1. இனிமைமிகுபாடல் என்னும்
நூலை எழுதியவர் யார்?
மாமன்னர் சாலமோன் (முன்னுரை)
2. இந்நூலின் முன்னடக்கம் என்ன?
கடவுளுக்கும் இஸ்ராயேல் மக்களினத்திற்கும் இடையே நிலவும்
அன்புறவை
வர்ணிக்கின்றது. (முன்னுரை)
3. இக்கருத்தை
நூலாசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
ஆண் - பெண் இருவருக்கும் இடையே உண்டான அன்புணர்வின் மூலமாக
எடுத்துரைக்கிறார். (முன்னுரை)
4. கடவுள் என்னும் பெயரை இந்நூலாசிரியர் இந்நூலில்
பயன்படுத்தியுள்ளாரா?
இல்லை. (முன்னுரை)
5. இந்நூலுக்கு திருச்சபை கூறும் பல்வேறு பொருள் என்ன?
கடவுள் - இஸ்ராயேல் இடையே நிலவும் உறவு.
கடவுள் - சவுல் இடையே நிலவும் உறவு.
ஆண் - பெண் இடையே உறவும் நிலவு
6. முதல் பாடலில் திலை கூறுவது என்ன?
"எருசலேம் மங்கையரே, கருப்பாயிருப்பினும், நான் எழில்
மிக்கவளே!" (1:5)
7. ஐந்தாவது பாடலில்,
"மரியா ஆண்டவரின் தாய்" என்னும்
கருத்தை எந்த
வசனம் விபரிக்கின்றது?
"யார் இவள், வைகறைபோல் தோற்றம், திங்களைப்போல் அழகு,
ஞாயிறுபோல்
ஒளி:போரணிபோல் வியப்பார்வம், யாரிவள்?" (6:10)
|
|