Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(29) யோவேல்


1) யோவேல் என்னும் பெயரின் பொருள் என்ன?
    இப்பெயருக்கு யாவே இறைவனை கடவுளாகக் கொண்டவர் என்பது பொருள்

2) யோவேல் என்பவர் யார்?
     பெத்துவேலின் மகன் (1:1)

3) யோவேல் இறைவாக்கினரைப் பற்றி கூறுக.
     யோவேல் இறைவாக்கினரைப் பற்றியும் அவரது பணி பற்றியும் மிகச் சிறிதே    
     நமக்குத் தெரிய வருகின்றது. இந்நூல் கி.மு. ஐந்தாம் அல்லது நான்காம்
     நூற்றாண்டில் பாரசீகரின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
     பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட கொடும் வறட்சி, வெட்டுக்கிளிகள் விளைத்த அழிவு
     ஆகியவற்றை, கடவுளின் நாளுக்கும் கடவுளின் நீதியை எதிர்ப்பவர்கள் மீது
     வரவிருந்த தண்டனைக்கும் முன்னடையாளங்களாக யோவேல் கருதுகின்றார்.
     மனமாற்றத்திற்குக் கடவுளின் அழைப்பு, நல்வாழ்வு அளிப்பதாக ஆண்டவர்
     கூறும் உறுதி மொழி, கடவுளின் ஆசி, ஆண் பெண் இளைஞர் முதியோர்
     என்ற வேறுபாடு இன்றி அனைவர் மீதும் கடவுள் ஆவியைப் பொழிந்தருளுவார்
     என்ற வாக்குறுதி ஆகியவை பற்றி இவரின் நூல் கூறுகிறது.

 
4) யோவேல் மக்களை வேண்டுதலுக்கு எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
      குருக்களே, சாக்கு உடை உடுத்திக்கொண்டு தேம்பி அழுங்கள், பில்ப்பீடத்தில்
      பணிபுரிவோரே, அலறிப் புலம்புங்கள்" என்றார். (1:13)

5) ஆண்டவர் மக்களின் மனமாற்றத்திற்கு எவ்வாறு அழைப்பு விடுத்தார்?
     "இப்போதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள்
      முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்றார். (2:12)

6) யோவேல் 2:1-2,13ல் கூறுவது என்ன?

     "ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம், அது வந்துவிட்டது. அதுவோ இருளும்     
      காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி
     மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம்
      வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல்
      தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை... 'நீங்கள் உங்கள் உடைகளைக் 
      கிழித்துக்கொள்ள வேண்டாம். இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள்
      ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்'. அவர் அருள் நிறைந்தவர், இரக்கம்
       மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய
        தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்."

 7) யோவேல் இறைவாக்கினர் ஆவியின் அருட் பொழிவை எவ்வாறு
       வெளிப்படுத்துகிறார்?

       "நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.  உங்கள்
        புதல்வரும் புதல்வியரும், இறைவாக்கு உரைப்பர்" (2:28)

  8) யோவேல் இறைவாக்கினர்படி, தீர்வு நாளின் இடம் எங்கு உள்ளது?

     "அப்போது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து யோசபாத்து
      பள்ளத்தாக்கிற்கு இறங்கி வரச் செய்வேன்: அங்கே நான், என் மக்களும்,
      உரிமைச் சொத்துமாகிய இஸ்ராயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராக,
      தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்". (3:2)

9) ஆண்டவரின் நாளை யோவேல் எவ்வாறு வர்ணிக்கிறார்?
      கதிரவன் இருண்டு போகும்: நிலவோ இரத்தமாக மாறும். (2:31)
 
 

உந்தன் சக்தி வாய்ந்த செபமே எந்தன் வாழ்வில் என்றும் ஜெயமே!
உந்தன் அன்பு பொழியும் கரமே எனை வாழவைக்கும் வரமே!!