Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(11) அரசர்கள் 1

1. தாவீதின் வயது முதிர்ந்த காலத்தில் அவருக்கு அடுத்ததாக  அரசராகத்  
     திட்டமிட்டவன் யார்?

     அதோனியா (1:5)

2. அதோனியா
வுக்கு துணை நின்றவர் யார்?
    யோவாபு(1:7)

3. அதோனியாவுக்கு எதிராய் இருந்தவர்கள் யார்?
    குருவாகிய சதோக்கும், இறைவாக்கினர் நாத்தானும். (1:8)

4. அதோனியா விருந்து வைத்தபொழுது சலமோனை அழைத்தாரா?
    இல்லை. (1:10)

5. சலமோனின் அன்னை பத்சேபாவிடம் நாத்தான் கூறியது என்ன?
    தாவீதிடம் சென்று சலமோனுக்கு அரசபதவி அளிக்குமாறு கேட்கச்சொன்னார்.
    (1:13)  
   

6. தன் மனைவி பத்சேபாவின் வேண்டுதலுக்கு தாவீது என்ன பதிலளித்தார்?    
    சலமோனை கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கே குரு  சதோக்கும், 
     இறைவாக்கினர் நாதானும், அவனை இஸ்ராயேலின்   அரசனாக திருப்பொழிவு
    செய்யட்டும். (1:34)

7. சலமோன் அரசராக திருப்பொழிவு செய்யப்பட்டாரா?
    ஆம். (1:39)

8. சாலமோன் தன்னுடைய சகோதரர் அதோனியாவை உயிருடன்  விட்டு
   வைத்தாரா?

    ஆம், அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பினார். (1:53)

9. தாவீது எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?
    தாவீது நகரில். (2:10)

10. தாவீது எத்தனை வருடம் ஆட்சி புரிந்தார்?
      40 ஆண்டுகள். (2:11)

11. சாலமோன் அதோனியாவைக் கொலை செய்யுமாறு  கட்டளையிட்டது ஏன்?
      கனேமைச் சார்ந்த அபிசாகை அவருக்கு மணமுடித்து வைக்கும்படிகேட்டதால்.
      (2:17)

12. அதோனியாவுக்கு துணை நின்ற குரு அபியத்தாரை சாலமோன்  எவ்வாறு
      தண்டித்தார்?

      அபியத்தார் ஆண்டவரின் குருவாய் இராதபடி சாலமோன் அவரை  விலக்கி
       விட்டார். (2:27)

13. யோவாபு எவ்வாறு தண்டிக்கப்பட்டார்?
      அவரைக் கொலை செய்தனர். (2:31)

14. படைத்தலைவனாக நியமிக்கப்பட்டது யார்?
       பேனாயா. (9:35)

15. சிமயி கொலை செய்யப்பட்டது ஏன்?
      சிமயி எருசலேமிலிருந்து காத்துக்கு போய்வந்ததால். (2:41)

16. சாலமோன் ஆண்டவரிடம் கேட்ட பரிசு என்ன?
      மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை, தீமை பகுத்தறியவும்  தேவையான
       ஞானம் நிறைந்த உள்ளத்தை தந்தருளுமாறு கேட்டார். (3:9)

17. ஆண்டவர் சாலமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தாரா?
      ஆம், இன்னும் அவர் கேளாத செல்வத்தையும், புகழையும்  கொடுத்தார். (3:13)
     
18. சாலமோன் அரசர் முன், ஒரு பிள்ளைக்காக வாதாடிய இரு  பெண்களுக்கு
       அவர் எவ்வாறு தீர்ப்பளித்தார்?

      குழந்தையை இரண்டாக வெட்டி ஒரு பாதியை ஒருத்தியிடமும்,   மற்றொரு
       பாதியை இன்னொருத்தியிடமும் கொடுங்கள் என்றார்.   (3:25)

19. குழந்தையின் உண்மையான தாய் கூறியது என்ன?
      உயிரோடு இருக்கும் குழந்தையைக் கொல்லாமல் மற்றவளிடமே 
      கொடுக்கும்படி கூறினாள். (3:26)

20. சாலமோனின் குரு யார்?
      சதோக்கின் மகன் அசரியா (4:3)

21. சாலமோனின் தலைமைச்செயலர் யார்?
      எலிகொரேபு, அகியா. (4:3)

22. சாலமோனுக்கு அமைச்சனாக இருந்தவர் யார்?
      யோசபாத்து (4:3)

23. சாலமோனின் படைத்தலைவன் யார்?
       பேனாயா. (4:4)

24. தலைமைக் கண்காணிப்பாளர் யார்?
     அசரியா. (4:5)

