பதுவைப் பதியரான புனித அந்தோனியார் மன்றாட்டு மாலை 2 ஆண்டவரே இரக்கமாயிரும்(2 கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2) ஆண்டவரே இரக்கமாயிரும்(2) கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும் பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா, எங்கள் மேல் இரக்கமாயிரும் புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறைவனுடைய புனித மாதாவே, கன்னியருள் உத்தம கன்னிகையே, புனித அந்தோனியாரே, பிரபுக்கள் குலத்தில் பிறந்த புனித அந்தோனி முனியோரே, லிஸ்போவா பட்டணத்தின் நூதன நட்சத்திரமாகப் பிறந்த புனித அந்தோனி முனியோரே, தாய் தந்தையரிடம் தர்ம நெறியைக் கற்றுக்கொண்ட புனித அந்தோனி முனியோரே, சிறுப்பந் தொட்டுச் சுகிர்த சீவியத்தை அனுசரித்த புனித அந்தோனி முனியோரே, பால வயதிற்றானே உலக வாழ்வை வெறுத்த புனித அந்தோனி முனியோரே, பரலோக சீவியத்தைச் சீவிக்க உலகத்தை வெறுத்த புனித அந்தோனி முனியோரே, பிதா மாதாவை விட்டுத் துறவற சபையில் உட்பட்ட புனித அந்தோனி முனியோரே, உற்றார் உறவினரை விட்டுவிலகச் சுயபட்டணத்தையுந் துறந்த புனித அந்தோனி முனியோரே, உலகத்தில் அறியப்படாதபடிக்கு முன்னிருந்த பெயரை மாற்றின புனித அந்தோனி முனியோரே, கிறிஸ்துவுக்காக மரிக்க புனித பிரான்சிஸ்குவின் சிறியோர் சபையில் சேர்ந்த புனித அந்தோனி முனியோரே, வேதசாட்சிகளுடைய முடியடையப் பிறதேசம் சென்ற புனித அந்தோனி முனியோரே, ஏகாந்திகளுடைய சீவியத்தைச் சீவிக்க வனவாசத்தில் வசித்த புனித அந்தோனி முனியோரே, மாசறியாதவராயிருந்தும் பிராயசித்த சீவியத்திற் சீவித்த புனித அந்தோனி முனியோரே, தியான நெறியில் இராப்பகல் சீவித்த புனித அந்தோனி முனியோரே, தேவ விசுவாசத்திற்கு தீபமான புனித அந்தோனி முனியோரே, தேவ நம்பிக்கையின் பாத்திரமான புனித அந்தோனி முனியோரே, தேவநேச அக்கினியின் சூளையான புனித அந்தோனி முனியோரே, பிறர் நேசத்தினாற் பிறதேசங்களிற் திரிந்த புனித அந்தோனி முனியோரே, தாழ்ச்சியை அனுசரித்துப் பாதாளமட்டுந் தாழ்ந்த புனித அந்தோனி முனியோரே, சிரவணத்தைப் பின்பற்றி எல்லோர்க்குங் கீழ்படிந்த புனித அந்தோனி முனியோரே, கன்னிசுத்தத்தை நேசித்துப் புஸ்பம்போல அதைக்காத்த புனித அந்தோனி முனியோரே, தயங்கி நடுநடுங்கு மட்டும் உபவாசங்களைக் காத்த புனித அந்தோனி முனியோரே, ஒறுத்தல் சீவியத்தைச் சீவித்துச் சகல சுகபோகங்களையும் வெறுத்த புனித அந்தோனி முனியோரே, பொறுமையை அநுசரித்துச் சகல விரோதங்களைச் சகித்த புனித அந்தோனி முனியோரே, சிலுவையின் வழியே எக்காலமும் நடந்த புனித அந்தோனி முனியோரே, வேத உண்மைகளை உபதேசித்து உடன்படிக்கையின் பெட்டகமென்று பெயர்பெற்ற புனித அந்தோனி முனியோரே, வேத விரோதிகளோடு தர்க்கித்துப் பதிதருடைய நித்திய சுத்தியலாய் எண்ணப்பட்ட புனித அந்தோனி முனியோரே, பிரசங்க விருத்தியைச் செய்து நவமான அப்போஸ்தலராக எண்ணப்பட்ட புனித அந்தோனி முனியோரே, வேத வாக்கியங்களை விருத்துரைத்து, நவமான மறைவல்லுனராக எண்ணப்பட்ட புனித அந்தோனி முனியோரே, மறைவான காரியங்களை வெளியாக்கிப் புதிய தீர்க்கதரிசியாக எண்ணப்பட்ட புனித அந்தோனி முனியோரே, நோயாளிகளுக்கு ஆரோக்கியங் கொடுக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, குருடருக்கு கண்பார்வையைக் கொடுக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, செவிடருக்கு கேள்வியைக் கொடுக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, திமிர்வாதத்தைச் சுகமாக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, சகலவித