1) ஓசேயா என்பவர் யார்?
வடநாடான இஸ்ராயேலில் ஆமோசுக்கு சற்று
பின்னர் கி.மு 750ல்
வாழ்ந்தவர்.
2) ஓசேயா என்றும் பெயரின் பொருள் என்ன?
ஒசேயா என்னும் என்னும் பெயருக்கு "கடவுளே மீட்பர்"
என்பது பொருள்.
3) இவ்விறைவாக்கினரின் சிறப்பு என்ன?
இவர் ஆண்டவர் கட்டளையின்படி, விலைமகள் ஒருத்தியை
சேர்த்துக் கொண்டு,
வேசிப்பிள்ளைகளைப்
பெற்றெடுத்தார்.
ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு
விலகி, வேசித்தனத்தில்
மூழ்கியிருந்தது. (1:2)
4) ஓசேயாவின் மனைவி
பெயர் என்ன?
கோமேர் (1:3)
5) திருமணத்திற்குப் பிறகு, கோமேர் ஓசேயாவிற்கு
பிரமாணிக்கமாய் இருந்தாரா?
இல்லை.
6) ஓசேயாவை விட்டுச் சென்ற கோமேரை
அவர் என்ன செய்தார்?
அவர் கோமேரைத் தேடிக் கண்டு பிடித்து, மீண்டும் தன்
இல்லத்திற்கு கொண்டு
வந்தார்.
7) திருமணத்தின் வழியாக, ஒசேயா
இறைவாக்கினர் கற்றுத் தரும்
பாடம் என்ன?
சிலை வழிபாட்டுப் பாவத்திலிருந்து, இஸ்ராயேல் கடவுளிடம்
திரும்பவேண்டும்
|
|