1) விடுதலைப் பயணநூலை எழுதியவர் யார் ? மோயீசன் இந்நூலின் ஆசிரியர் என கருதப்படுகிறது. 2) இஸ்ராயேல் மக்கள் பார்வோன் மன்னருக்கென கட்டிக் கொடுத்த நகரங்கள் எவை? பித்தோம் - இராம்சேசு (1:11) 3) எரேபிய மருத்துவப் பெண்களிடம் எகிப்திய மன்னன் கூறியது என்ன? எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் அனைத்து ஆண்மகவையும் கொன்று விடுங்கள் என்று கூறினான் (1:16) 4) எகிப்திய மன்னன் தங்களுக்கு கூறியபடி செய்யாதிருந்த மருத்துவப் பெண்களின் பெயர்கள் என்ன? சிப்ரா- பூவா (1:15) 5) பின்பு பார்வோன் தன்குடி மக்கள் அனைவருக்கும் ஆணையிட்டது என்ன? எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறியுமாறு கூறினான். (1:22) 6) மோயீசனை நதியில் இருந்து காப்பாற்றியது யார் ? பார்வோனின் மகள் (2:5) 7) மோயீசன் என்னும் சொல்லுக்கு பொருள் என்ன? நீரிலிருந்து எடுக்கப்பட்டவன் (2:10) 8) பார்வோனின் மகள் மோயீசனை வளர்க்க யாரிடம் ஒப்படைத்தார் ? மோயீசனின் தாயிடம் (2:8-9) 9) தம் இனத்தவரான எபிரேயன் ஒருவனை, எபிரேயன் ஒருவன் அடிப்பதைக் கண்ட மோயீசன் என்ன செய்தார் ? அவனை அடித்துக் கொன்று மண்ணுக்குள் புதைத்துவிட்டார் (2:12) 10) மோயீசன் மிதியானுக்குத் தப்பி ஓடியது ஏன்? எகிப்தியனைக் கொன்றதால் கிடைக்கப்பெறும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக(2-15) 11) மிதியானில் மோயிசன் யாருடன் வாழ்ந்து வந்தார் ? இராகுவேல் குடும்பத்தினருடன் (2:16) 12) இத்திரோ என்பவர் யார் ? மிதியானின் அர்ச்சகர் (2:16) 13) இத்திரோவுக்கு எத்தனை புதல்வியர்கள்? ஏழு (2:16) 14) மோயீசன் யாரை மணமுடித்துக்கொண்டார் ? சிப்போரா(2:21) 15) மோயீசன் சிப்போரா வழியாக பிறந்த தன் மகனுக்கு என்ன பெயரிட்டார் ? கேர்சோம் (2:22) 16) கேர்சோம் என்ற பெயரின் பொருளென்ன? அந்நியன் (2:22) 17) மோயீசன் ஓரேப் மலையில் கண்டது என்ன? எரிந்துகொண்டிருந்த முட்புதரைக் கண்டார் (3:2) 18) எரியும் முட்புதரிலிருந்து கடவுள் மோயீசனுக்கு என்ன கூறினார் ? இஸ்ராயேல் மக்களை எகிப்தியரின் பிடியில் இருந்து விடுவிக்கவேண்டும் எனக் கூறினார் (3:8) 19) மோயீசன் கடவுள் பெயரைக்கேட்டபோது அவருக்குக் கிடைத்த பதில் என்ன? இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே (3:14) 20) மோயீசனுக்கு கடவுள் புதுமையான அடையாளமாக என்ன கொடுத்தார் ? மோயீசன் கையில் இருந்த தடியை பாம்பாக மாற்றினார் .(3:12) 21) பார்வோனிடம் மோயீசனுக்குப் பதிலாகப் பேசியது யார் ? ஆரோன் (4:14) 22) மோயீசன் எகிப்திற்குத் தன்னோடு யாரைக் கூட்டிச் சென்றார் ? தன் மனைவியையும் தம் புதல்வர்களையும் (4:20) 23) கடவுள் ஆரோனிடம் என்ன கூறினார் ? "மோசேயைச் சந்திக்க பாலைநிலத்துக்குப் போ"என்றார் .