அங்கவீனரைக் குணமாக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, செத்தவர்களை உயிர்ப்பிக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, எல்லாராலும் மகிழ்ச்சியுடன் கேக்கப்பட வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, சகல கல்விமான்களாலும் ஆச்சரியத்துடன் கேட்கப்பட வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, தூர தலங்களிற் பிரசித்தமாக வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, ஒரு பாஷையிற் பிரசங்கம் பண்ணப் பல பாஷைகளில் கேட்கப்பட வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, பல தேசங்களில் ஒரே நேரத்தில் காணப்பட வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, நஞ்சை அமிர்த இரசமாக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, பிரசண்டக் காற்றை அமர்த்த வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, பிசாசுகளைத் துரத்த வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, துர்க்க மோகச் சோதனையினின்று இரட்சிக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, விரோதமான மனதுகளைச் சமாதானமாக்க வரமடைந்த புனித அந்தோனி முனியோரே, பல கள்வரை நேர்வழியே நடக்கச் செய்த புனித அந்தோனி முனியோரே, பலதாசருக்கு மீட்சியைக் கொடுத்த புனித அந்தோனி முனியோரே, பல கடனாளிகளை உத்தரிக்கச் செய்த புனித அந்தோனி முனியோரே, பிறர் பண்டங்களை உத்தரிக்கப்பண்ணுகிற புனித அந்தோனி முனியோரே, பல துஷ்டரைப் பிரத்தியட்சமாய்ப் பிராயச்சித்தக்கிரியைகளைச் செய்யப்பண்ணின புனித அந்தோனி முனியோரே, பல பதிதரை மனந்திருப்பின புனித அந்தோனி முனியோரே, சகலவித பாவிகளை பச்சாத்தாபத்திற்கு அழைத்த புனித அந்தோனி முனியோரே, உமது பிதாவை மரணத்தினின்று இரட்சித்த புனித அந்தோனி முனியோரே, திவ்விய பாலனை உமது கரங்களால் கட்டியணைக்கப் பாக்கியம் பெற்ற புனித அந்தோனி முனியோரே, உமது மரண காலத்தை ஏலவே அறியவும், அறிவிக்கவும் பாக்கியம் பெற்ற புனித அந்தோனி முனியோரே, கிறிஸ்துநாதரை மரணநேரத்திற் காணப் பாக்கியம் பெற்ற புனித அந்தோனி முனியோரே, அடைந்த மோட்ச மகிமையை மனிதருக்கு அறிவிக்கப் பாக்கியம் பெற்ற புனித அந்தோனி முனியோரே, மரித்த ஒரு வருஷத்துக்குள் திருப்பீடங்களில் வணங்கப்பட பாக்கியம் பெற்ற புனித அந்தோனி முனியோரே, உமது நாவில் ஒரு அழிவும் காணாதிருக்கப் பாக்கியம் பெற்ற புனித அந்தோனி முனியோரே, தேவ சந்நிதானத்தில் எங்கள் மத்தியஸ்தராய் இருக்கிறவரே, துக்கித்த மனதுகளைத் தேற்றுகிறவரே, படை பஞ்சங்களை விலக்குகிறவரே, வியாதி நோய்களை அகற்றுகிறவரே, புயற்காற்றுக்களை அமர்த்துகிறவரே, வெட்டைக்காலத்தில் நல்லமழை பெய்யச் செய்கிறவரே, காணாமற்போன பண்டங்களைக் காண்பிக்கிறவரே, சகல வித தேவைகளிலும் உதவி செய்கிறவரே, நாங்கள் உம்மை பின்செல்ல, நாங்கள் உமது சுகிர்தங்களை அனுபவிக்க, நாங்கள் உமது பெறுபேறுகளைத் துதிக்க, நாங்கள் சிலுவையின் வழியே நடக்க, நாங்கள் உலகத்தை வெறுத்து நடக்க, நாங்கள் பரலோகத்துக்கு ஏகத் தெண்டிக்க, நாங்கள் கிறிஸ்துநாதருக்குப் பிரியமானவர்களாயிருக்க, நாங்கள் மோட்ச மகிமையை அடைய, உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்களைப் பொறுத்தருளும் யேசுவே உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே மங்களம் மங்களம்! மங்களம்! அந்தோனி முனீந்திரனே! நீர் சிறுப்பந்தொட்டு தேவனை மட்டுந்தேட தாய் தந்தை