Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(17)எஸ்தர்  

1. அகஸ்வேர் என்பவர் யார்?
     இந்தியா தொடங்கி எத்தியோப்பியாவரை இருந்த 117 மாநிலங்களையும் ஆட்சி
     செய்த மன்னர் (1:1)

2. அகஸ்வோரின் தலைநகர் எது?
     சூசா (1:2)

3. அப்பொழுது இருந்த அரசியின் பெயர் என்ன?
    வஸ்தி (1:9)

4. மன்னர் அகஸ்வேர், அரசி வஸ்தியின் மீது கடுஞ்சினமுறக்காரணம் 
    என்ன?

   மன்னர் அரசியிடம் தம்முன் வரும்படி கட்டளையிட்டார்.
   இக்கட்டளைக்கு அரசி இணங்க மறுத்துவிட்டார். (1:12)

5. அரச கட்டளைக்கு கீழ்ப்படியாத அரசியை அவர் எவ்வாறு தண்டித்தார்?
    அரசர் முன் இனி வரக்கூடாது என்றார். (1:19)

6. அரசர் அரசியைப் பிரிந்தவுடன் யாரை மணந்தார்?
    எஸ்தர் என்பவரை (1:16)

7. எஸ்தர் என்பவர் யார்?
    அபிகாலியின் புதல்வி. (2:15)

8. மொதர்க்காய் என்பவர் யார்?
     எஸ்தரின் சிற்றப்பன். (2:7)

9. மன்னர் அகஸ்வேரைக் கொலை செய்ய வகை தேடியவர்கள் யார்?
     பிகதான், தெரேசு. (2:21)

10. அவர்களுடைய திட்டத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
     மொதர்க்காய் (2:22)

11. இவ்வாறு திட்டம் தீட்டிய இருவருக்கும் என்ன நடந்தது?
     அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். (2:23)

12. ஆமான் என்பவர் யார்?
      மன்னர் அவையில் உயர் பதவி புரிந்தவர். (3:2)

13. ஆமான் மொதர்க்காய் மீது சினம் கொண்டது ஏன்?
      மொதர்க்காய் அவர் முன்னிலையில் மண்டியிட்டு வணங்க
      வில்லை.(3:2)

14. மொதர்க்காயை அழிக்க ஆமான் தீட்டிய திட்டம் என்ன?
     அரசெங்கும் இருந்த யூதர்களை அழிக்க மன்னரிடமிருந்து அனுமதி
     பெற்றார்  (3:11)

15. எஸ்தர் என்ன செய்தாள்?
      சாவுத் தண்டனைக்குரிய செயலை அவர் செய்தார். மன்னரின் அழைப்பின்றி
      அவரின் அவைக்குள் நுழைந்தாள். (5:1c)

16. மன்னர் எஸ்தருக்கு தண்டனை கொடுத்தாரா?
      இல்லை.

17. எஸ்தரின் வேண்டுகோள் என்ன?
     தன் மாளிகையில் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கெடுக்குமாறு    
     அரசரையும், ஆமோனையும் பார்த்து வேண்டுகோள் விடுத்தாள். (5:4)

18. தன்னை மதிக்காத மொதர்க்காயை ஆமான் செய்தது என்ன?
      ஐம்பது முழு உயரத் தூக்குமரம் செய்து அடுத்த நாள் மொதர்க்காயை
      தூக்கிலிடுமாறு கட்டளையிட்டார். (5:14)

19. மொதர்க்காய் தூக்கிலிடப்பட்டாரா?
      இல்லை (7:9)

20. மன்னரது ஆட்சிக் குறிப்பேட்டை ஆமான் வாசித்தபோது, மன்னன் கூறியது 
      என்ன?

      ஆடைகளையும் புரவிகளையும் விரைவாய்க் கொணர்ந்து மொதர்க்காய்க்கு  
    அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின்மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் 
     வருமாறு கூறினார். (6:10)

21. எஸ்தர் விருந்தளிக்கும்போது கேட்ட வேண்டுதல் என்ன?
     தனக்கும், தன் மக்களுக்கும் எந்தத் தீங்கும் விளைக்காமல் இருக்க
     வேண்டினார். (8:6)

22. ஆமான் எவ்வாறு தண்டிக்கப்பட்டான்?
    மொர்தெக்காயைக் கொல்ல ஆமான் ஏற்பாடு செய்திருந்த  தூக்குமரத்திலேயே,
    யூதர்களுக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான். (7:4,10)

23. பூரிம் பெருவிழா என்பது என்ன?
    இது யூதர்களின் திருவிழா. ஆமான்  யூதர்க்கெல்லாம் எதிரியாய் இருந்து
    அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும், பூர் என்ற சீட்டைப்
   போட்டான். ஏஸ்தர் மன்னரின் உதவியை நாட மன்னரால் அவர்களுக்கு
   விடுதலை அளிக்கப்பட்டது. எனவே யூதர்கள் இந்நாட்களை பூர் எனற
   சொல்லினின்று எழுந்த  பூரிம் என்ற பெயரால் அழைத்து பெருவிழா
   கொண்டாடி வந்தனர். (9:19-21)
 
 

தேவைகள் யாவையும் தருபவளே! வேண்டிய வரங்களைத் தாருமே