Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(21)  சபை உரையாளர்

   
1. சபை உரையாளர் என்னும் நூலில் அடங்கியுள்ளது என்ன?
      இது ஒரு ஞானியின் சிந்தனைகளைக் கொண்டது. அவர் மானிட வாழ்வு 
      எவ்வளவு குறுகியது,  முரண்பாடானது, என்று கண்டுணர்கிறார்.
 
2. சபை உரையாளர் என்னும் நூல் எவ்வாறு தொடங்குகிறது?
    "வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண், மனிதர் தம் வாழ்நாள் முழுவதும்
     பாடுபட்டு உழைக்கின்றனர், ஆனால் அவர்கள் உழைப்பினால் பெறும் பயன்
     என்ன?" (1:2-3)

3. 3வது அதிகாரத்தில் என்ன கூறுகின்றார்?
      ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு
      நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.
      பிறப்புக்கு ஒரு காலம்,  இறப்புக்கு ஒரு காலம்;
      நடவுக்கு ஒரு காலம்,   அறுவடைக்கு ஒரு காலம்;
      கொல்லுதலுக்கு ஒரு காலம்:   குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;
      இடித்தலுக்கு ஒரு காலம்:   கட்டுதலுக்கு ஒரு காலம்;
      அழுகைக்கு ஒரு காலம்:   சிரிப்புக்கு ஒரு காலம்;
      துயரப்படுதலுக்கு ஒரு காலம்: துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்;
      கற்களை எறிய ஒரு காலம்: கற்களைச் சேர்க்க ஒரு காலம்;
      அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்;
       தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம்: இழப்பதற்கு ஒரு காலம்;
      காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்;
      கிழிப்பதற்கு ஒரு காலம்: தைப்பதற்கு ஒரு காலம்;
      பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்;
      அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்;
      போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம் உண்டெனக் கூறுகின்றார்(3:1-8)

4. இந்நூலின் எழுத்தாளர் பணத்தைப்பற்றிக் கூறுவது ஏன்ன?
     பண ஆசை உள்ளவர்க்கு, எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது: 
     செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர், அதனால் பயனடையாமல்
     போகிறார்.(5:6)

 5.  பாடுபட்டு உழைக்கும் மனிதனின் உழைப்பு பயனற்றது என ஏன் கூறுகின்றார்?

    மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன்.
     இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும்.
     இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். தம் கைகளைக்
     கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.
     காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய
     இருப்பதைவிட, மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல். (4:4-6)

 
6. உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று எதைக் கூறுகின்றார்?
      ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன்
      பிறந்தாருமில்லை; என்றாலும் அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால்,
      தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை; தாம்  
       இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல்
       இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது
       வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ? (4:8)

7. மனிதன் வேலை செய்வது ஏன்?
    வயிற்றுக்காகவே ஒருவன் வேலை செய்கிறான், ஆனால் அவருக்கு போதுமான
     உணவு கிடைப்பதில்லை. (6:7)

8. நூல் எழுதுவதைப் பற்றி சபை உரையாளர் கூறுவது என்ன?
    நூல்கள் பல எழுதுவதால்  பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு
    இளைப்பு உண்டாக்கும். (12:12)

9. மனிதனின் கடமை என்ன?
    கடவுளுக்கு அஞ்சி நடப்பதும், அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதும் ஆகும்.
      (12:13)

10. கடவுள் இறுதியில் என்ன செய்வார்?
     நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்கும் கூட அது
     நல்லதோ, தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.
      (12:14)
 
 

தாயே உந்தன் அன்பு வழியில் உமது மகனிடம் அழைத்துச் செல்வாய்