உறவுற்றார் முதலான சகலரையுங் கைவிட அறிந்தீரே, நாங்கள் உலக நேசத்தை எங்கள் மனதினால் நீக்கி தேவபக்தியை மாத்திரம் மனதில் உட்படுத்த எங்களுக்காக மன்றாடியருளும். (ஒரு பர. அருள்) மங்களம்! மங்களம்! அந்தோனி முனீந்திரனே! சகல நீதிமான்களுள் நீதிமானும், புனிதர்களுள் புனிதருமாயிருக்கிற எங்கள் நாயகன் யேசுக்கிறிஸ்துவை பின்பற்றவும், நேசிக்கவும் நீர் அதிகமதிகமாய்ப் பிரயாசித்து அவருடைய நேசத்துக்காகச் சகல விரோதங்களையும், பிரயாசங்களையும் பட்டு அவருடைய திருவேதத்தை எல்லோருக்கும் படிப்பித்து, அவருடைய தூதர் துணைசெய்ய மோட்ச மண்டலங்களில் ஏறப் பாத்திரமானீரே, நாங்கள் எங்கள் அமிர்த யேசுவின் நேசத்துக்காக எங்கள் மனதின் துஸ்ட இச்சைகளை ஒறுத்து மோட்ச இராச்சியத்தில் உமது பெறுபேறுகளுக்குப் பங்காளராயிருக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்;.(ஒரு பர. அருள்) மங்களம்! மங்களம்! அந்தோனி முனீந்திரனே! நீர் பிறர் ஆத்தும நேசத்துக்காகப் பிறதேசங்களிற் திரிந்து திருவேத உண்மையை இடைவிடாமற் பிரசங்கித்து எண்ணிலடங்காத பாவிகளுடைய துட்டாட்டத்தை விலக்க அறிந்தீரே. நாங்கள் எங்கள் மனதினாற் பகை வன்ம வைராக்கியங்களை நீக்கி எங்களைப்போற் பிறத்தியாரையும் நேசிக்க எங்களுக்காக மன்றாடியருளும். (ஒரு பர. அருள்) மு:- யேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக. து:- புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபிப்போமாக எண்ணிலடங்காக் கிருபையுள்ள சருவேசுரா! தேவரீர் அந்தோனி முனீந்திரனைக்கொண்டு கணக்கற்ற அற்புதங்களைச் செய்து, எண்ணிறந்த பாவிகளுக்குத் தர்ம ஆசையும், பதிதருக்கு வேத வெளிச்சமும், தாசருக்கு மீட்சியும், நோயாளிகளுக்கு ஆரோக்கியமும் கொடுத்து எல்லோர்க்கும் மோட்ச வழியைக்காட்டச் சித்தமானீரே. அவருடைய அற்புதங்களைப்பற்றி ஆச்சரியப்படுகிற நாங்கள், அவருடைய புண்ணியங்களை அனுசரித்து தேவரீர் நீதிமான்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிற மோட்ச இராட்சியத்துக்குப் பேறுபெற்றவர்களாக அவருடைய சலுகையால் தயவு பண்ணியருளவேண்டுமென்று எங்கள் நாயகன் யேசுக்கிறிஸ்து பேரால் உம்மை மன்றாடுகிறோம் ஆமென். அர்ச். அந்தோனியாரைக் குறித்து பதின்மூன்று மன்றாட்டு 1. நீர் சாவை அகற்றுகிறீர். வார்த்தையால் மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, இப்போது மரண அவஸ்தையாய் இருக்கிறவர்களும், மரணத்தை அடைந்தவர்களுமான சகல விசுவாசிகளுக் காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி. 2. நீர் தப்பறையை ஒழிக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! சகல தப்பறைகளினின்றும் எங்களைக் காப்பாற்றி அர்ச். பாப்பான வருக்காகவும், திருச்சபைக்காகவும் வேண்டிக் கொள்ளும். பர. அருள். திரி. 3. நீர் ஆபத்துக்களை நீக்குகிறீர். அர்ச். அந்தோனியாரே! எங்கள் பாவங்களுக் குத் தக்க ஆக்கினையாகச் சர்வேசுரன் வரவிடுகிற பஞ்சம், படை, கொள்ளைநோய் முதலிய ஆபத்துக்களிலே நின்று எங்களைக் காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி. 4. நீர் குஷ்டரோகிகளைக் குணப்படுத்துகிறீர். அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்துமங் களைக் கறைப்படுத்துகிற சகல அசுசியான பாவங் களினின்றும் காப்பாற்றியருளும். பர. அருள். திரி. 5. உம்மைக் கண்டவுடன் பேய்கள் ஓடிப் போகின்றன. அர்ச். அந்தோனியாரே! பேய்களுக்குப் பயங்கரமானவரே, பேய்கள் செய்கிற சகல தந்திர சோதனைகளினின்றும் எங்களை விலக்கியருளும். பர. அருள். திரி. 