1. இஸ்ராயேல் அரசர்
அகசியாவுக்கு நடந்தது என்ன?
தான் மேல்மாடியிலிருந்து பலகணி வழியாய் கீழே விழுந்து
காயமுற்றார். (1:1)
2. அகசியா தன்
தூதர்களை எங்கே அனுப்பினார்?
ஏக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் (1:2)
3. அகசியா தன்
தூதர்களை அங்கு அனுப்பியது ஏன்?
அவருடைய காயம் குணமாகுமா எனத் தெரிந்து கொள்ள. (1:2)
4. எலியாவிடம்
கடவுள் கூறியது என்ன?
அகசியா கிடக்கும் படுக்கையிலேயே இறந்து போவான் என்று அவருடைய
தூதருக்கு கூறுமாறு சொன்னார்.(1:4)
5. எலியா மன்னனின்
சாவைப்பற்றி அறிவித்ததை கேள்விப்பட்ட மன்னன் என்ன
செய்தான்?
தனது 50 வீரர்களை அனுப்பி எலியாவைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான்.
(1:9)
6. இந்த 50
வீரர்களையும் எலியா என்ன செய்தார்?
அவர்கள் மேல் வானிலிருந்து நெருப்பு மழை பொழியச் செய்தார்.
(1:10)
7. அகசியா
இறந்தவுடன், இஸ்ராயேலின் அரசனானது யார்?
அவருக்குப் புதல்வர் இல்லாமையால், அவருக்குப் பின், யோராம்
அரசனானார்.
(1:17)
8. எலியாவுக்கு
என்ன ஆனது?
எலியா சுழல் காற்றில் விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.
(2:12)
9. எலிசாவைப்
பார்த்து சில சிறுவர்கள் சொன்னது என்ன?
வழுக்கைத் தலையா போ! வழுக்கைத் தலையா போ! என்று ஏளனம்
செய்தனர். (2:23)
10. அதற்கு எலிசா
என்ன செய்தார்?
அவர் திரும்பிப் பார்த்து ஆண்டவர் பெயரால் அவர்களை
சபித்தார். (2:24)
11. அந்த 42
சிறுவர்களுக்கு நேர்ந்தது என்ன?
காட்டில் இருந்து இரண்டு பெண் கரடிகள் வெளிவந்து,
அவர்களைக் குதறிப்
போட்டன. (2:24)
12. யோராம் எத்தனை
ஆண்டுகள் ஆண்டான்?
12 ஆண்டுகள். (3:1)
13. ஏழைக்
கைம்பெண்ணின் இரு புதல்வர்களை அடிமைத்தனத்திலிருந்து எலிசா
எவ்வாறு காப்பாற்றினார்?
ஏழைக் கைம்பெண் கலயத்தில் வைத்திருந்த எண்ணெயைப்
பெருக்கி அவரிடம்
நீ போய் எண்ணையை விற்று உன் கடனைத் தீர்த்து
புதல்வர்களைக்
காப்பாற்றிக் கொள் என்று கூறினார். (4:7)
14. நாமான் என்பவர்
யார்?
சிரியா மன்னனின் படைத்தலைவர். இவர் ஒரு தொழுநோயாளி.
(5:1)
15. நாமானின்
தொழுநோயை குணப்படுத்தியது யார்?
எலிசா
(5:10)
16. இஸ்ராயேல்
அரசர் யோராமை கொலை செய்தது யார்?
ஏகூ. (9:24)
17. ஈசபெல் எவ்வாறு
இறந்தார்?
அவரது பலகணி வழியாக கீழே தள்ளி விடப்பட்டு கொலை
செய்யப்பட்டார்.
அவரது உடலை நாய்கள் தின்றன. (9:33,37)
18. ஆகாபிற்கு
எத்தனை புதல்வர்கள் இருந்தனர்?
70 புதல்வர்கள் (10:6)
19. ஏகூ ஆகாபின்
மைந்தர்களுக்கு எதிராகச் செய்தது என்ன?