25. அரசரின் ஆலோசகர் யார்?
      சாபூது (4:5)

26. அரண்மனை மேற்பார்வையாளன் யார்?
      அகிசார்;. (4:6)

27. கட்டாய வேலைக்காரன் மேற்பார்வையாளன் யார்?
      அதோனிராம். (4:6)

28. சாலமோனிடமிருந்த குதிரை வீரர்கள் யார்?
      12,000 (4:26)

29. சாலமோன் உரைத்த நீதிமொழிகள் எத்தனை?
       3,000 (4:32)

30. சாலமோன் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை என்ன?
      1,005 (4:32)

31. தீர் மன்னன் ஈராமிடம் சாலமோன் கேட்டது என்ன?
      ஆலயம் கட்டியெழுப்ப கேதுரு மரங்களை வெட்டித்தருமாறு கேட்டார் (5:6)

32. மரத்திற்கு இணையாக சாலமோன் கொடுத்தது என்ன?
      20,000 கலம் கோதுமையும், 200 குடம் பிழிந்து வடிகட்டிய ஒலிவ் எண்ணெய்யும் 
      கொடுத்தார். (5:11)

33. சாலமோன் ஆலயம் கட்ட ஆரம்பித்தது எப்போது?
      இஸ்ராயேல் மக்கள் வெளியேறின நாநூற்று எண்பதாம் ஆண்டு.  (6:1)
      
34. ஆண்டவருக்கென கட்டிய இல்லத்தின் அளவு என்ன?
       நீளம் - 60 முழம்
       அகலம் - 20 முழம்
        உயரம் - 30 முழம் (6:2)

35. ஆலயம் முழுவதும் எவ்வகை பொருளால் மூடினார்?
      பொன்னால் அவர் ஆலயத்தை மூடினார். (6:22)

36. கோயிலைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் ஆயின?
       7 ஆண்டுகள் ஆயின. (6:38)

37. சாலமோனின் அரண்மனையைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் ஆயின?    
     13 வருடங்கள் ஆயின. (7:1)

38. சாலமோனுக்கு கட்டிட வேலையனைத்தையும் செய்து  கொடுத்தவர் யார்?    
      வெண்கல வேலையில் கைதேர்ந்தவரான தீர் அரசர் ஈராம். (7:14)

39. கோவில் கட்டி முடித்த பிறகு சாலமோன் என்ன செய்தார்?
      அவர் உடன்படிக்கைப் பேழையை திருக்கோவிலுக்கு கொண்டு  வந்தார் (8:1)  
     
40. உடன்படிக்கைப் பேழையில் என்ன இருந்தது?
      இரு கற்பலகைகள். (8:9)

41. கோவிலுக்குள் பேழை எடுத்துச் சென்ற பொழுது, கடவுளின் மாட்சி
       வெளிப்பட்டது எவ்வாறு?

       மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. (8:10)

42. சாலமோன் அரசரைப்பார்க்க வந்த அரசி யார்?
      சேபா நாட்டு அரசி (10:1)

43. சேபா நாட்டு அரசி சாலமோனுக்கு கொடுத்தது என்ன?
       அவர் ஏறத்தாழ 480 கிலோ (120 தாலந்து) பொன், நறுமணப் பொருட்கள். (10:10)
      
44. சாலமோனுக்கு இருந்த மொத்தத் தேர்கள் எத்தனை?
      1400 தேர்கள். (10:29)

45. சாலமோனுக்கு இத்தேர்களைச் செய்து கொடுத்தது யார்?
      எகிப்து நாட்டு மக்கள். (10:29)

46. சாலமோன் எவ்வகையான அயல்நாட்டுத் தொடர்பு வைத்திருந்தார்?     
      அவர் அயல் நாட்டுப் பெண் பார்வோனின் மகளை மணந்தார்.(11:1)

47. சாலமோன் மற்ற அயல்நாட்டுப் பெண்களையும் மணந்தாரா?
      ஆம், (11:1)

48. சாலமோன் செய்த பாவம் என்ன?
      சீதோனின் தேவதையான அஸ்தரேத்தையும், அம்மோனியரின்  அருவருப்பான
       மில்க்கோமையும் வழிபட்டார்;. (11:5)

49. ஆண்டவர் அவரை எவ்வாறு தண்டித்தார்?
     அவரது அரசை அவரிடமிருந்து பறித்து அவரின் பணியாளர்களிடம்
      கொடுத்தார். (11:11)

50. சாலமோன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது யார்?
      எரோபவாம். (11:26)

