1. குறிப்பேடு என்னும்
நூல் கூறுவது என்ன?
சாமுவேல் மற்றும் அரசர்கள் ஆகிய
நூல்களில் குறிக்கப்பெற்ற
நிகழ்ச்சிகளே
குறிப்பேடுகளில் வேறொரு கோணத்தில்
காட்டப்படுகின்றன.
2. ஆலயம் கட்டியெழுப்ப கடவுள் தாவீதுக்கு அனுமதி தராதது
ஏன்?
ஏனெனில் தாவீது
போர் புரியும் மன்னன் என்பதாலும்,
அவர்
இரத்தம்
சிந்தியதாலும்.
3. கோவில் கட்டும் பொறுப்பை தாவீது யாரிடம்
ஒப்படைத்தார்?
அவர் மகன் சாலமோனிடம்.
4. கோவில் கட்டும் பணிக்கு
எத்தனைபேர் நியமிக்கப்பட்டனர்?
சுமை சுமப்பதற்கு 70,000 பேர், கருங்கற்களை வெட்ட 80,000
பேர், அவர்களைக்
கண்காணிக்க 3600பேர். (2:2)
5. திருக்கோவிலின் அற்பண நாளன்று, எத்தனை ஆடு மாடுகள்
பலியிடப்பட்டன?
22,000 மாடுகள், 120,000 ஆடுகள். (7:5)
6. பாரசீக மன்னன் சைரசு கட்டளையிட்டது என்ன?
யூதாவில் உள்ள
ஜெருசலேமில் கோவில் கட்ட செல்ல
விரும்புகிறவர்கள்
செல்லலாம்
என்றார். (36:23)
|
|