1) ஆமோஸ் என்னும் பெயரின் பொருள் என்ன?
இப்பெயரின் பொருள் சுமை சுமப்பவர் என்பதாகும்.
2) ஆமோஸ் என்பவர் யார்?
இஸ்ராயேல் மன்னன் எரோபவாம் ஆண்டு வந்த காலத்தில்,
பெக்கோவாவில்
இருந்து இறைவாக்கு உரைக்க,
அழைக்கப்பட்டவர்.
(1:1)
3) இவர் வாழ்ந்த வாலம் எது?
இறைவாக்கினர் ஆமோஸ் என்பவர் கி.மு. 8ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர்
ஆவார். இவர் எசாயா, மீக்கா, ஓசேயா ஆகியோரின் சமகாலத்தவர்.
4) இவர் எதற்காகக் கண்டிக்கிறார்?
வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும்
நிறைந்த
சமுதாயத்தைக் கண்டு இவர் தன் நூலில் சீறுகிறார். இனம்
இனத்தையும் மனிதர்
மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க்
கண்டிக்கிறார்.
நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும்
கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை
விடுக்கின்றார்.
5) ஆமோஸ் இறைவாக்கினர் 3குற்றம், 4குற்றம் என்று மீண்டும்
மீண்டும் கூறக்
காரணம் என்ன?
இது எண்ணற்ற குற்றங்களைக் குறிக்கிறது. (1:3)
6) ஆமோஸ் பற்றிக் கூறுக
இறைவாக்கு உரைப்பதற்கு முன் இடையராகவும், தெக்கோவா
என்னும் ஊரில்
கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவராகவும்,
காட்டு
அத்திமரத் தோட்டக்காராகவும் ஆமோஸ் இருந்தார்., யூதாவை
உசியாவும்
இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில்,
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக்
குறித்து
இவர் காட்சி கண்டு இறைவாக்கு உரைக்க துவங்கினார் என
இவரின் நூலில்
இவரே குறிக்கின்றார். இவர் ஆடுகள் ஓட்டிக்
கொண்டபோனபோது
ஆண்டவரிடமிருந்து அழைப்பு பெற்றார்
7) ஆமோஸ் 5:21-24 ல் கூறுவது என்ன?
ஆண்டவர் கூறுகிறார்:
"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்;
உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை.
எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும்
நான் ஏற்க மாட்டேன்;
கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது நான்
ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்.
என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப்பாடும் பாடல்களை
நிறுத்துங்கள்,
உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்.
மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத
ஆறாகப் பாய்ந்து
வருக!"
8) பெத் ஏதேன் என்பதன் பொருள் என்ன?
பெத் ஏதென் என்றால் குற்றங்களின் பாதாளம் என்பது பொருள். �
தமஸ்கு நகர்
(1:5)
9) "பிக்காத் ஆவின்" என்பதன் பொருள் என்ன?
"பிக்காத் ஆவின்" என்றால் எபிரேயத்தில்
"சிற்றின்ப இல்லம்" என்பது பொருள்.
(1:5)
10) கடவுள் மக்களிடமிருந்து என்ன
கேட்கிறார்?
"நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப்
பாய்ந்து வருக!"
(5:24)
|
|