51. எரோபவாம் ஏன் அவ்வாறு செய்தார்?
      சாலமோனுக்கு அடுத்து இவர்தான் அரசர் என்று அகியா  இறைவாக்கினர்
       கூறியதால். (11:29)

52. சாலமோன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
      40 ஆண்டுகள் (11:42)

53. சாலமோனுக்குப்பிறகு யூதாவை ஆட்சி செய்தவர் யார்?
      அவர் மகன் ரெகபெயாம். (11:43)

54. ரெகபெயாம் அரசராக நியமித்த பிறகு எரோபவாம் எங்கே  ஓடினார்?     
      எகிப்திற்கு (12:2)

55. எரோபவாம் எகிப்திலிருந்து திரும்பியவுடன் மக்கள் என்ன செய்தனர்?      
      அவரை இஸ்ராயேல் நாடு முழுவதற்கும் அரசனாக்கினார். (12:20)

56. இறையடியார் செமாயாவுக்கு கடவுள் அருளிய வாக்கு என்ன?
      சாலமோனின் மகனும் யூதாவின் அரசனுமான ரெகபெயாமிடமும், யூதா,  
      பெஞ்யமின் வீட்டார் அனைவரிடமும்,  ஏனைய மக்களிடமும் போய்ச் சொல்:
       நீங்கள் படையெடுத்து   உங்கள் சகோதரரான இஸ்ராயேலரோடுபோரிடச் 
      செல்ல வேண்டாம். எல்லோரும் அவரவர் வீட்டுக்குத் திரும்புங்கள். இது
      நிகழ்வது என்னாலேயே. (12:23-24)

57. எரோபவாம் குடியிருந்தது எங்கே?
      ஏப்ராயிம் மலை நாட்டில் செக்கேமைக் கட்டியெழுப்பி அங்கு குடியிருந்தான். 
       (12:25)

58. எரோபவாம் செய்த பாவம் என்ன?
   அவன் பொன்னால் இரு கன்றுக்குட்டிகளைச் செய்தான்.அவற்றிற்கு பலிப்பீடமும் 
    செய்தான். (12:28)

59. எரொபவாமுக்கு அடுத்து இஸ்ராயேலை ஆட்சி செய்தவர் யார்?
     அவன் மகன் நாதாபு. (15:27)

60. நாதாபைக் கொலை செய்தது யார்?
      பாசா. (15:27)

61. ஏழுநாட்களே அரசாண்ட இஸ்ராயேல் அரசன் யார்?
      சிம்ரி. 16:15)

62. வரப்போகும் வரட்சியைப்பற்றி ஆகாபிடம் கூறியது யார்?
      எலியா. (17:1)

63. எலியா எங்கு வாழ்ந்து வந்தார்?
      கெரீத்து ஓடையருகில். (17:6)

64. எலியாவுக்கு உணவு கொடுத்தது யார்?
      காகங்கள் காலையிலும் மாலையிலும் அப்பமும் இறைச்சியும் அவருக்கு
       கொண்டு வந்தன. (17:6)

65. அங்கு ஓடை வற்றிப்போன பொழுது, ஆண்டவர் எலியாவை எங்கு
       செல்லுமாறு கூறினார்?

      சீதோன் பகுதியில் இருக்கும் சாரிபாத்துக்கு. (17:8)

66. சாரிபாத்தில் அவருக்கு உணவளித்தது யார்?
      ஒரு கைம்பெண். (17:9)

67. சாரிபாத்தின் கைம்பெண்ணுக்கு என்ன ஆனது?
      அவருடைய ஒரே மகன் இறந்தான். (17:17)

68. அதற்கு எலியா என்ன செய்தார்?
      சிறுவனுக்கு மீண்டும் உயிர் தந்தார். (17:22)

69. ஒபதியா என்பவர் யார்?
     அரண்மனைக் கண்காண்ப்பாளன் ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்.  (18:3)   

70. எலியா ஆகாபிடம் கூறியது என்ன?
    இப்போதே ஆள் அனுப்பி இஸ்ராயேல் மக்கள் அனைவரையும்  கார்மேல்
      மலையில் என் முன்னிலையில் ஒன்று திரட்டு என்றார்.   (18:9)

71. ஆண்டவரின் வல்லமையை எலியா எவ்வாறு நிருபித்தார்?
      ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிமலையையும்,   
      விறகுக்கட்டைகளையும், கற்களையும், மணலையும் , சுட்டெரித்து 
      வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தார். (18:38)

 
 

 சோதனை வேளை ஊக்குவித்தெம்மை சாதனை ஈட்டச் செய்தாய் - மனவேதனையாலே வெந்துள்ளம் சோர்ந்தோம்
வேளையில் உதவி தந்தாய் அம்மா!