(4:27) 24) மோயீசனின் தந்தை பெயர் என்ன? அம்ராம்(6:20) 25) மோயீசனின் தாய் யார் ? யோக்கபேது (6:20) 26) பாரவோனைச் சந்திக்கும்போது மோயீசனுக்கு வயது என்ன? 80 வயது (7:7) 27) எலயாசர் என்பவர் யார் ? ஆரோனின் மகன் (6:23) 28) எகிப்தில் மந்திரவாதிகளை மோயீசன் எவ்வாறு தோல்வியுறச் செய்தார் ? மோயீசனின் கோல் பாம்பாக மாறி அவர்களுடைய பாம்புகளை விழுங்கி விட்டன (7:12) 29) ஆரோன் தன்னுடைய கோலால் நதிநீரைத் தொட்டவுடன் என்ன நடந்தது? தணணீர் இரத்தமாக மாறியது (7:20) 30) கடவுள் எகிப்தின்மேல் எத்தனை பெரும் துன்பங்களை அனுப்பினார் ? பத்து (7:14) 31) முதல் பெருந்துன்பம் என்ன? தண்ணீர் இரத்தமயமாதல் (8) 32) இரண்டாவது பெருந்துன்பம் என்ன? நிலப்பரப்பு முழுவதும் தவளையால் நிரப்பப்பட்டன. (8) 33) மூன்றாவது பெருந்துன்பம் என்ன? கொசுக்கள் தொல்லை (8) 34) நான்காவது பெருந்துன்பம் என்ன? ஈக்கள் தொல்லை (8) 35) ஐந்தாவது பெருந்துன்பம் என்ன? எகிப்தியரின் கால்நடைகள் சாவு (8) 36) ஆறாவது பெருந்துன்பம் என்ன? மனிதர் மேலும், விலங்குகள் மேலும் கொப்புளங்கள் உண்டாயின.(9) 37) ஏழாவது பெருந்துன்பம் என்ன? கல்மழை (9) 38) எட்டாவது பெருந்துன்பம் என்ன? வெட்டுக்கிளிகள் தொல்லை (9) 39) ஒன்பதாவது பெருந்துன்பம் என்ன? மூன்று நாள் காரிருள் (10) 40) பத்தாவது பெருந்துன்பம் என்ன? எகிப்து நாட்டின் எல்லா ஆண்பால் தலைப்பிறப்பையும், விலங்கினங்களின் அனைத்து ஆண்பால் தலையீற்றுக்களையும் ஆண்டவர் சாகடித்தார் . (12 :29) 41) எகிப்தியரின் எல்லா தலைப்பிறப்புக்களின் சாவிற்குப் பிறகு கடவுள் மோயீசனுக்கு என்ன கூறினார் ? பாஸ்கா உணவு உண்ணவேண்டும் என்று கூறினார் . (12:17) 42) செம்மறி ஆட்டின் இரத்தத்தை கடவுள் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார் ? இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, பாஸ்கா உணவு உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூசவேண்டும் என்று கூறினார் .(12:7) 43) பாஸ்கா என்றால் என்ன? கடவுள் எகிப்தியரை சாகடித்த போது, எகிப்திலுள்ள இஸ்ராயேல் மக்களின் வீடுகளைக் கடந்து சென்றார் என்று பொருள்.(12:27) 44) இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது எகிப்தியர்களிட மிருந்து கேட்டது என்ன? வெள்ளி அணிகலன்களும் போர்வைகளும் (12:35) 45) மோயீசனோடு எகிப்திலிருந்து வெளியேறினவர்கள் மொத்தம் எத்தனை பேர் ? ஏறத்தாள ஆறு லட்சம்பேர் .