6. நோயாளிகளைச் செளக்கியப்படுத்துகிறீர். அர்ச். அந்தோனியாரே! நோய் கொண்டு இருக்கிறவர்களையும் ஆத்துமத்திலும் சரீரத்திலும் வேதனை அனுபவிக்கிறவர்களையும் உமது மன்றாட்டின் உதவியால் குணப்படுத்தியருளும். பர. அருள். திரி. 7. உம் கட்டளைக்குக் கடல் அமைதியாகிறது. அர்ச். அந்தோனியாரே! பிரயாணம் செய்கிற சகலரையும் அவரவர்களின் ஸ்தலத்துக்குச் சுக மாய்க் கொண்டுபோய்ச் சேர்த்தருளும். ஆசாபாசத் தின் புயலில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகா மல் எங்களைத் தற்காத்து இரட்சித்தருளும். பர. அருள். திரி. 8. நீர் சிறைச்சாலையில் அடைபட்டவர்களின் விலங்குகளைத் தகர்க்கிறீர். அர்ச். அந்தோனியாரே! சிறையில் அடைபட் டிருக்கிற சகலருக்காகவும் மன்றாடும். பாவ அடிமைத்தனத்தினின்று எங்களை மீட்டு இரட்சித்தருளும். பர. அருள். திரி. 9. நீர் உயிரற்ற அவயவங்களுக்கு உயிரளிக்கிறீர். அர்ச். அந்தோனியாரே, நாங்கள் ஆத்துமத் திலும் சரீரத்திலும் பூரண சுகவாசிகளாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக அசுப்பில் வருகிற எவ்வித ஆபத்திலும் சிதைவு களிலும் முறிவுகளிலும் நின்று எங்களைக் காத்து இரட்சியும். பர. அருள். திரி. 10. நீர் காணாமற்போன சொத்தைத் திரும்பக் கண்டடையச் செய்கிறீர். அர்ச். அந்தோனியாரே! காணாமல் போன பொருட்களைக் கண்டடையச் செய்கிறவரே, நாங்கள் ஞானவிதமாகவும் இலெளகீக விதமாகவும் இழந்துபோன சகலத்தையும் நாங்கள் திரும்பக் கண்டடையச் செய்யும். பர. அருள். திரி. 11. உமது வேண்டுதலினால் சகல ஆபத்துகளும் விலகிப்போகின்றன. அர்ச். அந்தோனியாரே! எங்கள் ஆத்தும சரீரத் துக்கு வருகிற சகல ஆபத்துக்களினின்றும் எங்களைத் தற்காத்து இரட்சியும். பர. அருள்.திரி. 12. தாங்க முடியாத இக்கட்டுகள் ஒரு கணத்தில் உம்மால் நீங்கிப் போகின்றன. அர்ச். அந்தோனியாரே! தரித்திரத்தை நேசிக் கிறவரே, எங்களுடைய அவசரங்களிலே எங்க ளுக்கு உதவி புரிந்து வேலையும் போசனமு மின்றிக் கஷ்டப்படுகிறவர்கள் எல்லோருக்கும் ஒத்தாசை செய்தருளும். பர. அருள். திரி. 13. உமது வல்லமையைத் தெரிந்து கொண்டவர்கள் உம்மைத் தோத்தரிப்பார்களாக. அர்ச். அந்தோனியாரே! உமது வழியாக ஆண்டவர் எங்களுக்குச் செய்து வருகிற சகலவித நன்மைகளுக்காகவும். அவருக்குத் தோத்திரம் பண்ணுகிறோம். எங்களுடைய சீவியத்திலும் மரணத்திலும் உமது ஆதரவில் வைத்து எங்களைக் காப்பாற்ற வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம். பர. அருள். திரி. பிரார்த்திக்கக்கடவோம் இஸ்பானியா இராச்சியத்திற்கு நவநட்சத்திரமே! தரித்திரருடைய விலைமதிக்கப்படாத மாணிக்கமே! நிர்மல பரிசுத்தத்தின் உப்பரிகையே! தேவரீர் இத்தாலியா இராச்சியத்தின் தீபமுமாய், பட்சத்தின் அடையாளங்களுடனே பதுவைப்பதியின் பிரகாசமான சூரியனைப் போலே சத்தியங்களைப் போதித்தவருமாய் இருக்கிறீர். அர்ச். அந்தோனியாரே! நமது கர்த்தாவான சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக் குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்க எங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு, நாங்கள் கேட்கிற மன்றாட்டுக்களைப் பெற்றுக் கொள்ள அனுக்கிரகம் செய்தருளும். சர்வேசுரா சுவாமி! தேவரீரை வெளியரங்கமாய்த் துதிக்கிற உம்முடைய திருச்சபையானது ஞான உதவிகளினாலே அலங்கரிக்கப் பெற்று எங்கள் ஆதாரமாய் இருக்கிற சேசுக்கிறீஸ்துவின் நித்திய சந்தோஷங்களை அனுபவிக்கப் பெற்றதுமாய் இருக்கக் கடவது. ஆமென். |