அவர்கள் அனைவரையும் கொல்லுமாறு கட்டளையிட்டார்.
(10:6)
20. பாகைலை
வழிபட்டவர்களை ஏகூ என்ன செய்தார்?
அவர்கள் அனைவரையும் கொலை செய்தார். (10:25)
21. ஏகூ இஸ்ராயேலை
எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான்?
28 ஆண்டுகள். (10:36)
22. ஏகூ
இஸ்ராயேலின் அரசராக இருந்தபொழுது
யூதாவின்
மன்னராக இருந்தது
யார்?
யோவாசு. (12:1)
23. யோவாசு
அரசராகப் பொறுப்பேற்ற பொழுது, அவருக்கு வயது என்ன?
ஏழு. (12:1)
24. யோவாசு எத்தனை
ஆண்டுகள் ஜெருசலேமில் ஆட்சி புரிந்தார்?
40 ஆண்டுகள் (12:1)
25. யோவாசு எவ்வாறு
மரித்தார்?
யோவாசின் அலுவலர்கள் அவனைக் கொன்றனர். (12:20)
26. சமாரியாவைக்
கைப்பற்றியது யார்?
அசீரியர். (17:24)
27. அப்பொழுது
சமாரியர்களுக்கு நேர்ந்தது என்ன?
அவர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். (17:24)
28. சமாரியர்கள்
என்பவர்கள் யார்?
சமாரிய மக்களினத்தைப் பெருக்குவதற்காக, அசீரிய
மன்னன் மக்களை அங்கு
கொண்டு வந்தான். இந்த அசீரியர்கள் யூதப் பெண்களை
மணந்தனர்.
இக்கலப்புத் திருமணத்தில் இறந்த குழந்தைகள் தான்,
சமாரியர்கள் என்று
அழைக்கப்படகின்றனர்.
29. அசீரிய மன்னன்
சனத்கெரிபு யூத அரசர் எசேக்கியாவிடம் கேட்டது என்ன?
(30 தாலந்து - 1600 கிலோகிராம்) 30 தாலந்து
பொன்னும், (300 தாலந்து 1200
கிலோகிராம்); வெள்ளியூம். (18:14)
30. அசீரியர்களைத்
தோற்கடிக்க, கடவுள் இஸ்ராயேலர்களுக்கு எவ்வாறு
உதவினார்?
ஆண்டவரின் தூதர், அசீரியரின் பாளையத்தில் 185,000 பேரைக்
கொன்றார்.(19:35)
31. சனத்கெரிபு
எவ்வாறு இறந்தார்?
அவரது புதல்வர்கள் அவரை வாளால் வெட்டிக் கொன்றனர்.
(19:37)
32. யூதாவைக்
கைப்பற்றிய பாபிலோனிய மன்னன் யார்?
நெபுக்கத்னேசர். (25:8)
33.
நெபுக்கத்னேசரால் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டவர்கள்
யார்?
தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம்
படை
வீரர்களையும், சிற்பக் கலைஞர்களையும்,
கொல்லர்களையும், யுத அரசன்
யோயாக்கீனையும், அரசனின் தாயையும், மனைவியரையும்,
அவனுடைய
அதிகாரிகளையும், வலிமை வாய்ந்த 7000; பேர்களையும்,
போர்த் திறனும் உடல்
ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும்,
கொத்தர்களையும் நாடு
கடத்தினான் (24:14-16)
34. யோயாகீனுக்குப்
பதிலாக யூத அரசராய் நெபுக்கத்னேசர் யாரை நியமித்தார்?
செதெக்கியா (24:17)
35.
செதெக்கியாவுக்கு நேர்ந்தது என்ன?
இவர் பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததால்,
பாபிலோனுக்
குக் கடத்தப்பட்டார். (24:20)
36. நெபுக்கத்னேசர்
ஜெருசலேம் நகரை என்ன செய்தார்?
ஜெருசலேமை தீக்கிரையாக்கினார். (25:9)
|
|