Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(29) ஓபதியா

பழைய ஏற்பாட்டிலேயே மிகவும் சிறிய நூல் ஒபதியா இறைவாக்கினரின் இறைவாக்கு நூல் தான்.கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் கடவுள் பல இறைவாக்கினர்களை தமது மக்களிடம் இறைவாக்கு உரைக்க அனுப்பி வைத்தார். அவர்களில் ஓசியா, யோவேல், ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக்இ, செப்பனியா, ஆகாய், சகரியா மற்றும் மல்கியா ஆகிய பன்னிரண்டு பேர் சின்ன இறைவாக்கினர்கள் எனப்படுகின்றனர்.

1) ஓபதியா என்னும் பெயருக்கு பொருள் என்ன?
    ஒபதியா எனும் எபிரேய வார்த்தைக்கு கடவுளின் ஊழியர் என்று பொருள்.

2) ஓபாதியா என்னும் நூலின் பொருள் அடக்கம் என்ன?
    ஏதோம் நாட்டின் அழிவைப்பற்றி, அட்டவணை போட்டுக் காட்டுகிறது இந்நூல்.
    (1:1)

3) நூலின் பிரிவுகள் யாவை?
     1- ஏதோமிற்கு வரும் தண்டனைத் தீர்ப்பு (1 - 14)
     2- ஆண்டவரின் நாள் (15 - 21)

4) இறைவாக்கு நூல்களிலேயே மிகச் சிறிய நூல் எது?
    ஓபதியா (1:1-21)

5) ஏதோம் நாடு தண்டிக்கப்பட்டது ஏன்?
    யூதாவின் மக்களைக் கொன்றதால். (1:12)

6) அரசாட்சி யாருக்குச் சொந்தமாகும்?
    அரசாட்சி ஆண்டவருக்கு உரித்தாகும். (1:21)

7) ஏதோம் நாட்டைப்பற்றி ஓபதியா உரைப்பது என்ன?
    எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டு யூதாவின் பழம்பெரும் எதிரியான ஏதோம்
   நாடு அக்களித்து, அத்தோடு நில்லாமல் அது யூதாவில் புகுந்துகொள்ளையடித்து,
   பிற எதிரிகளும் அதனுள் நுழையத் துணை நின்றது. எனவே இஸ்ரயேலின்
   எதிரிகளான மற்றெல்லா இனத்தோடும் ஏதோம் நாடும் தண்டிக்கப்பட்டுத்
   தோற்கடிக்கப்படும் என்று ஒபதியா முன்னுரைக்கிறார்.
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்