(12:37) 46) அவர்கள் எங்கிருந்து சென்றார்கள்? இராம்சேசிலிருந்து (12:37) 47) யுதர்கள் எகிப்தில் எத்தனை வருடங்கள் வாழ்ந்தனர் ? நானுரற்றி முப்பது ஆண்டுகள் (12:40) 48) இஸ்ராயேல் மக்கள் யோசேப்பின் எலும்புகளை அவர்களோடு எடுத்துச் சென்றதன் காரணம் என்ன? என் எலும்புகளை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள் என யோசேப்பு அவர்களுக்குக் கூறியிருந்தார் . (13:19) 49) கடவுள் இஸ்ராயேல் மக்களை எவ்வாறு நடத்திச் சென்றார் . பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார் . (13:21) 50) இஸ்ராயேல் மக்கள் செங்கடலை எவ்வாறு கடந்தனர் ? மோயீசன் தன் கோலை உயர்த்திப்பிடித்து, கையைக் கடல்மேல் நீட்டி அதை இரண்டாகப் பிரித்தார் . பின் அவர்கள் கடலைக்கடந்தனர் . (14:20) 51) இஸ்ராயேலரைத் துரத்திச் சென்ற எகிப்தியபடை வீரர்கள் என்ன ஆனார்கள்? ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார் ;(14:27) 52) இஸ்ராயேல் மக்கள் ஏலிம் என்ற இடத்தில் தங்கியது ஏன்? அங்கே 12 நீரூற்றுக்களும், 70 பேரீச்சமரங்களும் இருந்ததால்தான். (15:27) 53) கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு உணவாக என்ன கொடுத்தார் ? மன்னா, காடை (16) 54) ஏழாம்நாள் இவ்வுணவை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தாரா? இல்லை. (16:27) 55) இஸ்ராயேல் மக்கள் எத்தனை வருடங்களாய் மன்னாவை உண்டனர் ? நாற்பது ஆண்டுகள் (16:35) 66) மாசா, மெரீபா என்ற இடங்களில் நடந்தது என்ன? மோயீசன் பாறையிலிருந்து தண்ணீர் வரச் செய்தார் . (17:6) 57) ஏபிரேயத்தில் "மாசா" என்பதன் பொருள் என்ன? சோதித்தல் (17:7) 58) ஏபிரேயத்தில் " மெரிபா" என்பதன் பொருள் என்ன? வாதாடுதல் (17:7) 59) அமலேக்கியருக்கு எதிராகப் போரிட்டது யார் ? யோசுவா மற்றும் அவருடைய மக்கள் (17:9) 60) இத்திரோ மோயீசனுக்குக் கூறிய அறிவுரை என்ன? மக்களுக்கு நீதி வழங்க நல்ல பண்பாளரைக் கண்டுபிடித்து நியமனம் செய்யும்படி கூறினார் . (18:21) 61) இஸ்ராயேல் மக்கள் சீனாய் மலைக்கு எப்போது போய்ச் சேர்ந்தனர் ? எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம், முதல் நாளில். (19:1) 62) ஆண்டவர் சீனாய் மலைமேல் எவ்வடிவில் இறங்கி வந்தார் ? நெருப்பு வடிவில் (19:18) 63) ஆண்டவர் மோயீசனுக்கு என்ன கொடுத்தார் ? பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் . (20) 64) மோயீசன் மலையிலிருந்து கீழே வரத் தாமதித்தபோது இஸ்ராயேல் மக்கள் என்ன செய்தார்கள்? பொற்கன்று குட்டியை செய்து வழிபட்டனர் . (32:41) 65) கடவுளுக்கென குருத்துவப் பணிபுரிய கடவுள் யாரை திருநிலைப்படுத்தினார் ? ஆரோனையும் அவன் புதல்வர்களையும் (29) 66) இஸ்ராயேலரின் பாவத்தினால் எத்தனை பேர் மடிந்தனர் ? ஏறத்தாள மூவாயிரம்பேர் (32:28) 67) கடவுள் எந்த நாளில் உறைவிடங்களில் நெருப்பு உண்டாகக் கூடாது என்றார் ? ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில். |