Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(24) எரேமியா 

1. கடவுளால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
     "தாய்வயிற்றில் உன்னை நான் உருவாக்குமுன்பே அறிந்திருந்தேன், நீ பிறக்கு  
       முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன், மக்களினங்களுக்கு 
       இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்" (1:5)

2. எரேமியா குயவர் வீட்டில் இருக்கும்பொழுது கடவுள் கூறியது என்ன?
     "இந்தக் குயவர் கையிலுள்ள களிமண்ணைப்போல, இஸ்ராயேல் வீட்டாரே,  
       நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்" (18:6)

3. எரேமியாவை சிறையில் அடைத்தது யார்?
       பஸ்கூர் என்னும் குரு. (20:2)

4. எரேமியா கூறிய பதில் என்ன?
    "யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்: அவன்    
      அவர்களை பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்". (20:4)

5. எரேமியா இயேசுவின் வருகையைப்பற்றிக் கூறியது என்ன?
    இதோ நாட்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர்" 
     தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன்
      செயல்படுவார் (23:5)

6. எரேமியா சாகவேண்டுமென குருக்கள் கூச்சலிட்டது ஏன்?
    அவர்  எருசலேமின் அழைவைப்பற்றி இறைவாக்கு உரைத்ததால். (26:9)

7. உரியா என்பவர் யார்?
     அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன். இவரும்
     எரேமியாவைப் போல் எருசலேம் நகரின் அழிவைப்பற்றி முன்னறிவித்தவர்.
     (26:20)

8. உரியாவிற்கு நடந்தது என்ன?
     அவர் உயிருக்கு அஞ்சி எகிப்துக்கு ஓடினார். ஆனால் அவர் மீண்டும் கொண்டு
     வரப்பட்டு சாகடிக்கப்பட்டார். (26:21-23)

9. எரேமியா எவ்வாறு காப்பாற்றப்பட்டார்?
     அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார். (26:24)

10. எரேமியா தன் தோளின்மேல் நுகத்தை வைத்துக்கொண்டு மக்கள் முன்    
       தோன்றியது ஏன்?

       அவர்கள் அனைவரும் பாபிலோனுக்கு அடிமையாவார்கள் என்பதை       
       மக்களுக்கு எடுத்துரைக்கவே. (27:6)

11.  எரேமியா 31:33-34 ல் என்ன கூறுகிறார்?
       அந்நாள்களுக்குப் பிறகு, இசுரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும்    
       உடன்படிக்கை இதுவே:
       என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில்
       எழுதிவைப்பேன்.
       நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்;அவர்கள் என்மக்களாய் இருப்பார்கள்,
       என்கிறார் ஆண்டவர்.
       இனிமேல் எவரும் "ஆண்டவரை அறிந்துகொள்ளும்" எனத் தமக்கு   
       அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார்.
       ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை 
       அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர்.
       அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய 
       பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன்."

11. செதேக்கியாவுக்கு ஏற்பட்டது என்ன?
        பாபிலோனிய மன்னன் செதேக்கின் புதல்வர்களை அவன் கண்முன்னாலே
        கொன்றான். மேலும் செதேக்கின் கண்களைப் பிடுங்கி அவரையும்
         கொன்றான். (39:6-7)

12. ஆண்டவரின் இல்லம் அழிக்கப்பட்டது எப்படி?
         பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் மெய்க்காப்பாளர் நெபுசரதான்     
       ஆண்டவரின் இல்லத்தை தீக்கிரையாக்கினான். (52:13)

13. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எத்தனைபேர்?
      4600பேர். (52:30)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்