Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(15)  எஸ்ரா 

'எஸ்ரா' என்னும் இந்நூல் 'குறிப்பேட்டின்' தொடர்ச்சியாகும்.
எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.
மேலும் அவர் 'இறையாட்சி' இஸ்ரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகிவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.

1. பாரசீக மன்னன் சைரசு, ஜெருசலேமுக்கு திரும்பிச் சென்ற யூதர்களுக்கு என்ன
    கொடுத்தார்?

    நெபுக்கத்னேசர் ஜெருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான 
     பாத்திரங்களை எடுத்து வந்து, தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தார்.
     அவை அனைத்தையும் திருப்பிக் கொடுத்தார். (1:7)

2. இந்தப் பாத்திரங்கள் அனைத்தையும் யாரிடம் கொடுத்தார்?
     யுதாவின் தலைவரான் சேஸ்பட்சரிடம் (1:8)

4. ஜெருசலேமுக்கு திரும்பிச் சென்றவர்கள் எத்தனை பேர்?
     42,360பேர் (2:64)

5. ஆண் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை என்ன?
      7337 பேர். (2:65)

6. கோவில் வேலையை தொடங்கியவர்கள் யார்?
     செருபாபேல், ஏசுவா (3:8)

7. கோவில் கட்டும் பணியில் உதவி செய்ய முன்வந்தது யார்?
     சமாரியர்கள். (4:2)

8. சமாரியர்களின் உதவியை யூதர்கள் ஏற்றுக் கொண்டார்களா?
     இல்லை. (4:3)

9. சமாரியர்களை பணிக்கு ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் செய்தது என்ன?
     யூதர்களுக்கு எதிராக, பாரசீக மன்னனுக்கு கடிதம் எழுதினர். (4:6)

10. பாரசீக மன்னன் செய்தது என்ன?
      கோவில் கட்டும் வேலையை நிறுத்தினார். (4:23)

11. யூதர்களுக்கு கோவிலைக் கட்டி முடிக்க அனுமதித்தது யார்?
      பாரசீக மன்னன் தாரியு (6:13)

12. எஸ்ரா என்பவர் யார்?
      இவர் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் மோசேயுக்கு அளித்திருந்த
       திருச்சட்ட நூலின் வல்லுனர். (7:6)

13. எஸ்ராவிற்கு பாபிலோனிலிருந்து ஜெருசலேமுக்குச் சென்றடைய எவ்வளவு
       காலம் ஆனது?

       5 மாதங்கள். (7:9)

14. ஜெருசலேமுக்கு சென்றடைந்தபின் எஸ்ரா செய்தது என்ன?
     அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தை கற்று அதன்படி நடப்பதிலும்,  
     சட்டத்தையும், முறைமையையும் இஸ்ராயேல் மக்களுக்கு கற்றுக்
     கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். (7:10)

15. எஸ்ரா கட்டளைகளை எவ்வாறு ஆவணப்படுத்தினார்?
      பாரசீக மன்னன் எஸ்ராவுக்கு அதிகாரம் கொடுத்தார். (7:11)

16.
இஸ்ராயேலுக்கு எஸ்ரா கொடுத்த ஆணை என்ன?
     வேற்றினப் பெண்களை மணந்தவர்களாக கண்டுபிடிக்கப்பட்டவர்களை
     விலக்கி விடுமாறு கூறினார். (10:18)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்