்த இறைவாக்கினர். (1:1)

4) இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்த நகர் எது?
     நிநிவே. (2:8)

5) அசீரியாவின் அழிவை இறைவாக்கினர் எவ்வாறு வருணிக்கின்றார்?
     உம் பெயர்களை சுட்டு சாம்பலாக்குவேன். (2:13)

6) நிநிவே நகர் எப்போது அழிக்கப்பட்டது?
    கி.மு. 612ல்

7) நாகூம் நகர் பற்றி 3:1-3 அதிகாரத்தில் கூறுவது என்ன
    "இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம்
      பொய்களும் கொள்ளைப் பொருளுமே! சூறையாடலுக்கும் முடிவே இல்லை!
      சாட்டையடிகளின் ஓசை! சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி! தாவிப் பாயும்
      புரவிகள்! உருண்டோடும் தேர்கள்! குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்;
      வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் 
    கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே  
     இல்லை; அந்தப் பிணங்கள்மேல் மனிதர் இடறி விழுகின்றனர்."
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்