Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(33) மீக்கா

1) மீக்கா என்பவர் யார்?
    இவர் மொறெசேத்தைச் சார்ந்த இறைவாக்கினர்.

2) மீக்கா என்றும் பெயரின் பொருள் என்ன?
   இப்பெயரின் பொருள் "கடவுளுக்கு இணையாவார் யார்?" என்பதாகும். மிக்கேல்
   (Michael) என்பது இப்பெயரின் வேறொரு வடிவம்.

3) மீக்கா இறைவாக்கு உரைத்த காலம் எது?
    மீக்கா இறைவாக்கு உரைத்த காலம் கி.மு. 737-690 ஆகும். அதுவே யோத்தாம்,   
    ஆகாசு, எசேக்கியா ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலமும்கூட. மீக்கா யூதாவில்
    உள்ள நாட்டுப்புற நகர் ஒன்றில் தோன்றியவர். ஓசேயா, எசாயா ஆகியோர்
    வாழ்ந்து பணியாற்றிய காலமும் அதுவே.

4) இஸ்ராயேல் மக்கள் துன்புறக் காரணம் என்ன?
   அவர்களுடைய தீய செயல்கள்.

5) ஆண்டவர் இஸ்ராயேலுக்கு அளித்த வாக்குறுதி என்ன?
  "இஸ்ராயேலில் எஞ்சியோரை ஒன்றாகத் திரட்டுவேன்: இரைச்சலிடும் அந்தக்  
   கூட்டத்தை ஆடுகளை இடையில் மடக்குவது போலவூம், மந்தையை மேய்ச்சல்
    நிலத்தில் வளைப்பது போலவூம்  ஒன்றாகச் சேர்ப்பேன். (52:12)

6)  எருசலேமைப்பற்றி உரைத்த இறைவாக்கு என்ன?
   சீயோன், வயல்வெளியைப்போல் உழப்படும்
   ஜெருசலேம் பாழடைந்த மண்மேடாக மாறும் (3:12)

7) பெத்லகேமைப்பற்றி உரைத்த இறைவாக்கு என்ன?
   "நீயோ எப்ராத்தா எனப்படு பெத்லெகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச்  
   சிறியதாய் இருக்கின்றாய். ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்
   போகின்றவர்; உன்னிடமிருந்தே தோன்றுவார்;. அவர் தோன்றும் வழி மரபோ
   ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்" (5;:2)

8) மேல் குறிப்பிட்ட வார்த்தைகள் யாரைக் குறிக்கிறது?
     பெத்லேகேமில் பிறக்கவிருக்கும் இயேசுவை.

9) மீக்கா 6:6-8 ல் கூறுவது என்ன?
   
"ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு
     எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்?

     எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வர
     வேண்டுமா?
     ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லயிரக்கணக்கான
     ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம்
     கொள்வாரோ?
      என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க
      நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?
     
ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!
      நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்
      உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர
      வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?"

10) மீக்காவின் இறைவாக்கு நூலிலிருந்து கற்றுக் கொள்வது என்ன?
    1. கடவுளை விட்டு விலகிச் செல்கையில் அழிவு நிச்சயம். ஆனால் மனம்
        திரும்பி வருவோருக்கு அடைக்கலம் அதிக‌ நிச்சயம்.
    2. ஏழைகளின் மீதான வன்முறை கடவுளின் மீதான வன்முறை! மனித நேயம்  
        மனதில் நிரம்பியிருக்க வேண்டியது ஆன்மீகத்தின் அடிப்படை.

     இந்த இரண்டு விஷயங்களையும் மீக்காவின் இறைவாக்கு நூலிலிருந்து கற்றுக் 
      கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் உயரிய போதனையான "கடவுளை நேசி",
     "மனிதனை நேசி" எனும் போதனைகளை ஒட்டியே மீக்காவின் இறைவார்த்தை
     கள் இருப்பது, கடவுளின் வார்த்தை நிலையானது என்பதை நிரூபிக்கிற‌து.
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்